News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழகத்திலும் மோடி ஓட்டு வேட்டை, எம்.ஜி.ஆருக்கு பாராட்டு, ராமேஸ்வரம் தீர்த்தம்

அயோத்தி ராமர் கோயிலை திறந்து வைத்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, தமிழகத்திலும் தன்னுடைய வாக்கு வேட்டையைத் தொடங்கும் வகையில் மோடி மீண்டும் மீண்டும் தமிழகம் வர இருக்கிறார். இன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமரின் எக்ஸ் தளத்தில், ‘எம்.ஜி.ஆர். தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு தலைவராகவும் இருந்தார். அவரது படங்கள், குறிப்பாக சமூக நீதி மற்றும் பச்சாதாபம், வெள்ளித்திரைக்கு அப்பால் இதயங்களை வென்றன. அவரது பணி தொடர்ந்து […]

மீண்டும் வள்ளுவருக்கு காவி, பட்டை..! கவர்னர் ரவியை ரவுண்டு கட்றாங்க  

திருவள்ளுவர் படத்துக்கு காவி ஆடை அணிவித்து நெற்றி, கைகளில் திருநீறு பட்டை போட்ட படத்தைப் போட்டு, ‘ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்…’ […]

ரஜினியை இப்படி அவமானப்படுத்திட்டாரே குருமூர்த்தி… உண்மையைச் சொல்ல  ரஜினி பயப்படுகிறாரா..?

துக்ளக் ஆண்டுவிழா நடக்கும் தருணங்களில் ஏதேனும் பரபரப்பைக் கிளப்பும் வகையில் பேசுவது குருமூர்த்தியின் வழக்கம். அ.தி.மு.க.வினருக்கு ஆண்மையே இல்லை, நான் சொன்னதைக் கேட்டுத்தான் ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்தினார் என்றெல்லாம் பேசி சலசலப்பை ஏற்படுத்துவார். அந்த வகையில் இப்போது நடந்துமுடிந்திருக்கும் விழாவில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வர இருந்தபோது, அண்ணாமலையைத்தான் முதல்வர் வேட்பாளர் என்று முடிவு செய்திருந்தார், இதுகுறித்து என்னிடம் ஆலோசித்தார் என்று கூறியிருக்கிறார் குருமூர்த்தி. அந்த நேரத்தில் அண்ணாமலை அரசியலுக்கே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து […]

சுற்றுச்சூழலுக்காக பிரமாண்ட மாரத்தான்..! ரஜினியை சந்தித்த துரை வைகோவின் அடுத்த அதிரடி

மறுமலர்ச்சி தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தமிழகம் முழுக்க தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுத்து வருகிறார். சமீபத்தில் தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திருவண்ணாமலை மாவட்டம், முன்னாள் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் எஸ்.ஏ.அண்ணாமலையை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். இதுகுறித்து அவர், ‘நான் மீண்டும் மீண்டும் இயக்க தோழர்களுக்கு குறிப்பிடுவது அனைவரும் […]

செந்தில் பாலாஜிக்கு ஜெயிலு பொங்கல்..! நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் ஜாமீன் கிடைக்குமாம்

வெற்றிகரமாக 200வது நாளை சிறைக்குள் கொண்டாடி வரும் இலாகா இல்லாத அமைச்சரான செந்தில் பாலாஜி, ஜாமீனில் வெளியே வருவதற்கு குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் என்று சொல்லப்படுவது தி.மு.க.வினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் பணம் பெற்று நிறைய பேரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை […]

விஜய்க்குப் போட்டியாக தனுஷை களமிறக்கும் தி.மு.க..? ஓடிவந்து புரமோட் செய்யும் உதயநிதி

தி.மு.க. நடத்திய கலைஞர் 100 அட்டர் பிளாப் ஆனதற்கு நடிகர் விஜய் சென்னையில் இருந்துகொண்டே வராமல் போனதுதான் காரணம் என்று தி.மு.க. ரொம்பவே காட்டமாக இருக்கிறது. 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு முழு அளவில் இல்லையென்றாலும் விஜய் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றே தெரிகிறது. தொடர்ந்து விஜய்க்கு மக்களிடம் கிடைத்துவரும் ஆதரவை எப்படியும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற திசையில் தி.மு.க. காய் நகர்த்தத் தொடங்கியிருக்கிறது. அதனால் தற்போது நடிகர் தனுஷிற்கு ஆதரவு கொடுத்து […]

ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி 11 நாள் விரதம்..! அதுசரி, திரவுபதி முர்முவை கூப்பிடுவாங்களா.. இல்லையா..?

