News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அ.தி.மு.க.வில் இணைந்த நடிகை காயத்ரி ரகுராம்!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிரபல நடிகை காயத்ரி ரகுராம் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.   பிரபல நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் தீவிரமாக அரசியல் பணியாற்றி வந்த நிலையில், மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையுடன் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்ததோடு அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதிலும் குறிப்பாக பா.ஜ.க.வில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறப்பட்டது பெரும் […]

ராகுல் காந்தி, உதயநிதியால் விரட்டப்பட்ட சுனில் கனுகோலு..! நடிகர் விஜய்யிடம் தஞ்சம்..!

பிரசாந்த் கிஷோரிடம் பணியாற்றிய சுனில் கனுகோலு அதன்பிறகும் நீண்ட காலம் தி.மு.க.வில் தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மீண்டும் பிரசாந்த் கிஷோர் தி.மு.க.வுக்கு பணியாற்றியதால், சுனில் அங்கிருந்து வெளியேறி எடப்பாடி பழனிசாமியிடம் சேர்ந்தார். ஆனால், அந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தோல்வி அடைந்த காரணத்தால் அவரை வெளியனுப்பிவிட்டனர். அதன்பிறகு காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசகராகப் போனார். கர்நாடகத் தேர்தலில் ஆலோசகராகப் பொறுப்பேற்றார். அந்த தேர்தலில் வெற்றி பெற்றதும் ஓரளவுக்கு சுனிலுக்கு […]

நாடாளுமன்றத் தேர்தல் குழுவில் கனிமொழி, பிடிஆர், மேயர் பிரியா… துரைமுருகன் எங்கேப்பா..?

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தி.மு.க. தயாராகும் வகையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த குழுவில் கனிமொழி, உதயநிதியுடன் மேயர் பிரியாவும் சேர்க்கப்பட்டுள்ளது அரசியல் பரபரப்பை உருவாக்கியுள்ளது. தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கான குழுவில் கனிமொழி கருணாநிதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஏகேஎஸ்.விஜயன், பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி ராஜா, கோவி செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், சிவிஎம்பி. எழிலரசன், அப்துல்லா, எழிலன் நாகநாதன் ஆகியோருடன் மேயர் பிரியாவும் சேர்க்கப்பட்டுள்ளது திமுகவினரிடையே கடும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏராளமான சீனியர்கள் இருக்கும்போது […]

கிறிஸ்தவர் நயன்தாராவின் ஜெய் ஸ்ரீராம் சரண்டர்..! மிரட்டியது யாருங்க..?

சென்சார் செய்யப்பட்டு திரையில் ரிலீஸ் ஆகி பெரிய பரபரப்பு இல்லாமல் ஓடி, அதன்பிறகு ஓடிடியிலும் வெளியான அன்னபூரணி படத்துக்கு திடீரென பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஸ்ரீராமர் மாமிசம் சாப்பிட்டார் என்று பேசப்பட்ட விவகாரம் நயனுக்கு எதிரான பிரச்னையாக மாறியது. அதாவது ஒரு கிறிஸ்தவப் பெண் ஒருவர் எப்படி ஸ்ரீராமர் பற்றி பேசலாம் என்பதுதான் பஞ்சாயத்து. இந்த விவகாரம் தீயாகப் பரவியதையடுத்து ஓடிடியில் இருந்து நிறுத்தப்பட்டது. அதன்பிறகும் பிரச்னை தீராமல் இன்று ஜெய் ஸ்ரீராம் என்று பா.ஜ.க.விடம் சரண்டர் […]

பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையிலும் இலங்கை கடற்படை அட்டூழியம்..! தமிழக மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது

காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தாலும், பா.ஜ.க.வின் மோடி ஆட்சி செய்தாலும் இலங்கை கடற்படையினர் தங்கள் அராஜகத்தை நிறுத்துவதாகவே தெரியவில்லை. தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்தும், படகுகளை பறிமுதல் செய்தும் அட்டூழியம் செய்துகொண்டே இருக்கிறார்கள். இதுகுறித்து இன்று அறிக்கை வெளியிட்டிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி நடுக்கடலில் கைது செய்வதும் அவர்களது விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் வாடிக்கையாக இருக்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரம் இதனால் […]

சென்னை போலீஸ் ஷ்பெஷல் குட்கா ரெய்டு… எட்டே நாளில் 63 பேரை தூக்கிட்டாங்க

சென்னை போலீஸ் ஷ்பெஷல் குட்கா ரெய்டு… எட்டே நாளில் 63 பேரை தூக்கிட்டாங்க தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களான குட்கா, மாவா, ஹான்ஸ் போன்ற புகையிலைப் பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் சீரியஸ் உத்தரவு போட்டிருக்கிறார். இதையடுத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம், ‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ எனும் சிறப்பு சோதனை மேற்கொண்டனர். சென்னை பெருநகர காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த […]

சேலம் இளைஞரணி மாநாட்டில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கோரிக்கை..?

