அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம்… உதயநிதி பாய்ச்சலுக்கு பா.ஜ.க. ரெய்டு மிரட்டல்

சனாதனம் பேசி பா.ஜ.க. மட்டுமின்றி காங்கிரஸ் தலைவர்களையும் அலறவிட்ட உதயநிதி, அடுத்தபடியாக மத்திய அமைச்சருக்குப் பதிலடியாக அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம் என்று பேசியிருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க.வின் எடப்பாடி தி.மு.க. அரசை விமர்சனம் செய்ததும், மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து பணம் வாங்கித்தருவதற்கு எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்ய வேண்டும் என்று பேசினார் உதயநிதி. அதேபாணியில் இப்போது மத்திய அமைச்சருக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார். மிக்ஜாம் புயல் இடைக்கால நிவாரண […]
மிக்ஜாம் புயல் பேரிடர்! சென்னை புளியந்தோப்பில் ஒன்றியக்குழு ஆய்வு!

மிக்ஜாம் புயல் பேரிடர்! சென்னை புளியந்தோப்பில் ஒன்றியக்குழு ஆய்வு! மிக்ஜாம் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையிலான 6 பேர் கொண்ட ஒன்றியக்குழு சென்னை வந்துள்ளது. இக்குழுவினர் சென்னை புளியந்தோப்பு, திரு.வி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று சேதங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இக்குழுவில் இவருடன் திமான் சிங், […]
சிக்ஸர் சிங்கிற்கு ஜே போடுங்க…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளில் இன்னொரு பிரபலமும் பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவர்தான், ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்து அசத்திய யுவராஜ் சிங். 2007ம் ஆண்டு செப்டம்பர் 19. இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்குமான டி20 கிரிக்கெட் போட்டி நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய இந்தியா 16வது ஓவரில் தடுமாறிக் கொண்டிருந்தது. நம்பிக்கை நாயகன் தோனியும் அன்று அவ்வளவு சிறப்பாய் ஆடவில்லை. அந்த இக்கட்டான நேரத்தில்தான், யுவராஜ் சிங் களத்தில் இறங்கினார். அன்று யுவராஜ் […]
மிக்ஜாம் புயல் நிவாரணப்பணி! கடல்சார் வாரிய நிதியிலிருக்கு ரூ.2 கோடி!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உலுக்கி எடுத்த மிக்ஜாம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (டிச.12) பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் […]
கலைஞர் நூற்றாண்டு விழா! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு!

தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெற உள்ள ‘‘கலைஞர் 100’’ விழாவை முன்னிட்டு நடிகர் விஜய்க்கு, தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நேரில் சென்று அழைப்புவிடுத்துள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க.தலைவருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் திரையுலகினர் ‘‘கலைஞர் 100’’ விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதன்படி டிசம்பர் 24ம் தேதி சென்னை சேப்பக்கத்தில் கலைஞர் 100 விழா நடைபெறும் என்று நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் மிக்ஜாம் புயலால் விழா […]
சுகாதாத் துறை ஐ.சி.யு.வில் இருக்கிறது! அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் இறந்த உடல் அட்டை பெட்டியில் வைத்து கொடுக்கப்பட்ட சம்பவம் குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அரிசி, மளிகை பொருட்கள், நேப்கின் உள்ளிட்ட 18 வகையான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் சென்னை கோட்டூர்புரத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்சியில் தென்சென்னை […]
விஜயகாந்த்தை வைச்சு அரசியல் வியாபாரம் தொடங்குகிறாரா பிரேமலதா..?

வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றதாகக் கூறப்பட்ட விஜயகாந்த் உடல்நிலை திடீரென சிக்கலானது. இதையடுத்து ஒட்டுமொத்த தமிழக மக்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். முக்கிய பிரமுகர்கள் மருத்துவமனைக்கே சென்று பார்த்து வந்தார்கள். விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டும் என்று அத்தனை பேரும் பிரார்த்தனை செய்தார்கள். ஒருவழியாக இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் விஜயகாந்த் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்குத் திரும்பினார். விஜயகாந்த் பூரண நலம் அடைந்துவிட்டார் என்று மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பு, அவரது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் கொஞ்சம் நிம்மதி கொடுத்தது. ஆனால், அதற்குள்ளாக […]
நீர்வழித்தடங்களில் வெள்ள பாதிப்புகள்! அமைச்சர் துரைமுருகன் ஆய்வுக்கூட்டம்!

மிக்ஜாம் புயல் பேரிடர் காரணமாக நீர்வழித்தடங்களில் ஏற்பப்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அரசு உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று (டிச.11) நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நீரில் மூழ்கின. வீடுகளில் வெள்ள நீர் புகுந்து பெரும் அவதிக்குள்ளானார்கள். […]
ஷபீருக்கு அடுத்து சிக்கிட்டாருய்யா ஆவுடையப்பன்… எல்லை மீறும் தி.மு.க.

சென்னையைப் புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயலில் தி.மு.க.வினர் முந்தைய ஜெயலலிதா போன்று செயல்படவில்லை என்று விமர்சனம் செய்த பத்திரிகையாளர்களை தி.மு.க. ஆதரவு உடன்பிறப்புகள் புரட்டிபுரட்டி அடித்துவருகிறார்கள். மழை வெள்ளப் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், பல்வேறு பத்திரிகையாளர்களும், மீடியாக்காரர்களும் தி.மு.க. அரசை குறைகூறத் தொடங்கினார்கள். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், மேயர் ஆகியோர் பம்பரமாக சுழன்றபோதும், தி.மு.க.வை விமர்சனம் செய்பவர்களை எல்லாமே எதிரிகள் என்ற கண்ணோட்டத்தில் தி.மு.க. ஆதரவாளர்கள் விமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டனர். இதையடுத்து நியூஸ் மினிட் தன்யா […]
போர் எப்போது முடியும்? இஸ்ரேல் ராணுவ மந்திரி கொடுத்த விளக்கம்!

எங்களுடைய இலக்கை அடைந்த பின்னர் போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேல் ராணுவ மந்திரி யோவ் காலன்ட் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில் 1,200 இஸ்ரேலியர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம், காசா மீது தாக்குதல் நடத்தியது. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் போரின் காரணமாக இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. […]

