News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

எடப்பாடி பழனிசாமியின் கால் வலியை ராமர் தீர்த்துவைப்பார்… விழாவுக்கு அழைக்கும் பா.ஜ.க.

அயோத்தி கும்பாபிஷேகத்திற்கு கூட்டணிக் கட்சிகளை அழைத்து முக்கியத்துவம் கொடுப்பதற்கு பா.ஜ.க. விரும்புகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் முக்கியக் கூட்டணிக் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. மீண்டும் உடைந்து சிதைந்து நிற்கிறது. சமீபத்தில் இஸ்லாம் இயக்கத்தின் மதுரை மாநாட்டில் கலந்துகொண்டு, தன்னை சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக காட்டிக்கொள்ள நினைக்கிறார். இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வாரா என்பது கேள்வியாக இருந்தது. இதுகுறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’அயோத்தி ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு யார் […]

வைரலாகும் அண்ணாமலை காவடியாட்டம்… அடுத்த அரஸ்ட் தளி ராமச்சந்திரன்..?

அண்ணாமலை தமிழகத்தில் என் மண் என் மக்கள் நடைபயணத்தில் ஹோட்டலில் புரோட்டா போடுவது, டீ ஆற்றுவது, பாட்டிகளை கட்டிப் பிடிப்பது போன்ற பல்வேறு சம்பவங்கள் நடந்துவருகின்றன. இந்த நிலையில் அண்ணாமலை முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் காவடியை தோளில் வைத்து ஆடியது பெரும் பரபரப்பாகியுள்ளது. அண்ணாமலையின் பயணத்தில் தமிழகத்தில் 150 ஆவது சட்டமன்றத் தொகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், மாபெரும் மாநாடு போன்ற மக்கள் வெள்ளத்தின் நடுவே, வெகு சிறப்பாக நடந்தேறியது. இங்குதான் காவடியாட்டம் போட்டு பரபரப்பாக்கினார். இந்த பயணத்தில் […]

விஜயகாந்த் மறைந்து 30 நாள் ஆவதற்குள் தி.மு.க.வுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்..! பிரேமலதாவுக்கு தேர்தல் அவசரமா..?

விஜயகாந்த் மறைவுக்கு தமிழக அரசு மரியாதையும் பல்வேறு உதவிகளும் கிடைத்தன. இந்த நிலையில் பிரதமர் மோடியிலிருந்து லோக்கல் அண்ணாமலை வரையிலும் பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறிவந்தனர். இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து தி.மு.க.வுக்கு எதிராக பிரேமலதா உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இணைய வேண்டும் என்றால் தி.மு.க.வுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்பதாலே பிரேமலதா இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் […]

இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர்களுடன் ஸ்டாலின் கொண்டாடிய சமத்துவப் பொங்கல்… கிடுகிடு சர்ச்சை

தமிழகத்தில் பொங்கல் விழா களை கட்டத் தொடங்கியிருக்கிறது. தமிழக முதல்வர் கொளத்தூர் தொகுதியில் இருக்கும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் சமத்துவப் பொங்கலாக மனைவி துர்காவுடன் இணைந்து கொண்டாடினார். அதோடு இந்த பொங்கல் விழாவில் 1000 மாணவிகள் மற்றும் மகளிருக்கு பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்கினார். இந்த விழாவில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மாணவியர்களும் கலந்துகொண்டு கொண்டாடியது சிறம்ப்பம்சமாகும். அதேநேரம், இதற்கு கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்துக்களின் பண்டிகையான பொங்கலில் எப்படி இஸ்லாமியர்களையும் பிற சமயத்தினரையும் இணைத்துக் கொண்டாடலாம் […]

கைது ஆகிறாரா நயன்தாரா..? வில்லங்கமாகும் அன்னபூரணி அசைவம் விவகாரம்

நயன்தாராவின் 75வது திரைப்படமான அண்ணபூரணி திரைப்படம் பரபரப்பாக வெளியானது. திரையரங்குகளில் வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 29ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.  ஐயங்கார் வீட்டு பெண்ணான நயன்தாரா அசைவம் சமைக்க விரும்பும் சமைக்க கலைஞராக இருப்பார். அவருக்கு உறுதுணையாக இருக்கும் ஃபர்ஹான் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெய் நடித்திருப்பார். அவர் நயன்தாராவை அசைவம் சாப்பிட வைப்பதற்காக, ராமர் கூட அசைவம் சாப்பிட்டிருக்கிறார் என்று கூறுவார்.  இந்த விவகாரம் தமிழகத்தில் பெரிதாக எந்த எதிர்ப்பும் […]

