மோடிக்கு சவால் விட்ட ராகுல்… தண்ணீர் குடித்த பிரதமர்

மக்களவையில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு நேரடி சவால் விடும் வகையில் பேசினார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தலையிடவில்லை என்று பிரதமர் மோடியால் சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பான விவாதத்தை விரிவாக காண்போம். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ” பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை இந்தியா துல்லியமாக தாக்கிய இந்த நடவடிக்கைக்கு முழுமையான ஆதரவை எங்களது கூட்டணியுடன் அமல்படுத்தினோம் என்றார். ஆனால், […]
பன்னீருக்கு ரோஷம் வந்திடுச்சு…. மோடிக்கு எதிர்ப்புக் குரல்

காலில் விழுந்து கெஞ்சாத குறையாக தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார் பன்னீர்செல்வம். என்னை விமானநிலையத்தில் சந்திக்க அனுமதி கொடுத்தால் அது ஒரு வரலாற்று சம்பவம் எனும் ரீதியில் மண்டியிட்டு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். ஆனால், அதனை மோடி ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அதிமுகவும் எடப்பாடி பழனிசாமியும் மட்டுமே தேவை என்பதில் உறுதியாக இருந்ததால், பன்னீரை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இந்நிலையில் மோடி வந்து சென்ற பிறகு பன்னீரின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு […]
அன்வர் ராஜாவுக்குப் பதில் இளைய மன்னர்…. இபிஎஸ் கணக்கு பலிக்குமா?

சமீபத்தில் ராம்நாட் ஏரியாவைச் சேர்ந்த அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார். இதற்கு பதிலடி தருவது போன்று முக்குலத்தோர் சமுதாயத்தின் ஒரு அடையாளமான ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி பெருந்தமிழர் எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் இணைக்கப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் அதிமுகவுக்கு பூஸ்ட் ஆக அமையுமா என்பது கேள்வியாக மாறியிருக்கிறது. ஏனென்றால், அரசியல் தெரிந்த அனைவருக்கும் அன்வர் ராஜா யார் என்று தெரியும். ஏன் அதிமுகவில் இருக்கும் அனைவருக்கும் அன்வர் ராஜாவை தெரியும்.. ராமநாதபுரம் […]
நெல்லை கவின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வாரா விஜய்..? சகல கட்சிகளும் கப்சிப்

போலீஸ் அராஜகத்தால் உயிர் இழந்த அஜித்குமார் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறிய நடிகர் விஜய், நெல்லையில் அநியாயமாக கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்துக்குச் சென்று ஆறுதல் கூற வேண்டும், அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கிவைக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். நெல்லையில் பட்டியலினத்தைச் சேர்ந்த கவின் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எந்த ஒரு அரசியல் தலைவரும் கண்டனம் தெரிவிக்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ இல்லை. ஏனென்றால், சமுதாய ஓட்டுக்களை இழக்க வேண்டியிருக்கும் என்பதாலே அமைதி காக்கிறார்கள். […]
மோடி மேடையில் திருமாவளவன்…. கூட்டணிக்குத் திருப்புமுனை?…. நயினாருக்கு புதிய சர்ச்சை

மோடியின் மேடையில் திருமாவளவன் நிற்பதைப் பார்த்ததும் அவர் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறப் போவது உறுதி என்று அதிமுகவினர் கொண்டாட்டம் போடுகிறார்கள். அந்த விழா மேடையில் எந்த பதவியிலும் இல்லாத நயினார் நாகேந்திரன் மேடை ஏறியது சர்ச்சையாகியுள்ளது. மோடியுடன் திருமாவளவன் மேடை ஏறியது குறித்து விடுதலை சிறுத்தைகள், ‘’சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம் சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது பிறந்த நாள் விழாவில் இந்திய ஒன்றிய தலைமை அமைச்சர் என்ற முறையில் திரு.நரேந்திர மோடி அவர்கள் […]
குற்றவாளிக் கூண்டில் நீதிபதி…. என்னங்க சார் உங்க சட்டம்..?

