பிரதமரை சந்திக்க நேரம் கேட்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வெள்ள பாதிப்புகள் தொடர்பான நிவாரண நிதி வழங்க வேண்டி பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் கோரியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதன்படி கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வங்கக்கடலில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பெருமழை வெள்ளத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதிகன மழை பெய்தது. இதில் ஏற்பட்ட பெரும் சேதத்தை மத்திய அரசு ஆய்வுக்குழுவை அனுப்பி […]
துண்டிக்கப்பட்ட திருச்செந்தூர்! வதந்திகளை தடுக்க அரசு நடவடிக்கை!

திருச்செந்தூரில் கனமழை காரணமாக மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வதந்திகள் பரவாமல் இருக்க நடப்பு நிலவரத்தை ஒலிப்பெருக்கி மூலம் தெரிவிக்க மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வரும் கனமழை காரணமாக திருந்செந்தூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் எந்த வாகனமும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிப்போயுள்ளனர். இதனால் பொது […]
WKMA விருது வழங்கும் விழா! தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு!

வேர்ல்டு கராத்தே மாஸ்டர் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். உலகம் முழுவதும் 52 நாடுகளில் உறுப்பினர்களைக் கொண்டு உலகின் தலைசிறந்த கராத்தே மாஸ்டர் சங்கமாக விளங்கி வருவது வேர்ல்டு கராத்தே மாஸ்டர் அசோசியேஷன். கடந்த 4 ஆண்டுகளாக சேவை புரிந்து வரும் இதில் கடந்த 2 ஆண்டுகளாக கராத்தே மாஸ்டர்கள் மற்றும் வீரர்களை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கும் […]
மக்களுடன் முதல்வர்: 7945 பயனாளிகளுக்கு ரூ.110.51 கோடியில் நலத்திட்ட உதவிகள்!

கோவையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7945 பயனாளிகளுக்கு ரூ.110.51 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பொதுமக்களின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாக கிடைக்கவும், மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைவாக தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.18) கோவை மாவட்டம் என்.என்.ஆர். கல்லூரி வளாகத்தில் […]
செய்தியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை: அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு!

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் தினசரி செய்தித்தாள் பத்திரிகை, செய்தி தொலைக்காட்சிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்களுக்கான மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இந்திய இறையாண்மையின் முக்கிய தூணாக விளங்கும் செய்தித்துறையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உலக நடப்புகளையும், உள்ளூர் நடப்புகளையும் மக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள உதவும் தினசரி செய்தித்தாள் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், முதன்மை செய்தியாளர்கள் உள்ளிட்ட பத்திரிகையாளர்களுக்கென்று இன்று […]
அடடே, தமிழகம் மீண்டும் முதல் மாநிலம்… இந்தியா டுடே ஆய்வு ரிப்போர்ட்

இந்தியா டுடே செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் மொத்த மாநிலங்களின் சிறப்பான செயல்பாடுகளுக்கான பட்டியலில் அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து தமிழகம் 2022 ஆண்டுக்கு முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா டுடே நிறுவனம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், ஸ்டேட் ஆப் ஸ்டேட்ஸ் என்ற பெயரில் மாநிலங்களின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை பட்டியலிட்டு அதற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து 5வது ஆண்டாக தமிழகம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 1, […]
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி இல்லையாம்..! ஸ்டாலினுக்கு லக் அடிக்குமா..?

சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தலில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது. வாக்கு சதவிகிதம் அதிகரித்திருந்தாலும் தோல்விக்குக் காரணம் கூட்டணி வைக்க முடியாமல் போனதுதான் என்று கூறப்படுகிறது. குறிப்பாக மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் இண்டியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மியும், சமாஜ்வாதியும் கேட்ட தொகுதிகளைக் கொடுப்பதற்கு காங்கிரஸ் முன்வரவில்லை. அதனாலே இந்த தோல்வி என்று தெரியவந்துள்ளது. ஆகவே, இனி மாநிலத் தேர்தல் மற்றும் மத்திய தேர்தலில் அனைத்து கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் […]
தமிழ் நாட்டுக்கு மட்டும் இரண்டு கவர்னர்களா..? உதயநிதியுடன் மல்லுக்கட்டும் தமிழிசை

தெலுங்கானா கவர்னராக இருக்கும் தமிழிசை செளந்தர்ராஜனுக்கு கடந்த ஆட்சியிலும், இப்போதைய காங்கிரஸ் ஆட்சியிலும் மதிப்பு கொடுக்கப்படுவதில்லை. அதனால் அவ்வப்போது தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மேலும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நின்று வெற்றி பெற்று அமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். இந்த நிலையில்தான் தமிழிசை எழுப்பிய குற்றச்சாட்டுக்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘உங்க அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம்..’ என்று காட்டமாக பதில் அளித்தார். அதன்பிறகு இருவரும் மாறி மாறி புகார் செய்து […]
பா.ஜ.க.வின் பால் கனகராஜை தோற்கடிச்சுட்டாங்க… களம் இறங்கிய தி.மு.க.. மூத்த புள்ளிகள்

கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் (எம்.எச்.ஏ.ஏ.) தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி அடையவேண்டும் என்று போட்டியிட்ட பா.ஜ.க.வை சேர்ந்த பால்கனகராஜ் தோற்றுப்போயிருப்பது, கட்சியினரை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய இந்த தேர்தல் கடந்த 2016ம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படவில்லை. பல்வேறு வழக்குகளைத் தாண்டி தேர்தல் நடத்தும் அலுவலராக மூத்த வழக்கறிஞர் கபீர் நியமிக்கப்பட்டு நேற்று நடைபெற்றது. இந்த […]
ரஜினிகாந்தை சந்தித்த டிமான்டி காலனி 2 தயாரிப்பாளர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, டிமான்டி காலனி 2 திரைப்பட தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். நடிகர் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமான்டிகாலனி பெரியளவில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி அப்படக்குழுவினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியதால் அதைத்தொடர்ந்து டிமான்டி காலனி2 திரைப்படம் தயாராகும் என்ற அறிவிப்பு வெளியானது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் டிமான்டிகாலனி 2 திரைப்படத்தில் அருள்நிதி, நடிகை பிரியாபவானி சங்கர் […]

