News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

28 கிரிமினல்களை குண்டர் சட்டத்தில் போட்ட சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர்… அலறி ஓடும் கஞ்சா பார்ட்டிகள்

போதைக்கு கஞ்சா மட்டுமின்றி வலி நிவாரண மாத்திரைகளையும் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். அனைத்து வகையிலான கஞ்சா மற்றும் போதை குற்றவாளிகளையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையிலான டீம் கைது செய்து அதிரடி காட்டியுள்ளது. புதுப்புது வழிகளில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை சென்னை பெருநகரில் உலவவிடும் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்யுமாறு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், […]

அரசு நிலங்களை தனியாருக்கு கொடுத்து கோடிகளில் மோசடி..? தில்லுமுல்லு அதிகாரிகளைக் கண்டுபிடிக்க விசாரணைக் குழுக்கள்

அரசுக்கு சொந்தமான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை, பதிவுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் சிலரின் துணையோடு, தனி நபர்களுக்குப் பெயர் மாற்றம் செய்து கோடிக்கணக்கில் கொள்ளை அடிப்பதாக அரசுக்கு புகார்கள் தொடர்ந்து வருகின்றன. இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய அரசு விசாரணைக் குழு அமைத்துள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் தனி நபர்களுக்குப் பட்டா வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும், அதன் அடிப்படையில் அரசு நிலம் முறைகேடாக பதிவு செய்து ஆவணங்கள் பெறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதோடு, முறைகேடான […]

தேர்தலில் நிற்காமலே எம்.பி. ஆகிறார் கமல்ஹாசன்…? மக்கள் நீதி மய்யம் 7ம் ஆண்டில் தி.மு.க.வுடன் டீல் ஓவர்

இன்று மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு ஏழாம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிற்காமலே கமல்ஹாசன் எம்.பி.ஆகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்லன. ஏழாம் ஆண்டு குறித்து கமல்ஹாசன், ‘கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகியகாலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம். பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோசிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம். மக்களுக்கு அவர்களுடையகடமையை நினைவுறுத்துவதும், தலைமைக்குத் தயார்படுத்துவதும் தேர்தல் வெற்றிகளை விட முக்கியமானது.ஜனநாயகத் தேரை நாம் அனைவருமே சேர்ந்துதான் […]

உயிருக்கு அஞ்சாமல் டெல்லிக்குப் படையெடுக்கும் விவசாயிகள்.. கலவர எச்சரிக்கை

விவசாயப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, டெல்லி நோக்கி விவசாயிகள் செல்வதற்குத் தயாராகிறார்கள். பஞ்சாப் – ஹரியாணாவை ஒட்டிய ஷாம்பு எல்லையில் 14 ஆயிரம் விவசாயிகள் 1200 டிராக்டர்கள், 300 கார்கள், 10 மினி பஸ்களுடன் குவிந்துள்ளனர். கடந்தமுறை டெல்லியை நோக்கி […]

உதயமாகிறது அ.தி.முக. (ஓ.பி.எஸ்.), எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் இரட்டை இலை சிக்கல்

அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேடு போன்றவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வெளியானது. அதாவது, அ.தி.மு.க.வின் பெயர், கட்சி, கொடி, இரட்டை இலை சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் பயன்படுத்த நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று கூறிய பன்னீர்செல்வத்துக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக கருதப்பட்டது. […]

திருமாவின் டெல்லி விசிட்டில் ஆதவ் அர்ஜூனன்..! ரவிக்குமாருக்கு அம்புட்டுத்தான்.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் திடீரென நுழைந்து துணை பொதுச்செயலாளராக பதவி உயர்வு பெற்றிருக்கும் ஆதவ் அர்ஜூனனுக்கு கட்சிக்குள் எதிர்ப்புகள் நிலவி வந்தாலும், அவரை எம்.பி. பதவிக்கு நிறுத்துவது உறுதி என்பது போன்று திருமாவின் டெல்லி விசிட் நடந்திருக்கிறது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாட்டைக் கடிதமாக எழுதி அதனை முன்னாள் குடியரசுத் தலைவரும், இத்திட்டத்தை ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் தலைவருமான ராம்நாத் கோவிந்த் அவர்களை சந்தித்து திருமாவளவன் வழங்கினார். இந்த […]

விஜய் ரசிகர்களுக்கு இது செய்யணும் என்பது கூட தெரியாதா..? 20 பேர் மீது வழக்குப் பதிவு

தமிழக வெற்றிக் கழகம் என்று அறிக்கை மூலம் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், 2 கோடி உறுப்பினர் சேர்க்கைக்கு உத்தரவு போட்டிருக்கிறாராம். இதையடுத்து ஊர் முழுவதும் கொடி ஏற்ற வேண்டும் என்றும் உத்தரவு போட்டிருக்கிறார்கள். இதையடுத்து உளுந்தூர் பேட்டையில் கொடி ஏற்றி விட்டார்கள். ஆனால்  கிராமங்களில் கொடியேற்றுவதற்கு வருவாய்த்துறை, காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி வைக்கப்பட்ட த.வெ.க. கொடிக் கம்பங்களை போலீசார் அகற்றியதால் பரபரப்பு நிலவியது. இப்படி அனுமதியின்றி கட்சிக் கொடி ஏற்றியதாக […]

கூவத்தூர் கும்மாளத்திற்கு நடிகை த்ரிஷாவை கூட்டிச் சென்றாரா கருணாஸ்..? எடப்பாடி டீமுக்குள் கசமுசா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூவத்தூரில் நடிகைகளை எல்லாம் கூட்டி வந்து, எம்.எல்.ஏக்களை வைத்து கும்மாளம் அடித்தார் என்கிறார் ஏ.வி ராஜூ. இவர் சேலம் அ.தி.மு.க. மேற்கு ஒன்றியச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர். இவருக்கும் சேலம் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் வெங்கடாசலத்துக்கும் இடையிலான மோதல் காரணமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதன்படி, மாநகர மாவட்டச் செயலாளர் வெங்கடாசலத்துக்கு 1,000 கோடி ரூபாய் சொத்து இருப்பதைப் பார்க்கும்போது, அவர் எடப்பாடி பழனிசாமிக்கு பினாமியாக இருப்பார் […]

அடேங்கப்பா… செல்வப்பெருந்தகை இத்தனை கட்சி மாறியிருக்காரா..? இந்த விஷயம் ராகுலுக்குத் தெரியுமா..?

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக வந்திருக்கிறார் செல்வப்பெருந்தகை. பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த தலைவர்கள் இப்போது செல்வப்பெருந்தகை மீது வழக்கம் போல் புகார் கடிதங்கள் அனுப்பத் தொடங்கிவிட்டனர். அதில் முக்கியமானது என்ன தெரியுமா..? அவர் ஏராளமான கட்சிகள் மாறியிருக்கிறார் என்பதுதான். முதன்முதலாக பூவை மூர்த்தியார் கட்சியில் இணைந்து பணியாற்றினார். அதன் பிறகு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறி, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கட்சியில் சேர்ந்தார். அங்கேயும் ஜாதி பஞ்சாயத்து […]

நடிகர் விஜய்யின் முதல் அரசியல் கூட்டத்தில் என்ன ஸ்பெஷல்..?

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை பனையூர் தலைமை நிலைய செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் அணித் தலைவர்கள் பங்கேற்றார்கள். கலந்துகொண்டனர். கட்சி தொடங்கப்பட்ட பிறகு விஜய் நடத்தும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் முதலில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள். அந்த உறுதிமொழியில், ’நம் நாட்டின் விடுதலைக்காகவும், நமது […]