மோடியை ஜெயிக்க வைக்குமா கன்னியாகுமரி தியானம்..?

கடந்த 2019 தேர்தல் பிரசாரம் முடிந்தவுடன் பிரதமர் மோடி கேதார்நாத் குகைக்குச் சென்று தியானத்தில் ஈடுபட்டார். அந்த தியானத்தின் பலனால் வெற்றியும் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல் 2024 தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்ததும் கன்னியாகுமரியில் தியானம் செய்ய இருக்கிறார். இதுவும் வெற்றி தருமா என்பது கேள்வியாக எழுந்துள்ளது. 2024 பிரதமர் போட்டியிடும் வாராணசி தொகுதியில் ஜூன் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதோடு 2024 தேர்தல் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தை […]
டாக்டர் ராமதாஸ் அட்வைஸ் ஸ்டாலினுக்கு மட்டுமா..? மோடிக்கு இல்லையா?

மதுவிலக்கின் மகிமைகளை பிகாரிடமிருந்து தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும்; மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், ‘ஏன் பக்கத்தில் இருக்கும் பாண்டிச்சேரி அரசுக்கும் பா.ஜ.க. ஆளும் மாநிலத்துக்கும் அட்வைஸ் கொடுக்கும் ;தைரியம் இல்லையா என்று ராமதாஸை திட்டித் தீர்த்துவருகிறார்கள். ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ’பிகாரில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால் அமைதி, மன நிம்மதி, மது சார்ந்த நோய்கள் மற்றும் பிரச்சினைகளில் இருந்து மக்கள் விடுபட்டிருப்பதை பார்க்க முடிகிறது. 2016-ஆம் ஆண்டுக்கு முன்பாக […]
நேரடியாக சசிகலாவுடன் மோதும் டிடிவி தினகரன்

திருவண்ணாமலை சித்தர் என்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை தன்னுடைய இல்லத்துக்குக் கூட்டிவந்து ஆசிர்வாதம் வாங்கிய விவகாரத்தில் பலருடைய விமர்சனத்துக்கு ஆளான டிடிவி தினகரன் இப்போது நேரடியாக சசிகலா மீது மோதத் தொடங்கியிருக்கிறார். ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்று அண்ணாமலை கூறிய விவகாரத்தில் சசிகலா கடுமையாக எதிர்ப்பு காட்டியிருந்தார். அவர் எல்லோருக்கும் பொதுவான தலைவர், அவரை இந்துத்துவா தலைவர் என்று கூறக்கூடாது என்று எச்சரிக்கை செய்திருந்தார். அதோடு அ.தி.மு.க. மாஜி அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட பலரும் ஜெயலலிதா […]
பட்டினி தினத்திற்கு விஜய் மன்றத்தினர் பிரியாணி விருந்து..?

அறிக்கை மூலமே கட்சி நடத்திவரும் விஜய் மீண்டும் ஒரு அறிக்கை மூலம் அவரது ரசிகர்களை களத்தில் இறக்கி விட்டுள்ளார். தற்போது உலகளாவிய பட்டினிக் குறியீட்டில் 28.7 புள்ளிகள் பெற்று இந்தியா 111வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பட்டினி இல்லா உலகம் படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வோர் ஆண்டும் மே 28ம் தேதி உலகப் பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக […]
டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல்? ஸ்டாலின் ரகசிய ஆலோசனை

கடந்த 2019ம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டன. தமிழகத்தில் 36 மாவட்ட ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 12,525 ஊராட்சிகள் என மொத்தம் 12,949 ஊரக உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில், 1.19 லட்சம் பதவிகள் உள்ளன. இவற்றில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, தென்காசி மாவட்டங்களை தவிர்த்து, 27 மாவட்டங்களுக்கு 2019 டிசம்பரில் தேர்தல் நடந்தது. மீதமுள்ள இடங்களில் 2021ம் ஆண்டு நடைபெற்றது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு […]
சவுக்கு சங்கருக்கு அழுத்தம் கொடுத்தது யாருன்னு தெரியுமா?

