News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழ்நாடு அரசை கலைக்கும் திட்டமா..? ஜாபர் சாதிக் விவகாரத்தில் அமித் ஷா ஆலோசனை

ஜாபர் சாதிக்கை டெல்லியில் கைது செய்தோம் என என்.சி.பி. அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், அவர் ஜெய்ப்பூரில் இருந்து பாகிஸ்தானுக்குத் தப்பியோட திட்டமிட்டிருந்ததாக பல்வேறு செய்திகள் வெளிவருகின்றன. அதேபோல் ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடக்கும் முன்னரே, அவர் தி.மு.க.வுக்கு 7 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார் என்று செய்திகள் திட்டமிட்டுப் பரப்பட்டு வருகின்றன.   அதேபோல் போதைக் குற்றவாளிகளை கைது செய்திருக்கும் டெல்லி ஸ்பெஷல் செல்லுக்கு இதனை விசாரிக்கும் அதிகாரம் இருக்கும் நிலையில், என்.சி.பி.யிடம் திட்டமிட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் […]

குழந்தை கடத்தல் எதுவும் நடக்கவில்லை….இணை ஆணையர் தர்மராஜன் விளக்கம்..!

சென்னை நுங்கம்பாக்கத்தில் பரவிய குழந்தை கடத்தல் வதந்தி குறித்து கிழக்கு மண்டல இணை ஆணையர் தர்மராஜன் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் 6 வயது சிறுவன் தனது வீட்டு வாசவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் கையை பிடித்து இழுத்து தூக்க முயன்றதாக அங்கு விளையாடிக்கொண்டிருந்த மற்ற குழந்தைகள் சிறுவனின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அந்த ஆசாமியை பிடித்து சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் அந்த நபரை […]

எடப்பாடி பழனிசாமிக்கு கையெழுத்துச் சிக்கல்..? இரட்டை இலை சின்னமும் முடக்கப்படும் அபாயம்

நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவர் மக்களவை தேர்தலில் வேட்பாளர் படிவத்தில் கையெழுத்து போடுவதற்கு தடை விதிக்க கோரி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அ.தி.மு.க.வில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தரப்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு புதிய மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ’பொதுச்செயலாளர் தேர்வு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் […]

மகளிர் தினத்தில் எடப்பாடி பழனிசாமி கேக் வெட்டி கொண்டாட்டம்..! மனிதச்சங்கிலி போராட்டம் அறிவிப்பு

ஒவ்வோர் ஆண்டும் மகளிர் தினக் கொண்டாட்டம் அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் பிரமாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்றும் பிரமாண்ட சைஸ் கேக் வெட்டி எடப்பாடி பழனிசாமி கொண்டாடினார்.  முன்னதாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி, ‘’இந்த இனிய நன்னாளில் தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இன்று கேக் வெட்டி […]

வைகோ, திருமாவுக்கு கையெழுத்து..! காங்கிரஸ்க்கு தி.மு.க. கெடு

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் திருமாவுக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டன. விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் பானை சின்னத்திலும் போட்டியிட்டு ஜெயித்தனர். அதேபோல் ம.தி.மு.க.வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு ஈரோட்டில் கணேச மூர்த்தி உதய சூரியன் சின்னத்தில் ஜெயித்தார், வைகோவுக்கு மாநிலங்களவை பதவி கொடுக்கப்பட்டது. இந்த 2024 தேர்தலில் இரண்டு கட்சிகளும் கூடுதலாக ஒரு சீட் கேட்டு அடம் பிடித்துவந்தன. இந்த நிலையில் அதற்கு கண்டிப்பாக வாய்ப்பே இல்லை […]

நடிகர் அஜித்துக்கு தலையில் அறுவை சிகிச்சை..? சென்னையில் குவியும் ரசிகர்கள்

நடிகர் அஜித்குமாருக்கு தலையில் அறுவை சிகிச்சை நடந்திருப்பதாக வெளிவரும் தகவலால் கவலையடைந்திருக்கும் ரசிகர்கள் சென்னை மருத்துவமனையில் குவிந்து வருகிறார்கள். நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். அஜர்பைஜான் நாட்டில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த மாதம் சென்னை வந்த அஜித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் மீண்டும் அஜர்பைஜான் செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், திடீரென்று அஜித்குமாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரதுஉடல்நிலையை பரிசோதனை செய்து, […]

திருமா பிடிவாதத்தினால் தி.மு.க. கூட்டணிக்கு சிக்கலா..?

