News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சூர்யாவை ஏமாற்றினாரா வெற்றிமாறன்..? வாடிவாசலில் நுழைகிறார் தனுஷ்

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட, ‘வாடிவாசல்’ படத்துக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவியது. சூர்யா இந்த படத்துக்காக நிறையவே ஹோம் ஒர்க் செய்து வந்தார். ஜல்லிக்கட்டு கதை என்பதால் மாடுகளுடன் பழகி, மாடு பிடிப்பவர்களுடன் கலந்து பேசிவந்தார். ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய தருணத்திலிருந்தே நிறைய பிரச்னைகள் வந்தன. வெற்றிமாறன் மேக்கிங் ஸ்டைலுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் ஏனோ சரிப்பட்டு வரவில்லை. அதனால், சூட்டிங்கில் சின்னச்சின்ன மனஸ்தாபங்கள் நிகழ்ந்தன. இந்த நேரத்தில் தான் திடீரென இந்த பிராஜெக்ட்டில் அமீரை […]

சட்டப்பேரவையில் கவர்னர் ஆர்.என்.ரவி ஆவேச மோதல்… உரை புறக்கணிப்பு

கடந்த சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்து பரபரப்பை ஏற்படுத்திய கவர்னர் ஆர்.என்.ரவி இந்த ஆண்டு தமிழக அரசு தயாரித்த உரையை படிக்காமல் புறக்கணிப்பு செய்திருக்கிறார். இன்ற் சரியாக 10 மணிக்கு ஆளுநர் உரை தொடங்கியது.  தமிழில் பேசத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி,  “தேசிய கீதத்தை கூட்டத்தின் தொடக்கத்திலேயே இசைக்க வேண்டும். அந்த மரபு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது” என்று இரண்டே நிமிடத்தில் தன்னுடைய உரையை முடித்துக்கொண்டார். இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு அந்த உரையை வாசித்தார். தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் […]

10 லட்சம் பூக்களுடன் மலர்க் கண்காட்சி… சென்னை மக்களுக்கு குஷியோ குஷி

வழக்கமாக குளிர் பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களில் மட்டுமே மலர்க் கண்காட்சிகள் நடத்தப்படும். இதனை எல்லோரும் பார்த்து ரசிக்க வாய்ப்பு இருக்காது. எனவே, அப்படியொரு மலர்க் கண்காட்சி சென்னையில் நடந்தால் எப்படியிருக்கும் என்று பரிசோதனை முயற்சியாக கடந்த ஜூன் மாதம் ஒரு மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டது. அதற்கு நிறைய வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இந்த ஆண்டு சென்னை செம்மொழி பூங்காவில் மலர்க் கண்காட்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் […]

சீமானுக்கு என்.ஐ.ஏ. சம்மன்..? திட்டமிட்டு சீமானை மாட்டிவிட்ட சாட்டை துரைமுருகன்

என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ‘நாங்கள் என்ன செய்தாலும் அது சீமானுக்குத் தெரியும், அவரது முழு கட்டுப்பாட்டில் இருக்கிறோம், அவரது கட்டளைப்படியே செயல்படுகிறோம்’ என்று சொல்லி சீமானை அவரது நிர்வாகிகள் மாட்டிவிட்டதாக செய்திகள் கசிகின்றன. கடந்த 2ம் தேதி தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக், கோவை ரஞ்சித், இசை மதிவாணன், பாலாஜி, முருகன் ஆகியோரது வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் லேப்டாப், செல்போன்கள், […]

நட்டா வரும் நேரத்தில் குட்டையைக் குழப்பும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

தமிழக பா.ஜ.க.வின் அரசியல் மையக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சென்னைக்கு வருகை தரும் நிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளிப்படையாக குற்றம் சாட்டியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க.வின் அசைக்க முடியாத கூட்டாளியாக இருந்தவர் புதிய தமிழகத்தின் கிருஷ்ணசாமி. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவர் பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து தென்காசி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கோவையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தன்னுடைய […]

தமிழக முதல்வர் விஜய்… புதுவை முதல்வர் புஸ்ஸி ஆனந்த்..? புஸ்ஸியின் கேரள மாந்திரீக வில்லங்க பிளாஸ்பேக்