இப்போது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஜி.ஆர்.சாமிநாதன் சம்மன் கொடுத்து கேள்வி எழுப்பிய விவகாரம்தான். என்ன நடந்தது என்று விவரமறிந்தவகளிடம் கேட்டொம். இது குறித்து பேசுபவர்கள், ‘’ஒரு ஹைகோர்ட் ஜட்ஜ் பற்றி சுப்ரீம் கோர்ட்டில் ரகசியமாக புகார் அளிப்பது வக்கீலுக்கு நம் நாட்டின் சட்டம் கொடுத்த உரிமை. இதை பயன்படுத்தித்தான் சென்ற மாதம் ஒரு ஹை கோர்ட் ஜட்ஜ் பற்றி ரகசிய புகார் அளித்துள்ளார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். ஆனால்… சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பப்பட்ட அந்த […]
அன்புமணி நடை பயணத்துக்கு ராமதாஸ், திருமாவால் ஆபத்து..? உஷாரய்யா உஷாரு

வட தமிழகத்தில் 100 நாட்களுக்கான நடைபயணத்தைத் தொடங்கிய அன்புமணி விவகாரம் எக்கச்சக்க புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது. பா.ம.க. நிறுவனர் ராமதாசின் எதிர்ப்பையும் மீறி அவரது பிறந்த நாளில் “உரிமை மீட்க, தலைமுறை காக்க” நடைபயணத்தை தொடங்கியிருப்பதால், சிக்கல் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்று காவல் துறை அலர்ட் செய்யப்பட்டுள்ளது. இன்று திருப்போரூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நடைபயணத்தை தொடங்கினார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற தலைப்பில் இன்று தொடங்கி […]
சேரன் சினிமாவில் டாக்டர் ராமதாஸ் அன்புமணிக்கு ஃபைனல் வார்னிங்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று 87ம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி லோக்கல் லீடர் வரை நிறைய பேர் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இன்று அன்புமணி நேரில் வந்து சரண் அடையவில்லை என்றால் சட்ட நடவடிக்கை தீவிரம் அடையும் என்று வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று பாமக ராமதாஸ்க்கு அண்ணாமலை, ‘’40 ஆண்டுகளுக்கும் மேலாக , தமிழகத்தின் நலனுக்காகவும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் உரிமைகளுக்காகவும் அயராது உழைத்து […]
ஏமாத்திட்டாரே விஜய்… சீக்ரட் ஆலோசனை… சுற்றுப்பயணம் கேன்சல்..?

எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து அன்புமணி பயணம் செய்கிறார். அதேபோல் பிரேமலதாவும் பயணத்தைத் தொடங்குகிறார். இதையடுத்து விஜய் போட்டிருந்த சுற்றுப்பயணம் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வேறு என்ன செய்யலாம் என்ற ஆலோசனை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் மேலாண்மை அலுவலகத்தில் மாநாடு பணிகள், வாக்குச்சாவடி முகவர்களுக்கான செயலி உள்ளிட்டவற்றை நேற்று ஆய்வு செய்திருக்கிறார். இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, துணைப் பொதுச்செயலாளர் […]
ஓபிஎஸ் தலையெழுத்தை மாற்றுவாரா மோடி..? புதிய கட்சிக்கு ரெடி

திமுகவை எதிர்க்கும் அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்று உரக்க குரல் கொடுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் என்றால் மட்டும் எட்டிக்காயாக கசக்கிறது. அதிமுகவில் இணைப்பு அல்லது புதிய கட்சி என்பதற்கு மோடி வருகை விடை கொடுத்துவிடும் என்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நாளை தமிழகத்திற்கு வருகிறார். தற்போது இங்கிலாந்தில் இருக்கும் பிரதமர், அங்கிருந்து மாலத்தீவுக்கு செல்கிறார். இந்த பயணத்தை முடித்துக்கொண்டு 26ஆம் தேதி இரவு தூத்துக்குடிக்கு வருகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெறும் […]

