News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தி.மு.க. கூட்டணியில் விரிசல்? கம்யூனிஸ்ட் நேரடி தாக்குதல், குஷியில் எடப்பாடி

கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவுக்கு ராகுல் காந்திக்கு அழைப்பு விடாததும், அளவுக்கு அதிகம் பா.ஜ.க.வுக்கு நெருக்கம் காட்டியதும் தி.மு.க. கூட்டணிகளுக்கு இடையில் கடும் அதிருப்தியாகியிருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி படத்துடன் இன்று முதல்வர் சுமார் 100 கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்கள் திறந்து வைப்பதும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. ’பதவி சுகம் அனுபவிக்க நம்பிய கட்சிகளுக்கு துரோகம் செய்வது திமுகவின் வாடிக்கை. நாணயம் வெளியீட்டு விழா என்பது தமிழக ஆசு நடத்திய விழா. இதில் எங்குமே மத்திய அரசின் […]

கருணாநிதி இவ்வளவு நல்லவரா..? அண்ணாமலையிடம் இத்தனை பவ்யமா? அதிர்ச்சியில் தமிழர்கள்

கருணாநிதிக்கு நாணயம் வெளியீடு என்ற ஒரே ஒரு விழா தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியலையும் புரட்டிப் போட்டுள்ளது. தி.மு.க.வை குழி தோண்டிப் புதைக்கத்தான் வந்திருகிறேன் என்று வீராவேசம் காட்டிய அண்ணாமலையும், மோசமான வைரஸ் பா.ஜ.க. என்று விமர்சனம் செய்த தி.மு.க.வும் பாசமலர்களாக கட்டிப் பிடித்துக் கொஞ்சினார்கள். இந்த காட்சிகளைப் பார்த்த உ.பி.க்களும் சங்கிகளும், ’இத்தனை நல்லவங்கன்னு தெரியாம கருணாநிதியையும் அண்ணாமலையையும் விமர்சனம் செய்துவிட்டோமே’ என்று பதறிக் கிடக்கிறார்கள்.   இதுவரையிலும் கருணாநிதியை விஞ்ஞான ஊழலுக்கு சொந்தக்காரர் என்று பா.ஜ.க.வினர் […]

கவிஞர் சினேகாவை துவம்சம் செய்யும் தம்பிகள். ஆபாச சண்டையை தூண்டிவிடும் சிறுத்தைகள்

  திருமாவளவன் பிறந்த நாள் விழாவில் கவிஞர் சினேகா வாசித்த ஒரு கவிதைக்கு எதிராக சீமானின் அன்புத் தம்பிகளும் ராமதாஸின் அருமைத் தொண்டர்களும் விதவிதமாக கெட்ட வார்த்தைகளில் கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள். ஒரு பெண் என்றும் பாராமல் சினேகாவை வறுத்தெடுக்கிறார்கள். விழா மேடையில் அவர் படித்த கவிதை இது தான். செங்கோல் பிடித்து ஆண்ட பரம்பரை என அடித்தொண்டையில் கத்துவார் ! மறுபக்கம் உள் ஒதுக்கீடு வேண்டும் என அரசின் கால் பிடித்து சுற்றுவார்! கொள்கை ஏதுமில்லா […]

50.100 கிராம் தங்கம் வினேஷ் போகத்துக்கு பிரமாண்ட வரவேற்பு. நெகிழவைக்கும் கண்ணீர் காட்சிகள்.

ஒலிம்பிக்கில் 50 கிலோ மல்யுத்தப் பிரிவில் ஒரே நாளில் 3 முன்னணி வீராங்கனைகளை அடுத்தடுத்து வீழ்த்திய வினேஷ் போகாட் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். மறுநாள் இறுதிப்போட்டி தினத்தில் எடை பரிசோதனை செய்யப்பட்ட போது, வினேஷ் போகாட் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். வெள்ளிப்பதக்கத்தைப் பெறுவதற்கு நடுவர் மன்றத்தில் முறையீடு செய்திருந்தார். அந்த முயற்சியும் தோல்வியைத் தழுவியதால் வெறும் கையுடன் நாடு திரும்பினார் வினேஷ் போகத். தங்கப் பதக்கம் பெறவில்லை […]

திருமாவுக்கு குவியும் வாழ்த்துகள். நாம் தமிழர் தம்பிகள் மட்டும் தடாலடித் தாக்குதல்.  

இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 62வது பிறந்த நாளை அவரது கட்சியினர் பிரமாண்டமாகக் கொண்டாடிவருகிறார்கள். சீமான் திருமாவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் நிலையில், அவரது கட்சியினர் மட்டும் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறார்கள். முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் திருமாவளவன். பின்னர் உதயநிதி ஸ்டாலின் நேரில் திருமாவை சந்தித்து வாழ்த்தினார். இது குறித்து உதயநிதி, ‘முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ‘மேஜர் ஜெனரல்’ எனப் பாராட்டப்பட்டவரும் பாசிஸ்ட்டுகளின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு இடந்தராமல், எல்லாத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய […]

கூட்டணி மாறும் பிரேமலதா கணக்கு..? கவர்னர் பார்ட்டியில் குழி பறிப்பு

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் இருந்த பிரேமலதாவுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. ஆனால், அடுத்து வரயிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தன்னுடைய கட்சி இருக்காது என்பதை சூசகமாக கவர்னர் டீ பார்ட்டியில் தெரிவித்திருக்கிறார் பிரேமலதா. அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பது பா.ஜ.க.வின் வேண்டுகோளாக இருந்துவருகிறது. இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை என்பதால் பா.ஜ.க. புதிய கூட்டணியை ஏற்படுத்தி தனித்து நின்றது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துவிட்டதால் […]

அமெரிக்கா போனாலும் கண்காணிப்பேன். அமைச்சர்களை மிரட்டிய ஸ்டாலின்

இன்று தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் வழக்கம் போல் சில தீர்மானங்களை நிறைவேற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் சீரியஸாக பேசியிருக்கிறார். அமெரிக்கா செல்வதைக் குறிப்பிட்டு யாரும் முறைகேட்டில் ஈடுபடக் கூடாது என்று அமைச்சர்களுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார். அவர் பேசுகையில், ’’2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாற்பதுக்கு 39 பெற்றோம். 2024 தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது பெற்றோம். இரண்டு தேர்தலில் முழுமையான வெற்றியை இதுவரை யாரும் பெற்றது இல்லை; நாமும் இதுக்கு முன்பு பெற்றது இல்லை. இந்த […]

அ.தி.மு.க. செயற்குழுவில் பூகம்பம் வெடிக்கவில்லை. சசிகலா அப்செட். எடப்பாடி எச்சரிக்கை.

இன்று தலைமைக்கழகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் பூகம்பம் வெடிக்கும், எதிர்ப்புக் குரல் எழும் என்று பல்வேறு யூகங்கள் நிலவி வந்தன. சசிகலாவின் தூண்டுதலில் சில முக்கிய நிர்வாகிகள் கடுமையான எதிர்ப்புக் குரல் எழுப்புவார்கள், சண்டை நடக்கும் என்றும் கருதப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. இன்றைய கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக ஒன்றிய பா.ஜ.க.வுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு போதுமான நிதியை ஒதுக்காத மத்திய […]

தமிழிசையால் கைவிடப்பட்ட குமரி அனந்தனுக்கு ஸ்டாலின் விருது. எக்கச்சக்க புதிய திட்டங்கள் அறிவிப்பு.

முந்தைய ஆளுநரும் தமிழக பா.ஜ.க.வின் முக்கியப் புள்ளியுமான தமிழிசை செளந்தர்ராஜனின் தந்தையே இலக்கியச் செல்வர் குமரி அனந்தன். பல்வேறு காரணங்களால் இருவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது. எனவே, தமிழிசையால் புறக்கணிக்கப்பட்ட குமரி அனந்தனுக்கு தகைசால் விருது கொடுத்து கெளரவம் அளித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இன்று, சுதந்திரத் தினத்தையொட்டி, சென்னை தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற தேசியக் கொடியேற்று விழாவில், தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியதற்காக 2024-ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதினை இலக்கியச் செல்வர் முனைவர் […]

வசமாக சிக்கிய தில்லுமுல்லு தேவநாதன். அப்ரூவரானால் அண்ணாமலைக்கும் ஆபத்து..?

பொதுமக்கள் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவரும், பாஜக ஆதரவாளரும் ஆன தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டு உள்ளார். 50 கோடி வரை மோசடி நடைபெற்றதாக 140-க்கும் மேற்பட்டோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எடுத்து உள்ளனர். இவர் கடந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டவர் என்பதும் இவரிடம் பெரும் நிதி வாங்கிக்கொண்டே தேர்தலில் நிற்க அண்ணாமலை அனுமதி கொடுத்ததாகக் கூறப்பட்டது. இத்தனைக்கும் […]