எங்களுக்கு அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு தி.மு.க. கூட்டணியில் இருந்து அழைப்பு வரவில்லை என்று திருமாவளவன் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் கூட்டணியில் இருந்து வெளியேறட்டும் என்று தி.மு.க.வினரே கொதிக்கிறார்கள். மூன்று தொகுதிகள் வேண்டும் என்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிடிவாதம் காட்டி வருகிறது! விடுதலை சிறுத்தைகளுக்கு அதிகம் கொடுத்தால் காங்கிரஸ் மற்றும் ம.தி.மு.க.வும் அதிகம் கேட்பார்கள் என்பதால் ஸ்டாலின் அமைதி காத்துவருகிறார். கமல்ஹாசனுக்கு கொடுக்கும் தொகுதியை விடுதலை சிறுத்தைகளுக்குக் கொடுத்துவிடலாம் என்று கூறிவரும் நிலையில் பல்வேறு குழப்பங்கள் […]

நிவேதா பெத்துராஜ்க்கு ஆதரவாக அ.தி.மு.க..? என்னதான் நடக்குது இங்கே..?

அமைச்சர் உதயநிதி துபாயில் நிவேதா பெத்துராஜ்க்கு மிகப்பெரிய சொத்து வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்று சவுக்கு சங்கர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஒட்டுமொத்த சினிமா உலகமும் அரசியல்வாதிகளும் அமைதி காக்கும் நேரத்தில் அ.தி.மு.க.வில் இணைந்திருக்கும் காயத்ரி ரகுராம் கடுமையாக கண்டனம் தெரிவித்திருப்பது ஆச்சர்யத்தை உருவாக்கியிருக்கிறது. சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு குறித்து கண்ணீர் விளக்கம் கொடுத்திருக்கும் நிவேதா, ‘நான் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவள். யாருடைய ஆதரவும் எனக்குத் தேவையில்லை, அதேநேரம், இந்த குற்றச்சாட்டை சட்ட ரீதியாக எதிர்கொள்ளப் போவதில்லை’ என்று தெரிவித்திருந்தார். […]

தி.மு.க. பணத்தை தமிழக மக்களுக்குத் தருவதாக மோடி உத்தரவாதம்..! விரைவு ஈனுலை தொடக்கம்… போதைக்கு எச்சரிக்கை

கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘தற்சார்பு இந்தியா’ கொள்கையின் அடிப்படையில், 500 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட நாட்டின் முதலாவது விரைவு ஈனுலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஈனுலையை திறந்து வைத்த பிரதமர், ‘கோர் லோடிங்’ பணி தொடங்கப்பட்டதையும் பார்வையிட்டார். அணு உலையின் பெட்டகம், கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை சுற்றிப்பார்த்தார். அணு உலையின் முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டறிந்தார். இந்த விரைவு ஈனுலை ஒரு மேம்பட்ட 3ம் தலைமுறை உலை ஆகும். அவசரநிலை ஏற்பட்டால் ஆலையை […]

பிரதமர் மோடி, ஸ்டாலினுக்கு சீமான் கடும் எதிர்ப்பு… அணுவுலைக்கு எதிராக ஆவேசப் போர்

பிரதமர் மோடி தமிழகம் வரும் நேரத்தில் எல்லாம் தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகளும், ‘கோ பேக் மோடி’ என்று டிரெண்டிங் செய்வது வழக்கம். ஆனால், இன்றைய பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் கல்பாக்கம் ஈணுலைத் திட்டத்துக்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். நாம் சின்னத்தின் விவசாயி சின்னம் பறிபோக அண்ணாமலையே காரணம் என்று பொதுவெளியில் நாம் தமிழர்கள் கடுமையாக விவாதிக்கும் நிலையில், இந்த எதிர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இன்று சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை கல்பாக்கத்திலுள்ள அணுவுலை […]