வீராங்கனைகளின் பாலியல் வில்லனுக்கு சீட் இல்லை, மகனுக்கு உண்டு. பா.ஜ.க. தந்திரம்

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பா.ஜ.க.வின் பிரிஜ் பூஷனுக்கு இந்த முறை பா.ஜ.க.வில் சீட் கிடைக்காது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அவரது மகனுக்கு சீட் கொடுத்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரப் பிரதேசம் – கைசர்கஞ்ச் தொகுதி மக்களவை உறுப்பினராக 3 முறை வெற்றி பெற்ற பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி நடவடிக்கை எடுக்கக் கோரினார்கள். ஆனால், பா.ஜ.க. இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உலக அளவில் […]
கனிமொழி, ஆ.ராசா கிரேட் எஸ்கேப்…

மக்களவைத் தேர்தல் நேரத்தில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் தொடர்புடைய 2 ஜி வழக்கை மீண்டும் ஞாபகப்படுத்துவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட முயற்சி நீதிமன்றத்தால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. 2ஜி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட நேற்று உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. “2ஜி தீர்ப்பில் தெளிவு கோரும் போர்வையில் அதில் திருத்த செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து எந்த […]
ராகுலுக்கு ரேபரேலி, பிரியங்காவுக்கு சீட் இல்லை..!

அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும், ரேபரேலியில் பிரியங்கா காந்தியும் போட்டியிடுவார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ரேபரேலி தொகுதி வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். பிரியங்கா காந்தி தேர்தலில் நிற்கவில்லை. அமேதி தொகுதியில் கிஷோரி லால் சர்மா வேட்பாளாக அறிவிக்கப்பட்டுள்ளார். ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி இன்றே வேட்புமனு தாக்கல் செய்கிறார். உ.பி.யில் அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதிகளாக உள்ளன. இங்கு நேரு, காந்தி குடும்பத்தினர் தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றனர். அமேதியில் […]
அயோத்தியில் குடியரசுத் தலைவர் முர்மு. செட்டப் ராமர் சிலை சர்ச்சை

நாடாளுமன்றத் திறப்பு விழாவிலும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்கவில்லை. அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதாலே திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வந்தது. தேர்தல் நடைபெறும் நேரத்தில் இந்த விவகாரம் சர்ச்சை ஆகிவிடக் கூடாது என்பதாலோ என்னவோ, திடீரென திரெளபதி முர்மு அயோத்தியில் தரிசனம் செய்திருக்கிறார். டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அயோத்தி சென்ற குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை, கவர்னர் ஆனந்திபென் பட்டேல், உத்தர பிரதேச […]
மோடியின் சவாலை ஏற்று உத்தரப்பிரதேசத்தில் ராகுல், பிரியங்கா போட்டி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வேட்பாளராக நிற்பதற்கு ராகுல் காந்திக்குத் தைரியம் இல்லை என்று பிரதமர் மோடி பேசியதற்கு பதிலடி கொடுப்பதற்கு காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருக்கிறது. அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தியும், ரேபரேலியில் பிரியங்கா வத்ராவும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய மாநிலமாக இருந்தது உபி. இதில் தற்போது அவர்களுக்கு மிஞ்சியிருப்பது ரேபரேலி தொகுதி மட்டுமே. இத்துடன் கைவசம் இருந்த அமேதியை கடந்த 2019 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி […]
கங்கை அமரனுக்கு சனாதனத் திமிர்… வைரமுத்து ஆதரவாளர்கள் கும்மாங்குத்து

பாடலுக்கு இசையா, இசைக்குப் பாட்டா என்று பேசியிருந்த வைரமுத்துக்கு எதிராக இளையராஜாவின் தம்பி கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார். அவர், ’நாங்க கொடுத்த பிச்சைதான் வைரமுத்துவோட வாழ்க்கை!.. இப்படியெல்லாம் பேசுனா அவ்வளவுதான்!.. நான் ஒரே ஒரு தம்பி தான்.. என்ன நடக்கும்னே தெரியாது. வைரமுத்து நல்ல மனிதர் இல்லை… புத்தியும் இல்லை. வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறிடுச்சு… என்றெல்லாம் விளாசியிருந்தார். நாங்க வாய்ப்பு தரவில்லை என்றால் வைரமுத்து ஜீரோ என்று கூறியிருந்ததற்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பஞ்சு அருணாசலம் வாய்ப்பு […]
கோவிஷீல்டு போட்டவங்க அச்சப்படாதீங்க, இத்தனை காலத்துக்குப் பிறகு பாதிப்பு வராது

கோவிஷீல்டு மருந்து என்றாலே அது பக்கவிளைவு கொண்டது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பது தான் இப்போது மருத்துவர்கள் கூறிவரும் கருத்து. பக்கவிளைவுகள் இல்லாத மருந்து என எதுவும் இருக்காது. எல்லா மருந்துகளிலும் அதனால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் பற்றிய குறிப்புகள் இருக்கும். பலருக்கு ஒத்துப்போகும் மருந்து சிலருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். வலிநிவாரணிகளை எடுத்துக் கொள்பவர்கள், மயக்கமாக உள்ளது, உறக்கம் வருகிறது என்பார்கள். முடி உதிர்தல், எடை குறைதல், தோல் அரிப்பு, வயிற்று வலி, வாய் உலர்தல், மலச்சிக்கல் […]
கோவிஷீல்டு தடுப்பூசியில் பக்கவிளைவுகள்… அதிர்ச்சி தரும் அறிக்கை

கொரோனா காலத்திற்குப் பிறகு இளவயதில் மாரடைப்பு போன்ற ரத்த நோய்களால் மரணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு போட்டவர்களுக்கே இந்த பாதிப்பு அதிகம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், மத்திய அரசு அதனை மறுத்துவந்தது. இந்த நிலையில், கோவிஷீல்டு கரோனா தடுப்பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதனை உருவாக்கிய ஆஸ்ட்ரஜெனக்கா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரிட்டன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கோவிஷீல்டு பாதிப்புகள் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஸ்ட்ராஜெனக்கா […]
நிர்மலா தேவி குற்றவாளி என்றால், யாருக்காக குற்றம் செய்தார்.?

ஒரு காலத்தில் தமிழகத்தையே உலுக்கிய நிர்மலா தேவி செக்ஸ் குற்றச்சாட்டு வழக்கில், கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியராக பணியாற்றிவந்தவர் நிர்மலாதேவி. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், உயர்கல்வித்துறையிலும் பெரும் செல்வாக்குடன் இருந்தவர். இவர், தேவாங்கர் கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி உயர்கல்வித்துறைப் புள்ளிகளுக்குப் பாலியல்ரீதியாக அவர்களைப் பயன்படுத்த முயன்றதாகப் புகார் எழுந்தது. அதன்படி, பேராசிரியை […]
3,000 ஆபாச வீடியோக்கள்… பாலியல் கிரிமினல் பிரஜ்வலை காப்பாற்றுகிறாரா மோடி..?

நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை பிரஜ்வல் ரேவண்ணா சீரழித்திருக்கிறார் பத்து நாட்களுக்கு முன்பு கூட அவருக்காக பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார் அந்த நபர் மிகக் கொடூரமான குற்றச் செய்துவிட்டு இன்று தலைமுறைவாகி இருக்கிறார் ஆனாலும் பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் சாதிப்பது ஏன் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா (33), ஹாசன் […]

