மீண்டும் எடப்பாடிக்கு சசிகலா வெள்ளைக் கொடி..!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரும்புக்கோட்டையாகத் திகழ்ந்த அ.தி.மு.க. நான்கு பிரிவாக நிற்கிறது. தினகரன் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதும் அ.ம.மு.க.வை தொடங்கிவிட்டார். சசிகலா அ.ம.மு.க.வுக்கு இன்னமும் முழுமையாக ஆதரவு கொடுக்காமல் அண்ணா தி.மு.க.வுக்குள் எப்படியாவது நுழைந்துவிட முடியுமா என்று தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறார். சமீபத்தில் வெளியேற்றப்பட்ட பன்னீரும் தினகரன் இணைந்து செயல்படுவதற்கு முடிவு எடுத்துவிட்ட நிலையில், சசிகலா மட்டும் தனியே நிற்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படியாவது தான் மட்டும் கட்சிக்குள் நுழைந்துவிட்டால் போதும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து […]
தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி.! மக்களை சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டுள்ள கனிமொழி எம்.பி. பெரு மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக 4 மாவட்டங்களிலும் பெரியளவு சேதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பெருமழை வெள்ளத்தால் சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட மீட்புப்படையினர் துரிதமாக செயல்பட்டு மழையால் […]
மிக்ஜாம் புயல் பேரிடர்: ரூ.5 லட்சம் நிதி வழங்கிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்!

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்ச ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார். கடந்த 3 மற்றும் 4 (டிசம்பர்) ஆகிய தேதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பெரியளவில் சேதத்தை சந்தித்தது. பொது மக்களின் குடியிருப்புகளுக்குள் மழை வெள்ள நீர் புகுந்து அவர்களின் அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தியது. இதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் […]
தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம்! புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை மக்களுக்கு ஆறுதல்!

பெருமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்த பெருமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டது. மழைவெள்ளத்தில் சிக்கித் தவித்த பொது மக்கள் பெரும் போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் பொது […]
உதயநிதியின் சனாதனத்துக்கு அடுத்து தயாநிதி மாறனின் கழிவறை பேச்சு – ஆட்டம் காணும் இந்தியா கூட்டணி

உதயநிதியின் சனாதன பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் தயாநிதி மாறனின் பழைய வீடியோ பேச்சு இப்போது வைரலாகிவருகிறது. அதாவது, ’உத்தரபிரதேசம், பிகார் மாநிலங்களில் இந்தி மொழி மட்டும் கற்றவர்கள், எங்களுடைய தமிழ்நாட்டுக்கு கட்டிடங்கள் கட்டவும், கழிவறைகளை சுத்தம் செய்யவும்தான் வருகின்றனர்’ என்று பேசியிருந்தார். இது இப்போது இந்தியா முழுக்க எதிரொலிக்கிறது. தமிழக தலைவர்கள் பேசும் பல விவகாரங்கள் இந்திய அளவில் பெரும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. சமீபத்தில் […]
பாலகன் இயேசுவின் வருகை… கிறிஸ்மஸ் சிறப்புக் கட்டுரை

உலகம் முழுக்க கிறிஸ்தவ மக்களால் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிற ஒரு பண்டிகை என்றால், அது கிறிஸ்துமஸ்தான். ஆண்டுதோறும் டிசம்பர் 25ம் தேதி இப்பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை, ‘கிறிஸ்ட் மாஸ்’ என்ற வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானதாகச் சொல்லப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முதன்முதலில் 4வது நூற்றாண்டைச் சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாகச் சில வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. ஆனால் வேறு சில பிரிவுகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, ஜனவரி 6ம் […]
நெல்லை கனமழை: 16 பேர் உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் தகவல்!

வரலாறு காணாத கனமழையால் திருநெல்வேலியில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத அதிகனமழை காரணமாக பெருவெள்ளம் சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து மீட்புக்குழுவினர் துரிதமாக செயல்பட்டு மக்களை மீட்டெடுத்தனர். இந்நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகம், அம்மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏபட்டுள்ள மொத்த சேதம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நெல்லை கனமழையில் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,064 பேர் வீடுகளை […]
தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. தொடர் ஆய்வு! கோரிக்கை நிறைவேற்ற உறுதி!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பெருமழைவெள்ளத்தில் சிக்கித் தவித்த பொது மக்களை மீட்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு பத்திரமாக மீட்டனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் […]
முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா: தே.மு.தி.க. பொதுசெயலாளர் பிரேமலதா பங்கேற்பு!

சென்னை வியாசர்பாடியில் செயல்பட்டு வரும் செயின்ட் தாமஸ் முதியோர் இல்லத்தில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் கிறிஸ்தமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இயேசுபிரான் அவதரித்த தினமான இன்று கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்தும், கேக் உள்ளிட்ட இனிப்பு பொருட்களை பரிமாறிக் கொண்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வடசென்னையில் செயல்பட்டு வரும் செயின்ட் தாமஸ் முதியோர் இல்லத்திற்கு கிறிஸ்துமஸ் நன்னாளை […]
தூத்துக்குடியில் மருத்துவ முகாம்: கனிமொழி எம்.பி.நேரில் ஆய்வு!

தூத்துக்குடியில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயல்பட்டு வரும் மருத்துவ முகாமை தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நேரில் ஆய்வு செய்தார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்த பெருமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டது. மழைவெள்ளத்தில் சிக்கித் தவித்த பொது மக்களை மீட்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து […]

