வீடு தேடிச்சென்று மூத்த குடிமக்களுக்கு உதவும் போலீஸ் – சந்தீப் ராய் ரத்தோர் பலே திட்டம்

வாரம் தோறும் பொதுமக்கள் குறை தீர் முகாமில் பெறப்படும் புகார் மனுக்கள் மீது விரைந்து விசாரணையும் நடவடிக்கையும் எடுக்குமாறு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக மூத்த குடிமக்களை காவல் நிலையத்திற்கு அலைய வைக்காமல், அவர்கள் வீட்டுக்கே நேரில் சென்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த வகையில் இன்றைய தினம் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் பெறப்பட்ட மூத்த குடிமக்களின் புகார் மனுக்கள் மீது விரைந்து […]
அமைச்சர் சக்கரபாணி தலைமையில் உணவுத்துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம்!

அமைச்சர் சக்கரபாணி தலைமையிலான உணவுத்துறை அலுவலர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்தும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் துறைசார்ந்த ஆலோசனைக் கூட்டங்களை அமைச்சர்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று (டிச.13) உணவு மற்றும் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் உணவுத்துறை அலுவலர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் […]
மிக்ஜாம் புயல் பாதிப்பு! காஞ்சிபுரத்தில் நெற்பயிர்களை ஆய்வு செய்த ஒன்றிய குழு!

காஞ்சிபுரத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வங்கக்கடலில் கடந்த 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மத்திய அரசு சார்பில் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒன்றியக்குழு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு வெள்ள சேதத்தை பார்வையிட்டு […]
தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும்! கேரளா உறுதி!

தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பும் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள தலைமை செயலாளர் உறுதியளித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வரும் நிலையில், பல மணிநேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசித்து வரும் தமிழக பக்தர்கள் 6 கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி கேரள ஐகோர்ட்டுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். அதில் நிலக்கல் முதல் பம்பை வரையிலான பகுதிகளில் பக்தர்கள் போலீசாரின் உதவியுடன் பேருந்துகளில் […]
மிக்ஜாம் புயல்: மின் வாரியத்தின் புதிய அறிவிப்பு!

மிக்ஜாம் புயல் பேரிடர் காரணமாக பெருமழை வெள்ளத்தில் மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் கடந்த அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின்கட்டணம் வசூல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மிக்ஜாம் புயல் காரணமாக பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதில் சென்னைதான் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. காட்டாற்று வெள்ளம் போல் தெருக்களில் ஓடிய மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப்போட்டது. மேலும் பொதுமக்களின் வாகனங்கள், […]
மிக்ஜாம் புயல் பேரிடர்! பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை, எழுதுகோல் வினியோகம்!

எஸ்.எஸ்.எஸ். கர சேவை அறக்கட்டளையின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் எழுதிப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. சென்னையில் மிக்ஜாம் புயல் பெருமழை வெள்ளத்தின் காரணமாக பொதுமக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வரலாறு காணாத பெருமழை பொழியும் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் பெரியளவில் சேதத்தை விளைவித்தது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகளின் புத்தகப்பை மற்றும் எழுதுப்பொருட்கள் உள்ளிட்டவை நாசமானதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எஸ். கர சேவை […]
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்! அமைச்சர் உதயநிதி ரூ.1.77 கோடி நிதி!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்காக ரூ.1.77 கோடி நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போட்டியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்கினார். தமிழக அரசு விளையாட்டுத்துறை மற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மேலும் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி அவர்களை கவுரவப்படுத்தி வருகிறது. மேலும் விளையாட்டுத்துறை சம்பந்தப்பட்ட அனைத்து புதிய அறிவிப்புகளையும் தமிழக அரசு […]
வழிக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி! முதலமைச்சரை சந்தித்து பேச அழைப்பு!

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேச அழைப்பு விடுத்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதப்படுத்தி வருகிறார் என்று குற்றம்சாட்டப்பட்டது. மேலும் தமிழக அரசுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையில் சுமூகமான உறவு இல்லை. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மீது வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆர்.என்.ரவி தன்னிடம் […]
ஆரோவில் 65வது நிர்வாகக்குழு கூட்டம்! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு!

ஆரோவில் அமைப்பின் 65வது நிர்வாகக்குழுக் கூட்டம் ஆரோவில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். ஆரோவில் நிர்வாக அலுவலகத்தில் நேற்று (டிச.12) ஆரோவில் அமைப்பின் 65 ஆவது நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநரும் ஆரோவில் நிர்வாக குழுத் தலைவருமான ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், ஆரோவில் அமைப்பின் செயலர் ஜெயந்தி ரவி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் […]
டிச.16ம் தேதி சென்னையில் பன்னிரு திருமுறை திருவிழா! மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்பு!

சென்னையில் முதல் முறையாக பன்னிரு திருமுறை திருவிழா மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருமண விழா ஐ.எம்.பி.ஏ. ஏற்பாட்டில் வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் 10 ஆதீனங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது ஐ.எம்.பி.ஏ. அமைப்பின் ஏற்பாட்டில் வருகிற 16ம் தேதி சென்னையில் முதல்முறையாக பன்னிரு […]