கார்த்தி சிதம்பரத்துக்கு அண்ணாமலை பாராட்டு..! ’காவி’ மாணவிகளிடம் ஆவேசம்…

என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அமைந்திருக்கும் அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அண்ணாமலை வருகைக்காக அத்தனை மாணவிகளும் காவி நிறத்தில் சேலை கட்டி அமர வைக்கப்பட்டிருந்தனர். இந்த கூட்டத்தில் ஆவேசமாகப் பேசிய அண்ணாமலை, ’பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பெரும்பான்மையான வீடுகள் குடும்பத் தலைவிகள் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டிருப்பது, புகையற்ற சமையலுக்காக இலவச சமையல் எரிவாயு […]

ஓசூரில் எடப்பாடி பழனிசாமியை அடித்து, துவைத்து, தொங்கப்போட்ட ஓபிஎஸ்..!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடியை ஏர்போர்ட்டில் சந்தித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம் இப்போது முன்னிலும் வேகமாக எடப்பாடி பழனிசாமியை தாக்கிப் பேசத் தொடங்கியிருக்கிறார். அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கழக ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ். பேசியதில் அனல் தெறித்தது. ’’தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட நம் கழகத்தில் தொண்டர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும் என்று சட்ட விதிகளை உருவாக்கினார் புரட்சித் தலைவர். புரட்சித் தலைவி அம்மா அவர்களும் அந்த விதிகளை பின்பற்றினார். ஆனால் இப்பொழுது […]

அப்பாவை பிடிக்கும் என்ற 4 வயசு பிள்ளையை கழுத்தை நெரித்துக்கொன்ற ’பாசக்கார’ அம்மா

தாய்ப்பாசத்துக்கு நிகராக இந்த உலகில் வேறு எதுவுமே இல்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம், பெற்ற தாயே பிள்ளைகளை கொல்லும் அவலமும் நடக்கத்தான் செய்கிறது. நன்கு படித்து நல்ல வேலையில் இருக்கும் ஒரு பெண் செய்திருக்கும் பகீர் கொலையால் இந்தியாவே அதிர்ந்து நிற்கிறது. பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட் ஆப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத், சுசனாவுக்கும் வெங்கட்டுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த […]

14 சிட்டிங் எம்.பி.க்கள் அவுட்… ஸ்டாலினுக்கு நோட் போட்டிருக்கும் சபரீசன்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தொகுதியையும் தி.மு.க. கைப்பற்ற வேண்டும் என்ற வேகத்தில் இருக்கிறது. இந்த லட்சியத்தை அடையவேண்டும் என்றால் கடந்த தேர்தலில் நின்று ஜெயித்த 14 பேருக்கு இந்த தேர்தலில் சீட் கொடுக்கக்கூடாது என்று கட்சி நிர்வாகத்தை மறைமுகமாக நடத்திவரும் சபரீசன் நோட் போட்டு ஸ்டாலினுக்குக் கொடுத்திருக்கிறார். இந்த 14 தொகுதிகளிலும் எம்.பி.க்களுக்கு எதிராக மக்கள் மனநிலை இருப்பதால், இப்போதே இதில் முடிவெடுத்தால் மட்டுமே, புதிய வேட்பாளர்களைத் தேர்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்க […]

தேனியில் டிடிவி.தினகரன் போட்டி..! பன்னீருக்கு அடுத்த ஆப்பு… கொதிக்கும் மன்சூர் அலிகான்

எடப்பாடியால் கழட்டிவிடப்பட்ட டிடிவி தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதாக மேடைக்கு மேடை கூறப்பட்டு வந்தது. அதோடு இவர்கள் இருவரையும் பா.ஜ.க. கூட்டணியில் இணைத்துக்கொள்ளும் என்றும் நம்பிவந்தனர். இன்னமும் இந்த கூட்டணி உறுதியாவதற்கு முன்னரே உடைந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் தேனி தொகுதியில் டிடிவி தினகரன் நிற்பதற்கு ஆசைப்படுவதுதான். தற்போது இந்த தொகுதியின் எம்.பி.யாக பன்னீரின் மகன் ரவீந்திரநாத் இருந்துவருகிறார். வரும் தேர்தலிலும் பா.ஜ.க. துணையுடன் எப்படியும் மகனை ஜெயிக்க வைத்துவிடுவது என்ற ஆசையில் […]