மிக்ஜாம் புயல் பேரிடர்: ரூ.1.25 கோடி வழங்கிய சிம்சன் குழுமம்!

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சிம்சன் குழுமத்தின் சார்பில் ரூ.1.25 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உலுக்கி எடுத்த மிக்ஜாம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர், மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக காசோலைகளை […]
போஸ் கொடுக்க வரவில்லை! மக்களை பார்த்து கண் கலங்கிய டி.ராஜேந்தர்!

அகில இந்திய சிலம்பரசன் டி.ஆர். ரசிகர் மன்றம் சார்பாக மிக்ஜாம் புயல் மழை தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் வழங்கினார். வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த (டிசம்பர்) 3 மற்றும்4 ஆகிய தேதிகளில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டது. தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து பல்வேறு சேதங்கள் ஏற்படுத்தியது. மழைநீரில் வீட்டு […]
தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்! அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக உள்துறை முதன்மை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சமய்சிங் மீனா ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளராக பிரதீப் ஐ.பிஎஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் திண்டுக்கல் எஸ்.பி.யாக பணியாற்றி வந்தார். டான்ஜெட்கோ ஊழல் தடுப்பு ஐ.ஜி.யாக பிரமோத் […]
விஜயகாந்த் முன்னிலையில் பிரேமலதா தே.மு.தி.க. பொதுச்செயலாளர் ஆனார்!

தே.மு.தி.க. தலைவர் முன்னிலையில், பிரேமலதா அக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவேற்காட்டில் தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று (டிச.14) நடைபெற்றது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய தே.மு.தி.க. தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் கலந்து கொண்டார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய விஜயகாந்த் கலந்து கொள்ளும் முதல் செயற்குழு இதுவாகும். விஜயகாந்தை பார்த்த தொண்டர்கள் கரவொலி எழுப்பியும், பெண் நிர்வாகிகள் கண்ணீர் விட்டு அழுதும் தங்கள் மகிழ்ச்சியை […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய குழுவினர் சந்திப்பு!

மிக்ஜாம் புயல் மழை சேதங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசால் அனுப்பப்பட்ட குழுவினர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 3,4 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. பொதுமக்களின் வீடுகளுக்கள் வெள்ளநீர் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது. புதில் பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள மத்திய குழுவினர் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய […]
ஓசூரில் எடப்பாடி பழனிசாமியை அடித்து, துவைத்து, தொங்கப்போட்ட ஓபிஎஸ்..!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடியை ஏர்போர்ட்டில் சந்தித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம் இப்போது முன்னிலும் வேகமாக எடப்பாடி பழனிசாமியை தாக்கிப் பேசத் தொடங்கியிருக்கிறார். அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கழக ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ். பேசியதில் அனல் தெறித்தது. ’’தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட நம் கழகத்தில் தொண்டர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும் என்று சட்ட விதிகளை உருவாக்கினார் புரட்சித் தலைவர். புரட்சித் தலைவி அம்மா அவர்களும் அந்த விதிகளை பின்பற்றினார். ஆனால் இப்பொழுது […]
விஜய் மக்கள் இயக்கம்! சென்னையில் 25 மருத்துவ முகாம்கள்!

சென்னையில் 25 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செயல்பட்டு வரும் மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். அதன் முதல் படியாக கடந்த பொதுத்தேர்வில் அதிகளவில் மதிப்பெண் வாங்கிய மாணவ, மாணவிகளை தொகுதி வாரியாக தேர்வு செய்து அவர்களுக்கு விழா எடுத்து உதவித்தொகை வழங்கினார். அதைத்தொடர்ந்து கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் […]
ஒரு வாரத்திற்குள் நிவாரணத் தொகை! முக்கிய அறிவிப்பு!

நிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் ஒரு வாரத்திற்குள் வழங்கப்பட்டுவிடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. பொது மக்களின் வீடுகளுக்குள் புகுந்த மழைவெள்ள நீர் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும் வீட்டு உபயோகப் பொருட்கள், சான்றிதழ்கள், பள்ளி புத்தகங்கள் என பொருட்கள் நாசமானது. இதைத்தொடர்ந்து மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரம் […]
இளையராஜா பிரிவு பற்றி வைரமுத்து என்ன சொல்கிறார் தெரியுமா..?

சினிமா இசை ரசிகர்களுக்கு ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு பிரிவு என்றால், அது இளையாராவும் வைரமுத்துவும் உறவை முறித்துக்கொண்ட நிகழ்வுதான். இதுகுறித்து இரண்டு பேரும் அதிகம் வெளிப்படையாகப் பேசுவதில்லை. ஆனால், ஏ.ஆர்.ரகுமானுடன் பணியாற்ற நேரந்த அனுபவம் குறித்து பேச நேர்கையில் இளையராஜா குறித்தும் பேசியிருக்கிறார் வைரமுத்து. அவர் என்ன பேசியிருக்கிறார் என்று கேளுங்கள். இளையாராஜாவுடன் பணியாற்றிய முதல் ஆறாண்டு காலத்தை என்னால் மறக்கமுடியவில்லை. நெஞ்செல்லாம் நுரைகட்டிக் கிடந்த காலமது. வெற்றிபெற வேண்டுமென்ற வேட்கை உடம்பையும் மனதையும் உலுக்கிய காலமது. […]
நாடாளுமன்றத்தில் கலர் குண்டு… அமித் ஷா பதவி விலக எதிர்க்கட்சிகள் ஆவேசம்

சர்வாதிகாரத்திற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தும், பாரத மாதாவுக்கு ஜே போட்டும் கலகக்காரர்கள் புதிய நாடாளுமன்றத்தில் நுழைந்து கலர் கலராக புகை குண்டுகள் வீசியிருப்பது நாடு முழுக்கவே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2001ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலின் நினைவு நாளான டிசம்பர் 13ம் தேதியன்று மீண்டும் அதேபோன்று ஒரு நிகழ்வு நடந்திருப்பது, நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை கேலிக்குரியதாக்கியிருக்கிறது. பார்வையாளர் கேலரியில் சாகர் ஷர்மா, மனோரஞ்சன் ஆகிய இருவரும் அவைக்குள் குதித்து கபடி விளையாடியது போன்று ஒவ்வொரு மேஜையாகத் […]

