செளமியா அன்புமணி வாரிசு அரசியல் கிடையாதாம்… அண்ணாமலை புதிய கண்டுபிடிப்பு

தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு எதிராக பா.ஜ.க. போராடுகிறது என்று பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி அண்ணாமலை வரையிலும் மாற்றி மாற்றி பேசி வருகிறார்கள். இந்த நிலையில், செளமியா அன்புமணி தேர்தலில் நிற்பது வாரிசு அரசியல் இல்லை என்று பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அண்ணாமலை. தர்மபுரிக்கு வேறு ஒரு வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென பா.ம.க. சார்பில் செளமியா அன்புமணி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு, அவர் ஜெயித்து அமைச்சராகப் போகிறார் என்றும் பிரசாரம் செய்கிறார்கள். இந்த வாரிசு அரசியல் குறித்து […]
பாத்திமாவுக்கு இல்லை… வீரப்பன் மகளுக்கு சீட்டு… சீமான் கட்சிக்குள் களேபரம்

மக்களவைத் தேர்தல் வேட்பாளராக சமீபத்தில் பா.ஜக.வில் இருந்து வந்து சேர்ந்திருக்கும் வீரப்பன் மகள் வித்யா ராணியை அறிமுகம் செய்திருப்பது சீமான் தம்பிகளை சோகத்துக்கு ஆளாக்கியுள்ளது. நம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 40 தொகுதிகளின் வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். பாத்திமா பர்ஹானா தான் மத்திய சென்னை வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு பல் மருத்துவர் கார்த்திகேயனை அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் கிருஷ்ணகிரி தொகுதி நா.த.க வேட்பாளராக சந்தன வீரப்பன் மகள் வித்யாராணியை அறிமுகம் […]
கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி.. மேடையில் அழுத துரை வைகோ

’உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம், செத்தாலும் எங்கள் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம்’ என்று மேடையில் கண்கள் கலங்கி சென்டிமென்ட் ஆக துரை வைகோ பேசியதற்கு கணேசமூர்த்தியின் தற்கொலை முயற்சி கொடுத்த அழுத்தமே காரணம் என்றே கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மதிமுகவுக்கு வழங்கப்பட்ட ஒரே தொகுதியில் நின்று வெற்றி பெற்ற கணேசமூர்த்திக்கு இந்த நாடாளுமன்ற தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை. அதற்குப் பதிலாகவே திருச்சியில் துரை வைகோவுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் மார்ச் 24ம் […]
அண்ணாமலை தோற்றுப்போனவுடன் தமிழக பா.ஜ.க. தலைவர் ஆகிறாரா தமிழிசை..?

நாடாளுமன்றத் தேர்தலில் நிற்பதற்கு எனக்கு விருப்பமே இல்லை, ஆனாலும் என்னை நிறுத்தியிருக்கிறார்கள் என்று கூறிவரும் அண்ணாமலைக்கு ஆப்பு ரெடியாக இருக்கிறது என்று பா.ஜ.க.வின் சீனியர்கள் குஷியாகி இருக்கிறார்கள். தன்னுடைய தலைமையில் தமிழகத்தில் பா.ஜ.க. அமோக வளர்ச்சி அடைந்துவிட்டது என்று தொடர்ந்து பேசி வருகிறார் அண்ணாமலை. இதனை உண்மை என்று நிரூபித்துக் காட்டும் வகையிலே அவரை கோவையில் வேட்பாளராக பா.ஜ.க. தலைமை நிறுத்தியிருக்கிறது. இந்த தேர்தலில் நிற்பதற்கு விருப்பம் இல்லை என்றாலும் நிற்க வேண்டிய சூழலுக்கு ஆளாகிவிட்டார். கோவை […]
40 வேட்பாளர்களுக்கும் ஆக்டிங், சூட்டிங், மேடையேற்றம்… சீமான் தனி ரூட்டு

வெல்லப்போறான் விவசாயி சின்னத்தை இழந்துவிட்டாலும் எப்போதும் போல் தனிக்காட்டு ராஜாவாக களம் இறங்குகிறார் சீமான். இன்று அவரது 40 வேட்பாளர்களையும் ஒரே நேரத்தில் மேடையில் ஏற்றி அறிமுகம் செய்ய இருக்கிறார். இதற்காக ஒரு நாள் முழுக்க வேட்பாளர்களுக்கு சூட்டிங் வைத்து, அவர்களுக்கு பேசுவதற்கு சொல்லிக்கொடுத்து முழு நேர இயக்குனராக மாறிவிட்டார் நாம் தமிழர் சீமான். ஒவ்வொரு வேட்பாளர்களும் திடீர் நடிகர்களாக மாறி எப்படி பேசுவது, எப்படி தேர்தல் பரப்புரை செய்வது என்று நடித்துக் காட்டியிருக்கிறார்கள். இந்த நிலையில் […]
ஆளுநர் மாளிகையில் பரப்புரை… கிருஷ்ணாவுக்கு ஆதரவு… ஸ்டாலின் அதகள தேர்தல்