சாதாரண நபர்கள் வழக்கை நீதிமன்றம் எடுத்துக்கொள்வதற்கு மாதக்கணக்கில் இழுத்துக்கொண்டே இருக்கும். ஆனால், சவுக்கு சங்கர் விவகாரத்தில் எல்லாமே அவசரம் அவசரமாக நடக்கிறது. இது குறித்து, அதிகாரத்தில் உள்ளவர்கள் தொடர்பு கொண்டு பேசியதால், அவசரமாக வழக்கை விசாரித்தேன் என்று நீதியரசர்.சுவாமிநாதன் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். சவுக்கு சங்கருக்காக அழுத்தம் கொடுத்தது பா.ஜ.க. டெல்லி மேலிடமா அல்லது அ.தி.மு.க. முக்கியப் புள்ளியா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கிறது. சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதற்கு எதிராக அவரது தாயார் கமலா […]
அண்ணாமலை ஆண் மகனா..? சீமான் மீண்டும் கட்சிக் கலைப்பு சவால்

மக்கள் நலக் கூட்டணி எங்களை விட அதிக வாக்குகள் பெற்றால் கட்சியைக் கலைத்துவிடுகிறேன் என்று பொதுவெளியில் சவால் விட்டவர் நாம் தமிழர் சீமான். அந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி அதிக வாக்குகள் பெற்றது. அப்போது, ‘கம்யூனிஸ்ட் கட்சி தனித்து நிற்காமல் விஜயகாந்தை எல்லாம் கூட்டி வந்ததால், அது செல்லாது’ என்று கூறிவிட்டார். இந்த நிலையில் மீண்டும் அப்படியொரு சவால் பொதுவெளியில் விட்டிருக்கிறார் சீமான். சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 3வது பெரிய […]
தி.மு.க.வுடன் உரசலா..? முல்லைப் பெரியாறுக்கு கவிஞர் வைரமுத்து போர்க்கொடி.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் ஸ்டாலின் அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது. அதனாலே முல்லைப்பெரியாறு அணையை உடைத்துவிட்டு சிலந்தியாற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு முயற்சி செய்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி பா.ஜ.க., டி.டி.வி.தினகரன் வரையிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இத்தனை நாட்களும் தி.மு.க.வுக்கு ஆதரவாக மட்டுமே பேசிவரும் கவிஞர் வைரமுத்து முல்லைப் பெரியாறு குறித்து ஆக்ரோஷமாக கவிதை ஒன்று படைத்திருக்கிறார். தி.மு.க. அரசு மெளனம் சாதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே […]
திருவள்ளுவர் என்ன சாதி? கவர்னர் ஆர்.என்.ரவியுடன் மல்லுக்கட்டு

திருவள்ளுவர் என்ன சாதி? கவர்னர் ஆர்.என்.ரவியுடன் மல்லுக்கட்டு தேர்தலையொட்டி தி.மு.க. அரசுடன் மோதுவதை தள்ளி வைத்திருந்த கவர்னர் ஆர்.என்.ரவி, மீண்டும் திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசி பிரச்னையை ஆரம்பித்துள்ளார். இதையொட்டி வைகாசி அனுஷத்தை திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடுவதாக அறிவித்து மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயிலில் திருவள்ளுவரை தரிசனம் செய்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ‘’திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசியதற்கு தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திருவள்ளுவருக்கு காவி அணிவித்ததன் மூலம் ஆளுனர் ரவி மரியாதை […]
சிலந்தியாறுக்கு லெட்டர் எழுதினா போதுமா? ஸ்டாலினுக்கு விவசாயிகள் எதிர்ப்பு

காவிரிப் படுகையில், அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் வந்த செய்திகளின் காரணமாக, அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பணியினை நிறுத்தி வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி கேரள முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். இப்படி லெட்டர் அனுப்பினால் மட்டும் போதுமா என்று விவசாயிகளும் எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியில் […]

