News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அமெரிக்காவில் ஸ்டாலினுக்கு அரசு வரவேற்பு இல்லை… எல்லாம் காசு கொடுத்து கூட்டிய கூட்டமா..?

அமெரிக்கா நாட்டிற்கு சென்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் பாட்டுப்பாடி ஆட்டம் ஆடி உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் லோக்கல் மேயர் கூட ஸ்டாலினை வரவேற்கவில்லை, எந்த நிறுவனம் சார்பிலும் வரவேற்பு வழங்கப்படவில்லை என்பது சர்ச்சையாக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அமெரிக்கவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சான்பிரான்சிஸ்கோவில் இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் […]

விஜய் முதல் மாநாடு திங்கள் கிழமை..! தி.மு.க. ஜோதிடரின் சதி வேலையா?

பொதுவாக அரசியல் கட்சிகள் மாநாடு நடத்துவது என்றால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தேதிகளையே தேர்வு செய்வார்கள். ஆனால், விஜய் முதன்முதலாக நடத்த இருக்கும் மாநாடு திங்கள் கிழமை என்று உறுதி செய்யப்பட்டிருப்பது அவரது நிர்வாகிகளை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. விஜய் கட்சியின் முதல் மாநாடு மதுரை அல்லது திருச்சியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்கிரவாண்டியில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ம் தேதி நடிகர் விஜய் கட்சி முதல் மாநாடு நடத்த அனுமதி […]

எக்கசக்க வசதிகளுடன் பயன்பாட்டுக்கு வந்த 150 அரசு பேருந்துகள்! பயணிகள் மகிழ்ச்சி!

ஆம்னி பேருந்துகளுக்கு சவால்விடும் வகையில் எக்கச்சக்க வசதிகளுடன் 150 அரசு பேருந்துகளை அமைச்சர் உதயநிதி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.   முதலமைச்சர் உத்தரவின் பேரில், சென்னை மாநகர் போக்குவரத்துக்கழக, மத்திய பணிமனையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 90 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான பி.எஸ்.வி.ஐ.150 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.     இப்புதிய பேருந்துகளில் நவீன தொழில் நுட்பத்துடன் […]

பள்ளிக்கல்வித்துறை அனுமதியின்றி எப்படி என்.சி.சி. முகாம் நடத்த முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி!

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்துலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.   கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில்  நடத்தப்பட்ட போலி என்.சி.சி. முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக 35 வயதான சிவராமன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் அவர் எலி பேஸ்ட் சாப்பிட்டதாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சந்தேகத்தை கிளப்பியது.   […]

சீமானுக்கு துணை முதல்வர் பதவி..? கூட்டணிக்கு அ.தி.மு.க. பேரம்

வரும் 2026 தேர்தலில் தி.மு.க.வை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும் என்பதில் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் மட்டுமே உறுதியாக இருக்கின்றன. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியினர் அ.தி.மு.க.வை ஒழித்துவிட்டு, இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கு மட்டுமே முயற்சி செய்கிறார். மும்முனைப் போட்டி இருக்கும் பட்சத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. ஆகவே, ஒரே கொள்கையில் இருக்கும் இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து நின்றால் தி.மு.க.வை வென்றுவிடலாம் என்பது எடப்பாடியின் சிந்தனையாக […]

விஜய் கட்சிக்குப் புதிய அரசியல் ஆலோசகர்..? திருமா அட்வைஸ்க்கு மரியாதை

புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்க்கு திருமாவளவன் கொடுத்திருக்கும் ஆலோசனையை அடுத்து, தன்னுடைய அரசியல் ஆலோசகரை மாற்ற இருப்பதாகவும் சில சீனியர்களை கட்சிக்கு நியமிக்கும் முடிவுக்கு வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விஜய் அரசியல் பற்றி பேசிய திருமாவளவன், ‘’எம்ஜிஆர் சினிமாவில் இருந்த காலத்திலேயே அரசியலில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்தார். அதனால், அவர் அரசியலில் இருந்து அதாவது ஒரு ஒழுங்கு நடவடிக்கை என்கிற பெயரால் தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்ட போது நீண்ட நெடிய அனுபவம் உள்ள பல தலைவர்கள் அவரோடு வெளியேறினார்கள். […]

ஹேமா குழு அறிக்கை எதிரொலி: மொத்தமாக கலைக்கப்பட்ட மலையாள நடிகர் சங்கம்!