அமைச்சர் பொன்முடியை அமைச்சராக்கியே தீருவேன் என்று உச்ச நீதிமன்றம் வரையிலும் போய் அதனை சாதித்துக் காட்டியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதோடு கவர்னரிடமே, ‘தேர்தல் பரப்புரைக்குக் கிளம்புகிறேன்’ என்று சொன்னதும், ‘ஆல் த பெஸ்ட்’ என்று வாழ்த்துரையும் வாங்கியிருக்கிறார். திருச்சி பொதுக்கூட்டத்தில் இதனை பேசிய ஸ்டாலின், ‘நான் இங்கு தேர்தல் பரப்புரையைத் தொடங்கவில்லை, ஆளுநர் மாளிகையிலே தொடங்கிவிட்டேன்’ என்று தெறிக்க விட்டுள்ளார். அதோடு, பெரியார், அல்லா குறித்து பாடல் பாடிய டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராக எழுந்துள்ள சர்ச்சையில், கிருஷ்ணாவுக்கு ஆதரவாக […]
மானஸ்தன் ராமதாஸ் குடும்பத்திலிருந்து செளமியாவும் வந்தாச்சு..! மோடியின் குடும்ப கட்சி அரசியலுக்கு பதிலடி

நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்செய்யப்பட்டு, அவரது மருமகள் செளமியா அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில்வன்னியர்கள் கடும் ஆவேசத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் முதலில் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணிஅமைந்ததாக தகவல் வெளியான நிலையில், திடீரென பா.ஜ.க.வுடன் சேர்ந்து நிர்வாகிகளுக்குபெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார் ராமதாஸ். பா.ம.க.வுக்கு 10 தொகுதிக பாஜகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 9 தொகுதிகளுக்கானவேட்பாளர் பட்டியலை ராமதாஸ் வெளியிட்டார். அதன்படி, திண்டுக்கல், அரக்கோணம், ஆரணி,கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், விழுப்பும் ஆகிய தொகுதிகளுக்குவேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். […]
பா.ஜ.க. கூட்டணி முடிவுக்கு தேதி குறித்த தங்கர் பச்சான்… அன்புமணி கனவை உடைச்சிட்டாரே

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. பக்கமே பா.ம.க. இருக்கும் என்று எண்ணப்பட்டு வந்த நிலையில், பா.ஜ.க. பக்கம் சாய்ந்துவிட்டது. இந்த கூட்டணியில் அமைச்சராகும் ஆசையில் அன்புமணி இருக்கையில், வில்லங்கமாகப் பேசியிருக்கிறார் வேட்பாளரும் சினிமா பிரபலமுமான தங்கர்பச்சான் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் அக்கட்சி அங்கு போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா அரக்கோணம் – வழக்கறிஞர் […]
வாசனுக்கு 3, தினகரனுக்கு 2 பன்னீருக்கு 1… ஓ.பி.எஸ்.க்கு அவமானமோ அவமானம்

கிட்டத்தட்ட 15 தொகுதிகள் எதிர்பார்த்த நிலையில் ஒன்றே ஒன்று என்று தொகுதி கொடுத்திருக்கிறார்கள். அதில் நின்று மக்களிடம் உள்ள ஆதரவைக் காட்டுவோம் என்று பன்னீர்செல்வம் கூறியிருப்பது வைரலாகி வருகிறது. ஏனென்றால் தொண்டர்கள் பலமே இல்லாத ஜி.கே.வாசனுக்கு பா.ஜ.க.வில் 3 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அம்மா முன்னேற்றக் கழகம் நடத்தும் டிடிவி தினகரனுக்கு 2 தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது 3 எம்.எல்.ஏ.க்களை கையில் வைத்திருக்கும் பன்னீருக்கு மட்டும் ஒரே ஒரு தொகுதியைக் கொடுத்து அவமானம் செய்திருக்கிறார்கள். அந்த அவமானத்தை துடைத்துப் […]
அரவிந்த் கெஜ்ரிவால் பாணியில் ஆ.ராசா, கனிமொழி கைது..?

மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்று கைது செய்தனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத்துறையை ஏவி கெஜ்ரிவாலை பாஜக கைது செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கையை தொடர்ந்து பாஜகவுக்கு […]

