கூட்டுக்குடிநீர் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

ரூ.1,933.69 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக தலைமை செயலகத்தில் இருந்த படியே சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பிலான திட்டப்பணிகளை திறந்து வைத்தார். அதன்படி சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 204 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் […]
மிக்ஜாம் புயல் நிவாரணப்பணி: முதலமைச்சரிடம் திருவாவடுதுறை ஆதீனம் காசோலை வழங்கினார்!

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக, திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நிதி வழங்கினார். கடந்த டிசம்பர் மாதம் 3 மற்றும் 4 (2023) ஆகிய தேதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பெரியளவில் சேதத்தை சந்தித்தது. பொது மக்களின் குடியிருப்புகளுக்குள் மழை வெள்ள நீர் புகுந்து அவர்களின் அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தியது. இதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் […]
தமிழக அரசின் பங்கு ஈவுத்தொகை ஒப்படைப்பு! அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்!

தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் 2022& 23ஆம் நிதியாண்டிற்கான அரசின் பங்கு ஈவுத்தொகையாக ரூ.18 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் கே.என்.நேரு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் 2022- 23ஆம் நிதியாண்டிற்கான அரசின் பங்கு ஈவுத்தொகையாக ரூ.18 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் கே.என்.நேரு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த […]
கனிமொழி எம்.பி. பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்!

கனிமொழி எம்.பி. இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சரும் அவரது சகோதரருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணை பொது செயலாளருமான கனிமொழி இன்று (ஜன.5) பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சகோதரரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தென்மாவட்டங்களை புரட்டிப் போட்ட பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். தொடர்ந்து […]
கேப்டன் இல்லத்தில் அஞ்சலி: மகன்களுடன் சென்ற சிவகுமார்!

நடிகர் சிவக்குமார் தனது மகன்களும் நடிகர்களுமான சூர்யா மற்றும் கார்த்தியுடன் சாலிகிராமத்தில் உள்ள கேப்டனின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி நிமோனியா காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கேப்டனின் உடல் சென்னை தீவுத்திடலிலும், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திலும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சினிமா துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். […]
வரப்போகுது மோடியின் தேர்தல் பட்ஜெட்… பெட்ரோல் விலை குறைப்பு, ரயிலில் டிக்கெட் சலுகை உறுதி

கடந்த ஒன்பது ஆண்டுகளாக மோடி அரசாங்கம் பட்ஜெட் தாக்கல் செய்திருந்தாலும், நேரடியாக மக்கள் பயன்படும் வகையில் எந்த ஒரு மெகா அறிவிப்பும் செய்ததில்லை. இந்த நிலையில் இன்னும் நான்கு மாதங்களில் தேர்தலை சந்திக்கவேண்டிய சூழல் மோடிக்கு இருக்கிறது. ஆகவே, பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் ஒரு இடக்கால பட்ஜெட்டாக இருக்கும் என்றாலும் தேர்தல் […]
கனிமொழி பிறந்த நாளில் வைரலாகும் எம்.ஜி.ஆர். புகைப்படம்… அமைதியான தி.மு.க. ஐ.டி.விங்

தென் தமிழக மக்கள் வெள்ளத்தில் இருந்து இன்னமும் முழுமையாக மீளவில்லை என்பதால் என்னுடைய பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று கனிமொழி எம்.பி. அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும், மற்ற ஆண்டுகளைவிட இந்த ஆண்டு அவரது பிறந்த நாளை ஆதரவாளர்கள் வழக்கத்தைவிட அதிகமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நாளில் சின்னப் பிள்ளையாக எம்.ஜி.ஆர். மடியில் கனிமொழி அமர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டு பாராட்டி வருகிறார்கள். இந்த படம் அ.தி.மு.க.வினர் மத்தியிலும் பரபரப்பாக பரப்பப்பட்டு வருகிறது. தென் தமிழகத்தில் மழை தொடங்கிய […]
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் நிறைவேறுகிறதா..? அலறும் மாநிலக் கட்சிகள்

பா.ஜ.க. ஆட்சி அமைத்த காலத்திலிருந்தே ஒரே நாடு ஒரே தேர்தல் வரப்போகிறது என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த ஆட்சி முடிவடைய இருக்கும் கடைசி சில மாதங்களில் இந்த சட்டத்தை நிறைவேற்றும் முடிவில் மோடி அரசு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான முதல்கட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக நிர்வாக கட்டமைப்பில் சட்ட மாற்றங்களை செய்ய ஏதுவாக பொதுமக்களின் பரிந்துரைகளை பெறுவதற்கான பொது அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. உயர்நிலைக் குழு […]
கலைஞர் நூற்றாண்டு விழா: முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பில் நடத்தப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வருகிற 6ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா சென்னை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சார்பில் நடைபெற உள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மிக்ஜாம் புயலால் தள்ளிவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கான அழைப்பிதழ்கள் முன்னதாகவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட அனைத்து […]
மிக்ஜாம் புயல்: முதலமைச்சரிடம் காசோலை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு!

மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.18) தொடங்கி வைத்தார். தமிழக அரசு கொண்டு வந்துள்ள ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தின் நோக்கம், பொதுமக்களின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாக கிடைக்கவும், மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைவாக தீர்வு காண வேண்டும் என்பதுதான். அதன்படி இன்று (டிச.18) கோவை மாவட்டம் என்.என்.ஆர். கல்லூரி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் கோவை மாநகரட்சி 27 மற்றும் 28வது […]

