ரூ.47 ஆயிரத்தை கடந்த தங்கத்தின் விலை! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.47 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் மற்றும் தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்கள் அதன் விலை குறைவுக்காக காத்திருப்பது வழக்கம்தான். ஆனால் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இதேநிலைதான் தற்போது டிசம்பர் மாதத்திலும் இருந்து வருகிறது. அதன்படி சென்னையில் இன்று (டிச.2) ஆபரண தங்கத்தின் விலை […]
அதிரடியாக குறைந்த ஆவின் நெய் விலை! எவ்வளவு தெரியுமா?

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு ஆவின் நெய்யின் விலை லிட்டருக்கு ரூ.50 குறைக்கப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆவின் நிர்வாக தயாரிப்பு பொருட்கள் பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால், தயிர், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களை பொது மக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆவின் நெய்யின் விலை லிட்டருக்கு ரூ.50 குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் […]
தமிழகம் முழுவதும் 2,000 மருத்துவ முகாம்கள்! முக்கிய தகவல்கள்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பொது மக்கள் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டு வருவதால் இன்று 2,000 இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கன மழை கொட்டி வருகிறது. மேலும் டிசம்பர் 4ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று சொல்லப்படும் நிலையில், பொது மக்கள் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மழைகால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சார்பில் அறிக்கை […]
இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்! காசாவில் பதற்றம்!

தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், இஸ்ரேல் இன்று மீண்டும் காசா மீது கடுமையான தாக்குதலை தொடங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடங்கிய இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போரில் பல்லாயிரம் உயிர்கள் பறிபோனது. ஐ.நா. அமைப்பின் தீர்மானத்தையும், பல்வேறு நாடுகளின் கோரிக்கைகளையும் நிராகரித்த இஸ்ரேல், காசா மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில்,அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்ற அதிர்ச்சி தகவலை […]
நியூ லுக்கில் விஜய்சேதுபதி! ‘ட்ரெய்ன்’ படப்பிடிப்பு தொடங்கியது!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் ‘ட்ரெய்ன்’ படத்திற்கான படப்பூஜை இன்று நடைபெற்றது. இதில் விஜய்சேதுபதி அடையாளம் தெரியாத அளவுக்கு நியூலுக்கில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். கதாநாயகன், வில்லன் என பல்வேறு கதாபாத்திரங்களில் மிரட்டி வரும் விஜய்சேதுபதியின் மார்க்கெட் ஜவான் திரைப்படத்திற்கு பிறகு அதிகரித்துள்ளது. இருப்பினும் வில்லன் கதாபாத்திரத்தில் நிறைய காட்சிகள் கத்திரிக்கப்படுகின்றன என்றும் கதாநாயகனை விட வில்லன் குறைந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற நிலை உள்ளது என்று கூறிய அவர், இனி […]
கலைஞர் எதையும் தைரியமாக எதிர்கொள்வார்- கனிமொழி எம்.பி. பேச்சு!

தி.மு.க. மகளிர் அணி சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற ‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டியின் மண்டல அளவிலான இரண்டாம் கட்ட நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி எம்.பி. தலைமையில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டைக் கொண்டாடும் இன்று (டிச1.) திமுக மகளிர் அணி சார்பில் ‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டியின் மண்டல அளவிலான இரண்டாம் கட்ட போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. வினாடி வினா […]
திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி கைது! பரபரப்பு தகவல்கள்!

அமலாக்கத்துறை அதிகாரி ரூ.20 லட்சம் பணத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அவரிடம் மாவட்ட எஸ்.பி. தீவிர விசாரணை நடத்தி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்றதாக, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியது. அதே போல் ஒரு சம்பவம் தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது நிகழ்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மருத்துவர் ஒருவர் மீது […]
ஞானவேல் ராஜா ஒரு களவாணிப்பய! சொன்னது யார் தெரியுமா?

இயக்குனர் அமீருக்கு ஆதரவாக, ‘‘ஞானவேல் ராஜா ஒரு களவாணிப்பய’’ என்று இயக்குனர் கரு.பழனியப்பன் பகிரங்கமாக குற்றம்சாட்டிய சம்பவம் தமிழ்த் திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் மீது ஞானவேல் ராஜா குற்றச்சாட்டை முன்வைத்துவிட்டு, பின்னர் அமீர் எனக்கு அண்ணன் போன்றவர். அவரது குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகி வருபவன். அவரை நான் அண்ணன் என்றுதான் அழைப்பேன். என் மீது குற்றம்சாட்டப்பட்டதால்தான் நான் சில வார்த்தைகளை பயன்படுத்தினேன். அது அமீர் அண்ணனின் மனதை புண்படுத்தியிருந்தால், நான் மனப்பூர்வமாக மன்னிப்புக் […]
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுக! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள்!

பாளையங்கோட்டை சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருக்கும் ஆறுமுகத்தை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சங்கக் கூட்டத்தில், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று (டிச.1) காலை 11 மணியளவில் நடைபெற்றது. இது குறித்து செய்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பாளையங்கோட்டை சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள ஆறுமுகத்தை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், மேல்பா சிப்காட் மற்றும் பரந்தூர் விமான நிலையம் […]
12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை!

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் இது வருகிற 3ம் தேதி (நாளை மறுநாள்) வங்கக்கடலில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் அந்த புயலுக்கு ‘மிக்ஜம்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் […]