நடிகர் விஜய்க்கும் அவரது கட்சி நிர்வாகிகள், ரசிகர்களுக்கு மட்டுமின்றி குடும்பத்தினருக்கும் இடையில் நந்தி போன்று நிற்பவர் புஸ்ஸி ஆனந்த். யார் இந்த புஸ்ஸி ஆனந்த் என்று விசாரித்தால் எக்கச்சக்க வில்லங்க விவகாரங்கள் வந்து கொட்டுகின்றன. முதலில் அவர் பெயருக்கு முன்னே இருக்கும் புஸ்ஸி பற்றி பார்க்கலாம். புதுவையில் சுமார் 5,000 ஓட்டுகள் உள்ள சிறிய சட்டமன்றத் தொகுதி தான் ‘புஸ்ஸி தெரு’. இந்த தொகுதியில் புதுச்சேரி கண்ணன் தொடங்கிய புதுவை மாநில காங்கிரஸ் சார்பில், 2006-ம் ஆண்டு […]

விஜய்யுடன் மோதும் வேல்முருகன்..? யாருக்கு கிடைக்கும் டிவிகே..?

தமிழக வாழ்வுரிமைக் கட்சியைத் தொடங்கி நடத்திவருகிறார் தி.வேல்முருகன். இவர் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாக இடம் பிடித்து சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். இவரது தமிழக வாழ்வுரிமைக் கட்சியை ஆங்கிலத்தில் டிவிகே என்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார். இப்போது விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றி கழகத்தையும் டிவிகே என்றே பதிவு செய்திருக்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் வேல்முருகன்ன், ‘நடிகர் விஜய் தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரை ஆங்கிலத்தில் டிவிகே என்று […]

ரஜினியின் லால் சலாம் படம் எப்படி இருக்குது…? எக்ஸ்பிரஸ் விமர்சனம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோவாக நடித்திருக்கும்  லால் சலாம்திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் கேமியோவாக நடிக்கிறார் என்றாலும் படம் எப்படி என்று நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் ஹீரோவாக நடித்துள்ளனர். மும்பை ரிட்டர்ன்ஸ் கேங்ஸ்டர் மொய்தீன் பாய் கேரக்டரில் ரஜினி நடித்திருக்கிறார். ரஜினிகாந்த் மொத்தமே 20 நிமிடங்கள் மட்டுமே படத்தில் வருகிறார் என்றாலும் தெறிக்கவிடுகிறார் என்று அவரது ரசிகர்கள் படத்தை பாராட்டித் தள்ளியுள்ளனர். குறிப்பாக, ரஜினி […]

தமிழகத்தில் ஸ்டாலின் டாப்பு… இந்தியாவில் மோடி ஸ்ட்ராங்க்… கருத்துக்கணிப்பில் சீமான் நிலை என்ன..?

நாடாளுமன்ற தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. ஆளும் பா.ஜ.க. கூட்டணிக்கு நெருக்கடி கொடுப்பதற்காக கிட்டத்தட்ட 25 கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி உருவாக்கியிருக்கின்றன. இத்தனை கட்சிகள் சேர்ந்தும் மோடியை வீழ்த்துவது சிரமம் என்பதையே சமீபத்திய கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றன. ‛மூட் ஆப் தி நேஷன்’ என்ற தலைப்பில் ‛இந்தியா டுடே’ மற்றும் ‛ சி வோட்டர்ஸ்’ இணைந்து நாடு முழுவதும் 35,801 பேரிடம் கருத்து கேட்கப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பா.ஜ.க. தனித்து 304 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சி […]

மீண்டும் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு… அப்படின்னா இந்த முறையும் ஜாமீன் கிடைக்காதா..?

இந்த வாரம் செந்தில்பாலாஜி மீது ஜாமீன் மீது நடைபெறும் நேரத்தில் அவருக்கு எதிராக சரியான வாதங்கள் வைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதால், அவரை ஜாமீனில் விடுவிக்க வாய்ப்பு அதிகம் என்று கருதப்பட்டது. இந்த நிலையில், இன்று செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த முறை தமிழ்நாடு காவல்துறை பாதுகாப்பு இல்லை.. சி.ஆர்.பி.எஃப். படை வீரர்கள் இல்லை. தமிழ்நாட்டு பதிவு எண் கொண்ட வாகனங்கள் இல்லை. இதற்குப் பதிலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சிலர் மட்டும் […]