News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

12 மாதத்தில் டபுள் ஆகும் முதலீடு… 300 பேரிடம் 15 கோடி ரூபாய் சீட்டிங் செய்த கும்பல் கைது..!

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் அன்னை கேப்பிடல் சொலிசன்ஸ், அன்னை இன்போசாப்ட் சொலிசன்ஸ், அன்னை அகாடமி பிரைவேட் லிமிடெட், தமிழ் அன்னை ஹாலிடஸ் லிமிடேட் ஆகிய பெயர்களில்  ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்திவந்த தினேஷ்குமாரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து தன்னிடம் 88 லட்சம் ரூபாய் ஏமாற்றிவிட்டதாக மணலியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளிரிடம் ஒரு புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில், ’வாடிக்கையாளர்களிடம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் 17,100 ரூபாய் வீதம் […]

தாமரைக்குத் தாவிய காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ. விஜயதாரணி… விஜய் வசந்த் காரணமா..?

கடந்த மூன்று தலைமுறையாக காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருக்கும் விஜயதாரணி இன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் டெல்லியில் அதிகாரபூர்வமாக பா.ஜ.க.வில் இணைந்துவிட்டார். கடந்த ஒரு மாதம் நடந்துவந்த இழுபறிக்கு முடிவு கிடைத்துவிட்டது. கட்சி மாறியதற்கு காரணம் கேட்டபோது, “பிரதமர் மோடியின் தலைமையில் சர்வதேச அளவில் இந்திய தேசம் பல சாதனைகளைப் புரிந்து வருவதால் அவரின் தலைமையில் அரசியல் பணியாற்ற பாஜகவில் இணைந்துள்ளேன்” என்று கூறினாலும் விஜய் வசந்த் மீது இருந்த கோபத்தாலே கட்சி மாறியதாக கூறப்படுகிறது. […]

எக்ஸ் எம்.எல்.ஏ. கந்தன் மகன் 500 பவுன் வரதட்சனை கொடுமை விவகாரத்தில் புது வில்லங்கம்…. கைது இல்லையா..?

சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.பி.கந்தன் தற்போது அ.தி.மு.க.வில் சென்னை புறநகர் மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இவர் மகனும் அ.தி.மு.க. கவுன்சிலருமான கே.பி.கே.சதீஷ்குமாருக்கும் மருத்துவரான ஸ்ருதி பிரியதர்ஷினிக்கும் கடந்த 2018ம் நடைபெற்றது. இந்த நிலையில் கே.பி.கந்தன் குடும்பத்தினர் தனது மகளிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக ஸ்ருதியின் தந்தை ஆவடி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், “திருமணத்தின் போது மகளுக்கு 500 பவுன், மருமகனுக்கு 100 பவுன் தங்க நகைகளும், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ […]

பிரதமர் யாருன்னு எடப்பாடி பழனிசாமி தீர்மானிப்பாராம்… அ.தி.மு.க. ஐ.டி. விங்க் சொல்றாங்கப்பா

ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை கொண்டாடியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, ‘ஆட்சியிலும் சரி, அரசியலிலும் சரி, எந்தவிதத்திலும் சமரசம் இல்லாமல், யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல், சமநிலையோடு, சமதர்மத்தோடு, சமூக நீதியோடு அரசாண்ட சிங்க நிகர்த் தலைவி நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். தன்னுடைய வாழ்வு இந்த மக்களுக்கான தவ வாழ்வு. எப்போதும் மக்களிடத்திலே அதை நிரூபிக்கின்ற விதமாக “உங்களால் நான், உங்களுக்காகவே நான்” என்று தொடர்ந்து மக்கள் முன் சூளுரை ஏற்று, அதன்படி மக்கள் பணியாற்றிய […]

நெல்லை கல் குவாரி 700 கோடி ரூபாய் ஊழலுக்கு சீமான் போர்க்கொடி

திருநெல்வேலி மாவட்டத்தின் கல் குவாரிகளில் தமிழ்நாடு அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் 700 கோடி ரூபாய் ஊழலை ஆதாரங்களுடன் வெளிக்கொண்டுவந்துள்ளது அறப்போர் இயக்கம். இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த வள வேட்டையைத் தொடரப்போகிறது திமுக அரசு? திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் கல் குவாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டப் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனராக இருந்த திரு நிர்மல்ராஜ் IAS, முறைகேடாக இயங்கிய (54 குவாரிகளில் 53 குவாரிகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட 281 சதவீதம் அதிகமாக, சட்ட விரோதமாக […]

