தி.மு.க. பணத்தை தமிழக மக்களுக்குத் தருவதாக மோடி உத்தரவாதம்..! விரைவு ஈனுலை தொடக்கம்… போதைக்கு எச்சரிக்கை

கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘தற்சார்பு இந்தியா’ கொள்கையின் அடிப்படையில், 500 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட நாட்டின் முதலாவது விரைவு ஈனுலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஈனுலையை திறந்து வைத்த பிரதமர், ‘கோர் லோடிங்’ பணி தொடங்கப்பட்டதையும் பார்வையிட்டார். அணு உலையின் பெட்டகம், கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை சுற்றிப்பார்த்தார். அணு உலையின் முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டறிந்தார். இந்த விரைவு ஈனுலை ஒரு மேம்பட்ட 3ம் தலைமுறை உலை ஆகும். அவசரநிலை ஏற்பட்டால் ஆலையை […]
பிரதமர் மோடி, ஸ்டாலினுக்கு சீமான் கடும் எதிர்ப்பு… அணுவுலைக்கு எதிராக ஆவேசப் போர்

பிரதமர் மோடி தமிழகம் வரும் நேரத்தில் எல்லாம் தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகளும், ‘கோ பேக் மோடி’ என்று டிரெண்டிங் செய்வது வழக்கம். ஆனால், இன்றைய பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் கல்பாக்கம் ஈணுலைத் திட்டத்துக்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். நாம் சின்னத்தின் விவசாயி சின்னம் பறிபோக அண்ணாமலையே காரணம் என்று பொதுவெளியில் நாம் தமிழர்கள் கடுமையாக விவாதிக்கும் நிலையில், இந்த எதிர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இன்று சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை கல்பாக்கத்திலுள்ள அணுவுலை […]
கிருஷ்ணசாமியை வளைத்துப்போட்ட எடப்பாடி பழனிசாமி…. அதிர்ச்சியில் அண்ணாமலை

பிரதமர் நரேந்திரமோடி சென்னைக்கு வரயிருக்கும் நிலையில், அவருடன் கூட்டணித் தலைவராக பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட புதிய தமிழகம் கிருஷ்ணசாமி திடீரென எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியிருப்பது தமிழக பா.ஜ.க.வில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டில் செயல்பட்டு வந்தாலும் அவர் விரும்பிய தென்காசி மக்களவைத் தொகுதியை கொடுக்க பா.ஜ.க. முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பாஜக மீது அதிருப்தி அடைந்த கிருஷ்ணசாமி, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் […]
தமிழகத்தை கைகழுவிய மோடி… பா.ஜ.க.வின் முதல் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் இந்த முறை பிரதமர் நரேந்திரமோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டு வந்த நிலையில், மீண்டும் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி நிற்பதாக முதல் பட்டியலை மத்திய பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை பா.ஜ.க. பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே டெல்லியில் பட்டியலை வெளியிட்டார். இதில் 195 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அவர்களில் 28 பேர் பெண்கள், 47 பேர் இளைஞர்கள், 27 பேர் எஸ்சி, 18 […]
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அ.தி.மு.க. சவால்..! கூட்டணிக்கு வாய்ப்பே இல்லீங்க

தங்களுடைய கூட்டணிக்கு அ.தி.மு.க. எப்படியும் வந்துவிடும் என்ற காரணத்தாலே ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை பிரதமருடன் மேடை ஏற்றாமல் அண்ணாமலை தாமதம் செய்துவந்தார். ஆனால், அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்குக்கு வாய்ப்பே இல்லை என்பது போல் சம்பவம் செய்திருக்கிறார் கே.பி.முனுசாமி. கிருஷ்ணகிரியில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’தமிழர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்கிறார்கள் மத்திய அமைச்சர்கள். எல்.முருகன் தமிழகத்தில் போட்டியிட்டு ஜெயிக்க முடியாது என்பதாலே அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கிவிட்டனர். தமிழக மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் […]
அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு Thermal CTP இயந்திரத்தை துவக்கி வைத்தார்கள்

