News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

எஸ்.ஐ.ஆர்.க்கு தீயைத் தூண்டிவிடும் விஜய்… அரசு ஊழியர்களுடன் மல்லுக்கட்டு..?

எஸ்.ஐ.ஆர்.க்கு எதிர்ப்பாக திமுக தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறது என்றாலும் அதேநேரம் களத்திலும் தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் (SIR) குறித்து வெளியிட்டுள்ள ஒரு வீடியோ, தமிழக அரசியல் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. SIR எப்படிப்பட்ட மோசடி என்று விளக்கும் வகையில் தேர்தல் ஆணையத்துக்கு ஆறு பக்க கடிதம் எழுதினார். அதோடு மக்கள் மன்றத்தில் இந்த மோசடியை விவரிக்க மாவட்ட தலைநகரங்களில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.  9 நிமிட […]

பீகார் தேர்தலுக்கு ராகுல் ரியாக்‌ஷன்..? தேர்தல் ஆணையத்தின் வெற்றி..?

கருத்துக்கணிப்புகள் எல்லாமே பொய் என்பது பீகார் தேர்தலில் அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது. யாருமே சொல்லாத வகையில் பாஜக கூட்டணி 208 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு உண்மையான காரணம் தலைமை தேர்தல் கமிஷன் ஆணையரா அல்லது 10 ஆயிரம் ரூபாய் வாங்கிய பெண்களா என்று பட்டிமன்றமே நடக்கிறது. முழுமையான தோல்விக்குப் பிறகு பேசிய ராகுல்காந்தி, ‘பீகாரில் இந்த முடிவு உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. தொடக்கத்திலிருந்தே நியாயமற்ற தேர்தலில் நாம் வெற்றி பெறத் தவறிவிட்டோம். அரசியலமைப்புச் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் […]

விஜய் செம அப்செட்… என்ன காரணம் தெரியுமா?

பீகார் தேர்தல் முடிவுகளைப் பார்த்து காங்கிரஸ் கட்சியும் திமுகவும் அதிர்ச்சி அடைந்து நிற்கிறது. தேர்தல் கமிஷன் மூலம் ஏதேனும் தில்லுமுல்லு செய்வதற்கு வாய்ப்பு உண்டு என்று திமுகவும், இத்தனை மோசமான தோல்விக்குப் பிறகு திமுகவிடம் பேரம் பேச முடியாது என்று காங்கிரஸ் கட்சியும் அதிர்ந்து நிற்கிறது. இவர்கள் எல்லோரையும் விட அதிக அப்செட் ஆகியிருப்பது விஜய் என்பதுதான் ஆச்சர்ய தகவல். ஏனென்றால் தமிழக காங்கரஸ்காரர்களுக்கு தவெகவும், பல தவெககாரர்களுக்கு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது விருப்பத் தேர்வாக […]

ராகுல் காந்தியால் பீகார் தோல்வி..? ஸ்வீட் கொண்டாட்டத்தில் திமுக

பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகின்றன. பாஜகவும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன. அதேநேரம், காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமாக பின் தங்கியிருப்பதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக இப்போது குற்றம் சாட்டப்படுகிறது. பீகாரில் மாநில கட்சியாக இருக்கும் லோக் ஜன் சக்தி கட்சியை விட மோசமான இடத்தில் உள்ளது காங்கிரஸ் கட்சி லோக்ஜன் சக்தி கட்சி 10 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியால் ஐந்து இடங்களில் கூட முன்னிலை […]

மேகதாதில் ஸ்டாலினை காட்டிக் கொடுத்த சிவக்குமார்… கொந்தளிக்கும் விவசாயிகள்

மேகதாது அணை கட்டுவதற்கு ஆட்சேபனை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்ததாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பேசியிருக்கும் விவகாரம் தமிழக விவசாயிகளை கொந்தளிக்க வைத்திருக்கிறது. நீதிமன்றத்தில் திட்ட அறிக்கை தயாரிப்புக்கு எதிராக சரியான வாதங்களை முன்வைப்பதற்கு ஸ்டாலின் அரசு முன்வரவில்லை, அதனாலே இப்படியொரு தீர்ப்பு வந்திருக்கிறது. அதாவது, மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அனுமதி வழங்கிவிட்டது. அதேநேரம் தமிழ்நாடு அரசின் கருத்தைக் கேட்காமல், […]

