தமிழகத்தில் 304 ஏழை ஜோடிகளுக்கு திருமணம்! எங்கு எப்போது தெரியுமா?

வருகிற 21ம் தேதி (திங்கட்கிழமை) 304 ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் 2024& 2025ம் நிதி ஆண்டிற்கான சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியானது. அதாவது பொருளாதாரத்தில் பின் தங்கிய 700 ஜோடிகளுக்கு கோவில்கள் சார்பாக 4 கிராம் தங்கத்தாலி உட்பட 60 ஆயிரம் ரூபாய் சீர்வரிசை வழங்கி திருமணம் செய்துவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி வருகிற திங்கட்கிழமை […]
அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள்!

தமிழகத்தில் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த 14ம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 16ம் தேதி கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. ஒரு நாள் மழைக்கே சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கிய நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் […]
சீமான் இப்படி பேசலாமா..? வில்லங்கமாகும் ராவண வதம்

கடந்த வாரம் நடைபெற்ற தசரா இறுதி நாளில் டெல்லியில் ராவண வதம் நிகழ்ச்சி நடந்தது. அதில் குடியர்சுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ராவண உருவத்தை அம்பு எய்தி தீ வைத்துக் கொளுத்தினார்கள். அதனை கொஞ்சமும் கண்டுகொள்ளாத நாம் தமிழர் சீமான் ஆஸ்திரேலிய ராவண வதத்திற்கு ரொம்பவே பொங்கியிருக்கிறார். இன்று சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் நகரங்களில் வருகின்ற அக்டோபர் 27 அன்று இராவண வதம் என்ற […]
பா.ஜ.க.வுக்குத் தாவுகிறார் பொன்முடி? பதவி பறிப்பு அதிருப்தி

துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்ற நேரத்தில் பொன்முடியிடம் இருந்த பவர்ஃபுல் பதவியான உயர் கல்வித் துறை புடுங்கப்பட்டு, டம்மியாக வனத்துறை வழங்கப்பட்டது. துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு ஆகிய சீனியர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் தன்னுடைய பதவியை மட்டும் பறித்த ஸ்டாலின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் பொன்முடி. இதையடுத்தே விழுப்புரத்தில் நடைபெற்ற பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பொன்முடி, ‘’தி.மு.க.வில் யார் வேட்பாளர் என்பதை தலைவர் முடிவு செய்வார், உதயா முடிவு செய்வார். […]
இது தான் பா.ஜ.க. பிளான்..? பன்னீர், தினகரனை ஓட விடும் எடப்பாடி பழனிசாமி..!

அண்ணா தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்துவதற்கு எந்த தியாகத்துக்கும் தயார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதை அடுத்து, ‘தங்களுக்கான வாசல் திறந்துவிட்டது’ என்று பன்னீர் டீம் குதூகலம் அடைந்தனர். ஆனால், பன்னீர், தினகரன் ஒருபோதும் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் தெளிவு படுத்திவிட்டார். இதையடுத்து பா.ஜ.க. டீம் பதட்டத்துக்குப் போயிருக்கிறது. சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து ஒரு டீம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது. அவர்களுடைய திட்டப்படி சசிகலாவுக்கு எந்த அதிகாரமும் இல்லாத பொதுச் செயலாளர் பதவியும் பன்னீருக்கு […]
உச்சத்தை தொட்ட தக்காளியின் விலை: மத்திய அரசு புதிய தகவல்!

தங்கத்தை போல் தக்காளியின் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தக்காளி, வெங்காயம் இல்லாமல் சமைக்கவே முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. மழை காலங்களில் தக்காளி விலை தாறுமாறாக உயர்வது வாடிக்கையாகிவிட்டது. விளைச்சல் பாதிக்கப்படுவதால் இந்த விலை வீழ்ச்சி என்றாலும் இல்லத்தரசிகள் மற்றும் உணவகம் நடத்தி வருபவர்களின் நிலை திண்டாட்டமாகிவிடுகிறது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அந்தந்த மாநிலங்களில் நியாயவிலைக் கடைகளில் தக்காளியை பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கி வருகின்றனர். இந்நிலையில் தக்காளி விலை குறித்து […]
தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட முதல்வர்!

தமிழகத்தில் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், தேங்கிய மழைநீரை துரிதமாக தூய்மைப் பணியாளர்கள் அகற்றினார்கள். அதன்படி சென்னையில் நேற்று முன்தினம் யானைக்கவுனி, புளியந்தோப்பு உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் அகற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மேலும் வெற்றிகரமாக ஆங்காங்கே தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் சென்னை கொளத்தூர் […]
சத்தமே இல்லாமல் கடந்து சென்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

எந்த பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை கடந்து சென்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமுதல் அதிகமழை கொட்டித் தீர்த்தது. நேற்று (அக்.16) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் […]
அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா இவர் தானுங்க….

தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் சந்திரசூட் வரும் நவம்பர் 10-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், நடைமுறையின்படி, அவருக்குப் பின் அவருடைய பதவிக்கு வருபவர் பெயரைக் குறிப்பிடுமாறு அரசாங்கம் அவருக்கு கடந்த வாரம் கடிதம் எழுதியிருந்தது. அதன் படி உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான சஞ்சீவ் கண்ணாவை தனக்குப் பின் தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு இந்திய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். யார் இந்த சஞ்சீவ் கண்ணா? நீதிபதி […]
ஜக்கியின் ஈஷா மையத்தின் மீது இத்தனை வழக்குகளா..? புடுச்சி உள்ளே போடுங்க

கோவை ஈஷா மையத்துக்கு ஒரு பிரச்னை என்றால் உச்ச நீதிமன்றமே ஓடோடி வந்து அவசர வழக்காக விசாரிக்கும். அந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ள ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று தமிழ்நாடு காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தனை வழக்குகள் இருந்தும் உத்தமர் போன்று ஈஷா காட்சியளிப்பது தான் மேலிடத்து ஆசிர்வாதம். ஈஷா மைத்திலிருந்து காணாமல் போனவர்கள் தொடர்பாக 6 வழக்குகள் பதியப்பட்டுள்ளது, அதில் 5 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. […]

