மன்சூர் அலிகானுக்கு வந்த யோகத்தைப் பாருங்கப்பா… அ.தி.மு.க.வுடன் 2 சீட்டுக்கு கூட்டணிப் பேச்சுவார்த்தை

அ.தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து முக்கியப் புள்ளிகள் எல்லாம் போயஸ் தோட்டத்து வாசலில் காத்துக்கிடந்தது ஒரு காலம். இப்போது மன்சூர் அலிகானுடன் கூட்டணி பேசும் அளவுக்கு கட்சி நிலைமை மாறியிருக்கிறது. ராமதாஸ் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தே கூட்டணிப் பேச்சுவார்த்தையை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். ஆனால், பா.ஜ.க.வும் பெரிய ஆஃபர் கொடுப்பதால் அன்புமணி அந்தப் பக்கம் செல்வதற்கே ஆர்வம் காட்டுகிறார். பிரேமலதாவை கடந்த தேர்தலில் கேட்டுக்குப் பக்கத்தில் வரவிடாமல் விரட்டியடித்தார்கள். எனவே, அவரும் பா.ஜ.க.வுடனே […]
ஸ்டாலினால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் தடுக்க முடியுமா..? உண்மை நிலை என்ன..?

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவசரகதியில் சிஏஏ சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளதாக கூறியிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த சட்டத்தினால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப்போவதில்லை என்பதால் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே அரசின் கருத்து என்று கூறியிருக்கிறார். இந்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று ஸ்டாலின் கூறியிருப்பது போலவே கேரளா, மேற்குவங்கம், பீகார், ராஜஸ்தான், ஆந்திரா, […]
நைட் 2 மணிக்கு சம்பவம் செய்த ராதிகா… ச.ம.க.வுக்கு சங்கு ஊதிய சரத்குமார்

மக்களவைத் தேர்தல் கூட்டணிக்கு கட்சி தேடும் பா.ஜ.க.விடம் சிக்கிய நடிகர் சரத்குமார், அவரது சமத்துவ மக்கள் கட்சியை திடீரென கலைத்திருப்பது திடீர் திருப்பமாக பார்க்கப்படுகிறது. சில நாள்களுக்கு முன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பா.ஜ.க.வுடன் கூட்டணியை உறுதி செய்தார். இந்த நிலையில் திடீரென தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்னிலையில், தனது கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்துவிட்டார். சென்னையில் ச.ம.க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதை அடுத்து, ராதிகா இரவு 2 […]
தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்ட்களுக்கு தொகுதி அறிவிப்பு… துரை வைகோவுக்கு விருதுநகரா..?

தமிழகத்தில் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இன்னமும் கூட்டணிப் பேச்சுவார்த்தையே முடிக்காமல் ஜவ்வாக இழுத்துவரும் நிலையில், கூட்டணியை முடிவு செய்துவிட்ட தி.மு.க. இப்போது தொகுதிப் பங்கீட்டையும் அறிவிக்கத் தொடங்கிவிட்டது. ஏற்கெனவே ராமநாதபுரம் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தி.மு.க. ஒதுக்கிவிட்டது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் மக்களவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய இரண்டு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது திருப்பூர் தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் சுப்பராயனே மீண்டும் நிற்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. […]
மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய் பிச்சை… குஷ்புக்கு வாய்க்கொழுப்பு..?

தமிழக பெண்களுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கிவருவதை தி.மு.க.வின் சாதனையாக சொல்லிவருகிறது. இந்த நிலையில் மாதம் ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டா மக்கள் ஓட்டு போடுவாங்களா என்று குஷ்பு கூறியது பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. போதைப் பொருள் எதிர்ப்பு போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நிர்வாகியும், தேசிய மகளிரணி ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பூ, ‘ தமிழ்நாட்டில் போதைப்பொருள் பிரச்சினை தலைவிரிச்சு ஆடிட்டு இருக்கு. அதை திமுக அரசு தீர்த்து வைக்கல. […]
மோடியை விமர்சிக்க விஜய்க்கு என்ன பயம்..? முதல் அறிக்கை ரிப்போர்ட்

அரசியலில் இறங்குவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தை உருவாக்கியிருக்கும் நடிகர் விஜய் முதன்முதலாக இரண்டு வரியில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அது தமிழகம் முழுக்கவே சலசலப்பு ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அறிக்கையில், ‘சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ் நாடில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். […]
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் மோடிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் மன்னிப்பு கிடையாது..! முதல்வர் ஸ்டாலின் கடும் ஆவேசம்

குடியுரிமை சட்டத் திருத்தம் கொண்டுவந்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம் – இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக மாற்றியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இசுலாமிய மதத்தவரையும், இலங்கைத் தமிழரையும் வஞ்சிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இயற்றியது ஒன்றிய பா.ஜ.க அரசு. அதனை தி.மு.க உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன. ஆனால் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியான அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததால்தான் அச்சட்டம் […]
மோடியிடம் மந்திரி பதவி… எடப்பாடியிடம் துணை முதல்வர்…இரண்டுக்கும் ஆசைப்படும் அன்புமணி

தி.மு.க. கூட்டணி முழுமையாக முடிவுக்கு வந்த பிறகும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் குழப்ப நிலை நீடிக்கிறது. அதற்கு ஒரே காரணம் பாட்டாளி மக்கள் கட்சியின் பேராசை பேச்சுவார்த்தை என்று சொல்லப்படுகிறது. இந்த முறை எப்படியும் தி.மு.க.வில் இணைந்துவிட வேண்டும் என்றே ராமதாஸ் ஆசைப்பட்டார். ஆனால், திருச்சியில் வி.சி.க மாநாட்டில் ஸ்டாலின் அதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலைப்பாட்டை தெளிவாக உணர்த்திவிட்டார். இதையடுத்து வழக்கம் போல ஒரே நேரத்தில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தையை பா.ம.க. நடத்திவருகிறது. […]
கூட்டணித் தலைவராக பிரதமர் மோடியுடன் மேடை ஏறும் பன்னீர்..! இரட்டை இலைக்கு வாக்குறுதி

கடந்த இரண்டு முறை பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த நிலையில், கூட்டணித் தலைவர்கள் மேடை ஏற்றப்படுவார்கள் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், கூட்டணி அமையாத காரணத்தால் அந்த வாய்ப்பு பன்னீர், தினகரனுக்குக் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் நேர்காணல் நடத்தினார். சுமார் 600 பேர் போட்டியிட விருப்பமனு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்ற பா.ஜ.க. அணியினர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை […]
கமலஹாசனுக்கு கடைசி வரையிலும் தூண்டில் போட்ட நிர்மலா சீதாராமன்… தேர்தல் சீக்ரட் எக்ஸ்போஸ்

நாடாளுமன்றத் தேதி அறிவிக்கப்படும் முன்னதாகவே தி.மு.க. கூட்டணி பங்கீடு வெற்றிகரமாக முடிந்துவிட்டது. கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணியில் இணையவிடாமல் தடுப்பதற்கு பா.ஜ.க. கடைசி நாள் வரையிலும் முயற்சி மேற்கொண்ட தகவலை தி.மு.க. மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியை ஆதரித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். 2025ம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை […]