காங்கிரஸ் கட்சியுடன் தவெக பேச்சுவார்த்தை..? அலட்சியம் காட்டும் திமுக

தேர்தல் நேரத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு திடீர் ரோஷம் வரும். அதிக சீட், ஆட்சியில் பங்கு என்று கொதிப்பார்கள். கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும்போது, டெல்லியில் இருந்து உத்தரவு வந்ததும் கப்சிப் என்று மாறிவிடுவார்கள். ஆனால், இந்த முறை அப்படி நடக்காது, விஜய்யுடன் கூட்டணி உறுதி என்று காங்கிரஸ் கட்சியினர் தீவிரம் காட்டிவருகிறார்கள். இதுகுறித்து பேசும் காங்கிரஸ் தலைவர்கள், ‘’தவெக – காங்கிரஸ் கூட்டணியை இயற்கை கூட்டணியாக பார்க்கிறார்கள். ராகுல் காந்தியும் விஜய் அவர்களும். தமிழ்நாட்டில் மட்டுமில்ல […]

விஜய் கட்சியில் நாஞ்சில் சம்பத்… என்ன பொறுப்பு தெரியுமா?

விஜய்க்கு ஆதரவாக மருது அழகுராஜ், தமிழருவி மணியன் தொடங்கி பல்வேறு அரசியல் பிரபலங்கள் ஆதரவு கொடுத்தார்கள் என்றாலும், அவர் யாரையும் பக்கத்தில் சேர்க்கவில்லை. இந்த நிலையில் நாஞ்சில் சம்பத்தை கட்சியில் சேர்த்து, அவருக்கு கட்சியில் அமைப்புச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. இதையொட்டி சமீபத்தில் நாஞ்சில் சம்பத் எக்ஸ் தளத்தில், ‘’உண்பது நாளி; உடுப்பவை இரண்டே..! இதுதான் நான் வாழ்க்கையில் பின்பற்றுவது, அதிகாரத்தை அண்டிப்பிழைக்க வேண்டும் என்று கருதியதில்லை;அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களை நான் மதிப்பதும் […]

எஸ்.ஐ.ஆரில் திமுக இரட்டை வேடம். நீதிமன்றத்தில் எதிர்ப்பு… களத்தில் ஆக்டிவ்

எஸ்.ஐ.ஆருக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகள் தமிழகம் முழுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின. அதோடு உச்ச நீதிமன்றத்தில் இதை எதிர்த்து வழக்கு போட்டுள்ளனர். அதேநேரம், எஸ்.ஐ.ஆர். திருத்தம் செய்யும் ஊழியர்களுடன் திமுக ஏஜெண்ட்கள் கண் கொத்திப் பாம்பாக சுற்றுகிறார்கள். இந்த விவகாரம் மற்ற கட்சியினரை சூடேற்றியுள்ளது. சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி திமுக, காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் […]

விஜய் கேட்ட சின்னங்கள் தெரியுமா ..? கூட்டணி தடுமாற்றம் ஏன்..?

கரூர் நெரிசல் மரணம் விஜய்க்கு எக்கச்சக்க பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது. அரசியலில் அத்தனை எளிதாக ஜெயித்துவிட முடியாது என்பதை புரிந்திருக்கிறார். அதேநேரம், அதிமுகவுடன் கூட்டணி சேர்வதற்கு தயக்கமும் காட்டுகிறார். இதுகுறித்து பேசும் தவெகவினர், ‘’அதிமுக ஏற்கனவே என்.டி.ஏ கூட்டணியில் இருக்கிறார்கள். பாஜகவை விட்டு வரமாட்டார்கள். அப்படி இருக்க என்டிஏ கூட்டணியில் போய் சேர்ந்தால் மக்களுக்கு முதல் தேர்தலிலேயே நம் மீது இருக்கும் நம்பிக்கை குறைந்து விடும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் […]

நேரு குடுத்ததே 44 லட்சம் என்றால் அடித்தது எவ்வளவு..? கடவுளுக்கும் லஞ்சம்

சமீபத்தில் நேரு மீது ஊழல் குற்றச்சாட்டு ஒன்று எழுந்தது. அரசுப் பணியிடங்களை நிரப்பும் பணியில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகக் கூறி, அமைச்சர் கே.என். நேருவை விசாரிக்க கோரி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஊழலில் மட்டும் சுமார் 900 கோடி நேரு சுருட்டியிருப்பதாக பலரும் குற்றம் சாட்டிவருகிறார்கள். இந்த நிலையில் திருப்பதி கோயிலுக்கு 44 லட்சம் ரூபாய் நேரு நிதி வழங்கியிருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் தினமும் லட்சக்கணக்கான […]