ஜனவரி 21ம் தேதி சேலத்தில் நடைபெற இருக்கும் திமுக இளைஞரணி மாநாட்டுக்கான சுடர் தொடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பு அருகே தொடங்கி வைத்தார். இளைஞர் அணி மாநாட்டுக்கான எழுச்சிப் பாடலை வெளியிட்டுள்ள உதயநிதி இன்று சுடர் ஓட்டத்தை தொடங்கிவைத்து, உரையாற்றினார். ‘இந்த சுடர் சென்னை – காஞ்சிபுரம் – விழுப்புரம் – கள்ளக்குறிச்சி – சேலம் மாவட்ட இளைஞர் அணி தோழர்களால் மாநாடு நடைபெற இருக்கிற சேலம் பெத்தநாயக்கன்பாளையத்திற்கு கொண்டு […]

வடகலை தென்கலை காட்டுமிராண்டித்தன மோதல்… அடிதடி, குஸ்தி, கொலை மிரட்டல்…!

வேலை இல்லாத வெட்டிகள், ஜாதிப்பெருமை பேசும் பழமைவாதிகள், ஆணவம் பிடித்தவர்கள் மட்டுமே தங்கள் ஜாதிப் பெருமைக்காக மல்லுக்கட்டுவார்கள் என்று விமர்சனம் செய்வோரின் வாயை அடைக்கச் செய்யும் அளவுக்கு வடகலை, தென்கலை பிரிவினருக்கிடையே நடைபெற்ற அடிதடி விவகாரம் சந்தி சிரிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தின் பார்வேட்டை திருவிழாவில் வரதராஜபெருமாள் எழுந்தருளும் வைபவம் நடைபெறும். அதன்படி, கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலையின் மீது எழுந்தருளினார். தேவராஜ சுவாமி பார்வேட்டைக்கு […]

எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் எடப்பாடி பழனிசாமி கேக், லட்டு, பிரியாணி அட்டகாசம்..!

ஆட்சியில் இருந்த காலத்தைவிட, இந்த ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை எடப்பாடி அட்டகாசமாக கொண்டாடியிருக்கிறார். இதுகுறித்து அவர் இன்று எக்ஸ் தளத்தில் பாராட்டுக் கடிதம் எழுதியிருக்கிறார். அள்ளி அள்ளிக் கொடுத்த வள்ளல் கரங்களுக்குச் சொந்தக்காரர், கடையேழு வள்ளல்கள் குறித்தும், மகாபாரத இதிகாசம் சொல்கிற வள்ளல் கர்ணன் குறித்தும் நாம் கதைகளைக் கேட்டறிந்து இருக்கிறோம். ஆனால், அவர்களின் வள்ளல் தன்மை இப்படித்தான் இருந்திருக்குமோ என்று, மக்கள் தாங்கள் வாழ்கிற காலத்தில் ஒரு தெய்வத்தை தரிசித்தார்கள் என்றால் […]

சீமான் கட்சியில் அண்ணியார் பதவிக்கு வருகிறாரா..? பொதுக்குழு சர்ச்சை

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு நடந்துமுடிந்து சில நாட்கள் ஆன பிறகும், அந்த கூட்டத்தில் முதல் வரிசையில் சீமானின் மனைவி கயல்விழி அமர்ந்திருந்த விவகாரம் படு சர்ச்சையாக மாறிவருகிறது. ஏனென்றால் வாரிசு விவகாரத்தை முன்வைத்தே சீமான் தி.மு.க. மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் வைத்திருக்கிறார். இதில் தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சியில் இருக்கும் வாரிசுகளுக்கு எதிராக கடுமையாக விமர்சனம் வைத்திருக்கிறார். உதயநிதியை இன்னமும் திட்டிக்கொண்டு இருக்கிறார். மற்ற கட்சிகளுக்கு எதிராக விமர்சனம் செய்தவர் இப்படி முன்வரிசையில் மனைவியை உட்கார […]