அயோத்தியில் ராமர் கோயில் திறப்புவிழா நாடு முழுவதும் பண்டிகை போலவே கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நமது பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார். ’’பல தலைமுறைகளாக, பல ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த, எண்ணற்றோரின் தியாகம் நிறைவேறும் திருநாள், வரும் ஜனவரி 22 ஆகும். அயோத்தியில் பகவான் ஶ்ரீராமர் திருவுருவச் சிலையை, பிரதிஷ்டை செய்யும் புண்ணிய வாய்ப்பு தமக்குக் கிடைத்திருப்பதாகவும், பாரதம் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் பக்தர்களின் பிரதிநிதியாக, அந்தப் புனிதமான […]

பெண் காவலர்களுக்கு ஹைடெக் ஓய்வு இல்லம்… சந்தீப் ராய் ரத்தோர் திறந்துவைத்து ஆய்வு

வெளி மாவட்டங்களிலிருந்து பணி நிமித்தமாக சென்னைக்கு வரும் பெண் காவலர்கள் தங்குவதற்கு வால்டாக்ஸ் ரோடு ஐசக் தெருவில் பழைய பெண் காவலர்கள் ஓய்வு இல்லம் பயன்பாட்டில் இருந்துவந்தது. அந்த இல்லத்தில் இருந்த பழுதுகளை நீக்கி, புனரமைக்கப்பட்ட பெண் காவலர்கள் ஓய்வு இல்லத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்துவைத்து பார்வையிட்ட்டார். இந்த ஓய்வு இல்லத்தில் 21 அறைகள் மற்றும் 15 படுக்கைகள் கொண்ட ஒரு பொது அறையும் உள்ளன. எனவே, இங்கு பொது […]

எடப்பாடி பழனிசாமியின் கால் வலியை ராமர் தீர்த்துவைப்பார்… விழாவுக்கு அழைக்கும் பா.ஜ.க.

அயோத்தி கும்பாபிஷேகத்திற்கு கூட்டணிக் கட்சிகளை அழைத்து முக்கியத்துவம் கொடுப்பதற்கு பா.ஜ.க. விரும்புகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் முக்கியக் கூட்டணிக் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. மீண்டும் உடைந்து சிதைந்து நிற்கிறது. சமீபத்தில் இஸ்லாம் இயக்கத்தின் மதுரை மாநாட்டில் கலந்துகொண்டு, தன்னை சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக காட்டிக்கொள்ள நினைக்கிறார். இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வாரா என்பது கேள்வியாக இருந்தது. இதுகுறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’அயோத்தி ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு யார் […]

வைரலாகும் அண்ணாமலை காவடியாட்டம்… அடுத்த அரஸ்ட் தளி ராமச்சந்திரன்..?

அண்ணாமலை தமிழகத்தில் என் மண் என் மக்கள் நடைபயணத்தில் ஹோட்டலில் புரோட்டா போடுவது, டீ ஆற்றுவது, பாட்டிகளை கட்டிப் பிடிப்பது போன்ற பல்வேறு சம்பவங்கள் நடந்துவருகின்றன. இந்த நிலையில் அண்ணாமலை முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் காவடியை தோளில் வைத்து ஆடியது பெரும் பரபரப்பாகியுள்ளது. அண்ணாமலையின் பயணத்தில் தமிழகத்தில் 150 ஆவது சட்டமன்றத் தொகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், மாபெரும் மாநாடு போன்ற மக்கள் வெள்ளத்தின் நடுவே, வெகு சிறப்பாக நடந்தேறியது. இங்குதான் காவடியாட்டம் போட்டு பரபரப்பாக்கினார். இந்த பயணத்தில் […]