பிரதமர் மோடியை சந்திக்கும் பன்னீர், தினகரன் மற்றும் திருநாவுக்கரசர்..? அண்ணாமலை தீவிர வேட்டை

பாரதப் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கவிருக்கும் என் மண் என் மக்கள் பயணத்தின் நிறைவு நாள் விழா, வரும் பிப்ரவரி 27 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறவிருக்கிறது. மாநாட்டுத் திடலை பார்வையிட்ட அண்ணாமலை, விழாவில் மோடி முன்னிலையில் வி.ஐ.பி.களை இணைப்பதற்கு அதி தீவிரமாக வேட்டை நடத்திவருகிறார். இந்த மீட்டிங்கில் தன்னுடைய பலத்தைக் காட்டுவதற்கு அண்ணாமலை முயற்சி செய்துவந்தாலும் இதுவரை பா.ம.க., த.மா.கா., தே.மு.தி.க. ஆகிய எவையுமே முடிவுக்கு வராமல் இழுத்தடிக்கின்றன. காரணம் பா.ம.க, த.மா.கா ஆகிய கட்சிகள் […]

காவலரின் மனிதாபிமானத்துக்கு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு

காவல் துறைக்கு சல்யூட் அடிக்கும் வகையில் அவ்வப்போது சில நல்ல செயல்கள் அரங்கேறுகின்றன. அப்படி ஒரு செயலை செய்திருக்கும் ஆயுதப்படை காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவைச் சேர்ந்த இரண்டாம் நிலைக்காவலர் பி.விக்னேஷ் பாண்டி என்ப்வர் என் 2 காசிமேடு காவல் நிலைய சுற்றுக் காவல் வாகனத்தின் ஓட்டுனராகப் பணிபுரிந்து வருகிறார். விக்னேஷ் பாண்டி, கடந்த 20.02.2024 […]

மதுரையில் விஜய் கட்சியின் முதல் மாநாடு..! ஏப்ரலுக்கு ரெடி போஸ்டரை அடி

அரசியல் சென்டிமென்ட் வகையில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா தொடங்கி விஜயகாந்த், கமல்ஹாசன் என்று அத்தனை பேரும் முக்கியமான நிகழ்ச்சிகளை மதுரையில் தொடங்குவார்கள். இதே பாணியில் நடிகர் விஜய்யும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் தொடங்க இருக்கிறாராம். ஏப்ரல் மாத இறுதியில் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் அதற்குள் முடிந்துவிடும் என்று கணக்குப் போட்டே ஏப்ரல் இறுதி என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். எனவே, நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு, இந்த […]

அண்ணாமலைக்கு பிரதமர் மோடி கடைசி வாய்ப்பு… தமிழக பயணத்தில் பிரேமலதா சந்திப்பு.?

தமிழகத்தில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று அண்ணாமலை தினமும் கூறிவருகிறார் என்றாலும் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. சமீபத்தில் சுதீஷை விமானப் பயணத்தில் அண்ணாமலை சந்தித்துப் பேசியதை அடுத்து, பிரதமர் பயணத்தின் போது பிரேமலதா மேடை ஏற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலைக்கு டெல்லி கொடுக்கும் கடைசி வாய்ப்பாக பிரதமர் வருகை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதன்படி 2 நாட்கள் தமிழகத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்கிறார். அதன்படி, வரும் 27ம் தேதி மதியம் […]

எடப்பாடி பழனிசாமிக்கு பா.ம.க. ஆதரவு உறுதி..? மம்தா கட்சியுடன் தேர்தல் கூட்டணி குளறுபடி

தினமும் ஏதேனும்  ஒரு கட்சி அல்லது அமைப்பைச் சேர்ந்தவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின்றன. அந்த வகையில் மம்தாவின் திருணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்ததாக கூறப்படும் விவகாரத்தில் நிறைய வில்லங்கம் வெளிவந்துள்ளன. திருணாமுல் காங்கிரஸ் தமிழ் மாநில தலைவர் கலைவாணன்  எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு திருணாமுல் காங்கிரஸின் தமிழ் மாநில பிரிவு முழு ஆதரவை தெரிவிப்பதாக ஆதரவு கடிதத்தை தன்னுடைய மாநில நிர்வாகிகளுடன் வழங்கினார். […]