கரூர் மரணங்களுக்கு திமுகவே காரணம். குற்றம் சாட்டும் எடப்பாடியாரை கைது செய்வாரா ஸ்டாலின்..?

கரூர் மரணங்களில் அரசு மீத் குற்றச்சாட்டு வைப்பவர்களை எல்லாம் திமுக அரசு தொடர்ந்து கைது செய்துவருகிறது. இந்த நிலையில் நேற்றைய எழுச்சிப்பயணத்தில் நேரடியாக திமுக மீது குற்றச்சாட்டு வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. நேற்றைய கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளி இன்று இறந்துவிட்டதாக செய்தி வந்திருக்கிறது. ஏற்கனவே ஒருவர் சரண் அடைந்தார், அவரை என்கவுண்டர் செய்துவிட்டனர், இதில் ஏதோ மர்மம் இருக்கின்றது, சிபிஐ விசாரணை வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர் நீதிமன்றத்தை […]
ஜிடி நாயுடு பேர் பஞ்சாயத்து…. திமுகவுக்காக சீமானுடன் மோதும் அண்ணாமலை

கோவையில் புதிதாக 1791 கோடி ரூபாயில் 10 கி.மீ தூரத்திற்குக் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீண்ட கோவை – அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை நேற்று ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்த பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பேர் வைக்கப்பட்டதற்கு சீமான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து சீமான், ‘இந்தியாவில் மேம்பாலம் கட்ட சராசரியாக 1 கி.மீ.க்கு 18 கோடி ரூபாய் செலவிட்டுக்கொண்டிருக்கும் பொழுது அதே 1 கி.மீ.க்கு 170 கோடி ரூபாய் மக்கள் பணத்தில் செலவழித்து கட்டப்பட்டிருக்கும் இப்பாலத்திற்கு ஜிடி […]
எடப்பாடி கூட்டத்தில் தவெக கொடி..? வைரலாகும் கூட்டணி பேச்சு

எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் எழுச்சிப்பயணத்தில் விஜய் கட்சியினர் கொடியுடன் ஆஜராவது தொடர்ந்து நடந்துவருகிறது. நேற்றைய கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘மெகா கூட்டணி உறுதியாகிறது. பிள்ளையார் சுழி போட்டாச்சு’ என்று விஜய் கட்சி கொடியைக் கை காட்டி பேசியது வைரலாகிவருகிறது. அதோடு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தவெக தலைவர் விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியிருப்பதாகவும் தொடர்ந்து ஆதரவு தருவதாகவும் உறுதி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. கடந்த செப்.27-ம் தேதி கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் […]
கரூருக்கு விஜய் நிவாரண உதவி எப்போது..? சிபிஐ அனுமதியில் குழப்பமோ குழப்பம்

அஜித்குமார் வீட்டுக்குச் செல்லும்போது விஜய் யாரிடமும் அனுமதி கேட்கவில்லை, இப்போது கரூருக்கு மட்டும் அனுமதி கேட்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கரூர் சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் உடனடியாக ஊரை விட்டு காலி செய்து கிளம்பினார் விஜய். ஆனால், கரூருக்கு அடுத்த நாளே சென்ற எடப்பாடி பழனிசாமி யாரிடமாவது அனுமதி வாங்கிச் சென்றாரா? சீமான் யாரிடமாவது அனுமதி வாங்கிச் சென்றாரா? திருமாவளவன், பிரேமலதா விஜயகாந்த், நயினார் நாகேந்திரன், கமல்ஹாசன், அண்ணாமலை, இன்னும் பிறர் யாரிடமாவது அனுமதி வாங்கிச் சென்றனரா…? ஒரு […]
தமிழ்நாடு போராடும் என்பதெல்லாம் நடிப்பா ஸ்டாலின்..? கழுத்தை நெரிக்கும் கருத்து சுதந்திரம்.

மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு போராடும் வெல்லும் என்று குரல் எழுப்பிக்கொண்டு இருக்கும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரத்தை காலில் போட்டு மிதித்துவருகிறார். விஜய்க்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட காரணத்துக்காக புதிய தலைமுறை செய்தியை அரசு கேபிளில் இருந்து தூக்கினார்கள். இப்போது பிரச்னை வரக்கூடாது என்று பின்னே தள்ளியிருக்கிறார்கள். 25க்கும் மேற்பட்ட சோஷியல் மீடியா ஆட்களை கைது செய்து சிறைக்குள் தள்ளியிருக்கிறார்கள். இதில் முன்னாள் காவல்துறை அதிகாரியும், அரசியல் விமர்சகருமான வரதராஜனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற […]
திமுகவின் ரவுடித்தனம் திருமாவளவனுக்கும் வந்திடுச்சா..? நடுரோட்டில் வன்முறை களேபரம்

