News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சாதாரண மழைக்கே சென்னை இப்படி ஆகிவிட்டது! எடப்பாடி குற்றச்சாட்டு!

சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது என்று தி.மு.க. அரசை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளதால் பொது மக்கள் […]

கனமழை எதிரொலி! களப்பணியில் அமைச்சர்கள்!

சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்துவரும் நிலையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மற்றும் திருவள்ளூர் புழல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மழைநீர் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த […]

தெலுங்கானா தேர்தல்! திரண்டு வந்து வாக்களித்த திரையுலகம்!

இன்று நடைபெற்று வரும் தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் திரையுலகமே திரண்டு வந்து வாக்குப்பதிவு செய்து தங்கள் ஜனநாயகக் கடமையாற்றினர்.   199 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் நேற்று முன்தினத்துடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று (நவ.29) காலை முதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டது.   இந்நிலையில் இன்று காலை முன்னதாக வாக்குச்சாவடி அதிகாரிகள், முகவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி எந்திரங்கள் சரியாக […]

சென்னை சர்வதேச திரைப்பட விழா! தேர்வான தமிழ் திரைப்படங்கள்!

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று (நவ.30) காலை 11 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தென்னிந்திய பிலிம் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குனர் மோகன்ராஜ், நடிகரும் இயக்குனருமான யூகிசேது, இயக்குனர் பக்கிரிசாமி, ஜெகன் விஜய், கிருபாகர், சந்திரமோகன், பி.எஸ்.வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வருகிற டிசம்பர் மாதம் 14ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்த […]

வெள்ளக்காடாக மாறிய சென்னை! பொதுமக்கள் அவதி!

கடந்த சில  நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளதால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் அவதியடைந்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு அதிகரித்துள்ளதால் சென்னை, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, புறநகர் பகுதிகள் மற்றும் திருவள்ளூர் […]

ரூ.2,000 பொங்கல் பரிசு! அமைச்சர் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!

வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடை மூலம் ரூ.2 ஆயிரம் கொடுப்பதற்காக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூட்டத்தில் தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஒவ்வொரு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் ரேஷன் கடைகளின் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகை, கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.   அ.தி.மு.க. தனது இறுதிகட்ட ஆட்சியில் பொங்கல் பண்டிகையின் போது ரூ.2,500 பொங்கல் பரிசாக வழங்கியது. அது […]

கல்லூரி பேருந்து கவிழ்ந்து 21 மாணவர்கள் காயம்! பரபரப்பு தகவல்கள்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கல்லூரி பேருந்து கவிழ்ந்து 21 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த துடுப்பதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இக்கல்லூரி மாணவர்களை பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து சென்று கொண்டு விட கல்லூரி பேருந்து தினந்தோறும் செயல்பட்டு வருகிறது.   இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் கல்லூரி பேருந்து மாணவர்களை அழைத்துக் கொண்டு கல்லூரியை நோக்கி சென்று கொண்டிருந்தது. […]

தெலுங்கானாவில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து வருகிறது! தலைமை தேர்தல் அதிகாரி!

தெலுங்கானாவில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாகவும் அமைதியான முறையிலும் நடந்து வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 199 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் நேற்று முன்தினத்துடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று (நவ.29) காலை முதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முன்னதாக வாக்குச்சாவடி அதிகாரிகள், முகவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி எந்திரங்கள் சரியாக […]

வெள்ள அபாய எச்சரிக்கை! அச்சத்தில் சென்னை, திருவள்ளூர் மக்கள்!

தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து அடைமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன் இன்று காலை நிலவரப்படி 24 அடி உயரம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது 22.53 அடி உயரத்திற்கு […]

உடல்நிலையில் திடீர் பின்னடைவு! விஜயகாந்த் குடும்பத்தினருடன் மருத்துவர்கள் ஆலோசனை!

தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவரது குடும்பத்தாருடன் மருத்துவர்கள் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.   சென்னை நந்தனத்தின் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த 18ம் தேதி தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் சளி, இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சரியாக இருப்பதால் இன்னும் ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் […]