சென்னை, தங்கசாலையில் உள்ள அரசு மைய அச்சகத்தில் இன்று (02.03.2024) மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சுவாமிநாதன் அவர்கள், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு, ஆகியோர் 2023-2024 ஆம் ஆண்டு சட்டபேரவை அறிவிப்பின்படி, ரூ 2,16,49,127/- மதிப்பில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் நிறுவப்பட்ட Thermal CTP இயந்திரத்தை துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் திருமதி வெ. ஷோபனா, இ.ஆ.ப., மண்டல குழு தலைவர் திரு. […]
சத்தமே இல்லாமல் சாதித்த எடப்பாடி பழனிசாமி… 5 + 1 சீட்டுக்கு பேரம் பேசும் பிரேமலதா..!

சமீபத்தில் நடந்த தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, ‘நாடாளுமன்ற தேர்தலில் 14 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் கொடுக்கும் கட்சியுடன்தான் கூட்டணி’ என அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து சில நாட்களில், ’14 தொகுதிகள் என்பது மாவட்டச் செயலாளர்கள் கேட்ட தொகுதி, தலைமையின் நிலைப்பாடு அது அல்ல’ என்று சட்டென்று இறங்கிப் பேசினார். முதலில் பேச்சுவார்த்தைக்கு முன்வந்த பா.ஜ.க., தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால் 10 தொகுதிகள் தருவதற்கு தயாராக […]
சீமான் மாமா என்னை கவனிங்க… தேர்தலுக்கு விஜயலட்சுமி என்ட்ரி

அவ்வப்போது சீமான் குறித்து வீடியோ வெளியிடுவதும் பின்னர் காணாமல் போவதும் நடிகை விஜயலட்சுமியின் ஸ்டைல். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கேஸ் கொடுத்து சீமானை விடவே மாட்டேன் என்று வீராப்பு காட்டியவர் அதன்பிறகு பெங்களூருக்குப் போய்விட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வீடியோ வெளியிட்டு தேர்தல் கால பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த வீடியோவில் விஜயலட்சுமி, ‘’பெங்களூரில் உள்ள உயரமான கட்டடத்தின் உச்சியில் நின்று கொண்டிருக்கிறேன். மீடியாக்கள் இந்த வீடியோவை என் கணவரான சீமான் பார்க்கும் வரை ஒளிபரப்புங்கள் என […]
அண்ணாமலை போதை எச்சரிக்கை… இன்று மதுரையில் மெத்தபெட்டமைன் பறிமுதல்… ஜாபர் சாதிக்கிற்கு தொடர்பு இருக்கிறதா?

ஒருவழியாக பாதயாத்திரையை முடித்த கையோடு, புதிய கெட்டப்புக்கு மாறியிருக்கும் அண்ணாமலை இப்போது போதை பொருள் கடத்தல் ஜாபர் சாதிக் மேட்டரை மிகத் தீவிரமாக எடுத்து அரசியல் செய்துவருகிறார். தமிழகத்தில் போதைப் பொருட்கள் அதிக அளவில் ஊடுருவி இருப்பதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள் 30 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கும் ஜாபர் சாதிக்கிற்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடந்துவருகிறது. இந்த சம்பவத்தில் ஜாபர் சாதிக் நீண்ட நாட்களாக […]
உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆடுகளம் நடிகர்!

கடந்த 2011ல வெற்றிமாறன் இயக்கத்துல தனுஷ் நடிச்சு தேசிய விருது வாங்கின படம் ஆடுகளம். இந்த படத்துல தனுசுடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்டுச்சுன்னா அதுக்கு காரணம் பேட்டைக்காரன் கேரக்டர்ல நடிகர் ஜெயபாலன் கொடுத்த டப்தான். அதோட பாண்டியநாடு, மெட்ராஜ், இன்று நேற்று நாளை படங்கள்லயும் இவருடைய நடிப்பு சிறப்பாவே இருந்துச்சு. நடிகர், எழுத்தாளர்னு மல்டி டேலண்டடான ஜெயபாலனுக்கு இப்ப வயசு 79. தமிழ், தெலுங்கு, மலையாளம்னு ஆல் லேங்குவேஜ்லயும் பிசியா நடிச்சிட்டு இருந்த ஜெயபாலன் இப்ப கல்லீரல்ல […]