பிரியாணி கடை தொடங்கி திமுகவினர் செல்லும் இடமெல்லாம் வன்முறை தாண்டவமாடுவது வழக்கம். அதே வழியில் திருமாவளவனும் அடிதடியை ஆதரிக்கிறாரோ என்பது போன்ற சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன. சென்னை நந்தம்பாக்கம் 158வது வட்ட அதிமுக கழக செயலாளரும், வழக்கறிஞருமான ராஜீவ்காந்தியின் ஸ்கூட்டர் நேற்று விசிக தலைவர் கார் மீது லேசாக மோதியதாக சொல்லப்படுகிறது. இதற்கு திருமாவளவன் கண் முன்பு உயர்நீதிமன்ற வாசலில் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறு விபத்தை பெரிதுபடுத்தி சட்டம் ஒழுங்கிற்கே நீதிமன்ற வாயிலிலேயே சவால் விட்டுள்ளனர். இதையெல்லாம் காருக்குள் […]
உச்ச நீதிமன்றத்தை உலுக்கும் சனாதனம்… செருப்புக்கு பாஜக கப்சிப்

அரசியல் சாசனத்தை மதித்து நடக்க வேண்டிய வழக்கறிஞர் ஒருவர் சனாதனத்தை ஆதரித்து தலைமை நீதிபதி மீது செருப்பை வீசி இருப்பது அகில இந்திய அளவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. நீதிபதியை பகிரங்கமாக அவமதித்த நீதித்துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட வழக்கறிஞரின் உரிமத்தை இந்திய பார் கவுன்சில் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கஜுராஹோ ஜாவரி கோவிலில் இஸ்லாமியர் படையெடுப்பின் போது சிதைந்தபோன விஷ்ணு சிலையை மீட்டெடுக்க உச்சநீதிமன்றம் […]
அன்புமணிக்கு மட்டும் நோஸ் கட்… ராமதாஸ் மருத்துவமனை கூட்டணி

அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர் டாக்டர் ராமதாஸ் என்பதை பெத்த பிள்ளைக்கு நிரூபிக்கும் வகையில் அப்போலோ மருத்துவமனையில் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது ஒரு நாடகம். ஒரு வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டதாக செய்தி பரவியது. மருத்துவமனை நிர்வாகமும், “பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போலோ மருத்துவமனையில் இருதயம் தொடர்பான மூத்த மருத்துவர் செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்” என்றே […]
இட்லி கடை புரமோஷனுக்கு அமைச்சரா..? திமுகவின் சூப்பர் தில்லாலங்கடி

உதயநிதியின் மகன் இன்பநிதி தயாரித்திருக்கும் இட்லி கடையை எப்படியும் வெற்றிப்படமாக மாற்ற வேண்டும் என்ற பொறுப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஒப்படைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஷோவுக்கும் 300 பேரை அழைத்துவரும் பொறுப்பை திறம்பட செய்கிறாராம் மாசு. இதுகுறித்து பேசும் எதிர்க்கட்சியினர், ‘’தமிழ்நாட்டை உலுக்கிய கரூர் நெரிசல் உயிரிழப்பு சம்பவ வடு ஆறாத தருணத்தில் முதலமைச்சரின் பேரனும் து.முதல்வர் மகனுமான இன்பநிதி தயாரிச்ச இட்லி கடையில் எப்படி பணம் சம்பாதிப்பது என்பதுதான் திமுகவின் ஆர்வமாக இருக்கிறது. இன்பநிதியின் முதல்படம் தோற்றுவிடக் […]
விஜய்யை புரட்டிப்போட்டு அடிக்கும் பிரேமலதா..? புதிய அரசியல் ட்விஸ்ட்

விஜய்காந்த் பாணியில் அரசியல் செய்வதே என்னுடைய வழி என்று பேசும் நடிகர் விஜய் இப்படி கோழை போன்று ஓட் ஒளியலாமா என்று கேள்வி எழுப்பியிருக்கும் பிரேமலதாவால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. டிடிவி தினகரனை அடுத்து பிரேமலதாவும் புது ரூட் போட்டுவருகிறார். நேற்றைய தினம் பிரேமலதா, ‘’கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும். வீரம் இருக்க வேண்டும். நம்மால் ஒரு குடும்பத்துக்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக நிற்க வேண்டும். விஜய் குறித்த நேரத்தில் அங்கு வரவே […]