மலையாள திரையுலகில் நடிகைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்து நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு நடிகைகள், நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை வெளிப்படையாக முன்வைத்து வருகின்றனர்.   மலையாள திரையுலகதைத் தாண்டிலும் இப்புகார்கள், தமிழகத்தைச் சேர்ந்த நடிகர்கள் மீதும் பாய்வது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாள நடிகர்களான ஜெயசூர்யா, சித்திக் உள்ளிட்ட நடிகர்கள் தங்களிடம் பாலியல் ரீதியதாக அத்துமீறியதாக நடிகைகள் குற்றம்சாட்டியுள்ளனர். வங்கமொழி நடிகையான ஸ்ரீலேகா மித்ரா, மலையாள சினிமா […]

தமிழகத்தில் நற்பெயரை இழந்து வரும் பா.ஜ.க: அண்ணாமலைக்கு என்டு கார்டு போடுமா தலைமை?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து தமிழக பா.ஜ.க. அண்ணாமலை மேடையில் கடுமையாக விமர்சனம் செய்தார்.    அதாவது அவர் பேசும் போது, யாரோ ஒருவரின் காலில் தவிழ்ந்து பதவியை பிடித்த தற்குறி எடப்பாடி பழனிசாமிக்கு என்னை பற்றி பேச தகுதி கிடையாது. மேலும் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து நாற்காலியை காப்பாற்றிய எடப்பாடி பழனிசாமி என்னைப் பற்றி பேசக்கூடாது என்று கடுமையான வார்த்தைகளால் பேசியது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.   […]

எடப்பாடி பழனிசாமி மீதான கருத்தை மாற்றிக் கொள்ளமாட்டேன்! அடம்பிடிக்கும் அண்ணாமலை!

சென்னையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துகளை முன்வைத்து பேசியுள்ளார்.   ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர்படிப்புக்காக இன்று இரவு இங்கிலாந்து செல்ல உள்ளார் அண்ணாமலை. 3 மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து உயர்படிப்பை மேற்கொள்ள உள்ள அண்ணாமலை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் குறித்து அவதூறு தெரிவிக்கும் வகையில் பேசியுள்ளார். இதை எதிர்த்து ஒவ்வொரு மாவட்டந்தோறும் அ.தி.மு.க.வினர் அண்ணாமலையின் உருவப்படத்தை எரிப்பதிலும், செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடிப்பதிலும் மும்முரம் காட்டி வருகின்றனர். பிரச்சினையின் தீவிரம் அறிந்த […]

அண்ணாமலை நாளை லண்டன் பயணம். இடைக்காலப் பொறுப்பு இவருக்கா..? அதிர்ச்சியில் தமிழிசை

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்து படிப்பதற்காக நாளை லண்டன் செல்லும், பாஜக தமிழக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். இந்த நிலையில் தனக்கு இடைக்கால பொறுப்பு வழங்கப்படும் என்று காத்திருந்த தமிழிசை பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். கிட்டத்தட்ட 3 மாதங்கள் லண்டனில் தங்கியிருந்து, அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்து அண்ணாமலை படிக்க உள்ளர். அண்ணாமலை மாற்றப்படுவாரா அல்லது இடைக்காலத் தலைவர் நியமனம் செய்யப்படுவாரா என்று கேள்விகள் எழுப்பப்படன. ஆனால், அண்ணாமலை லண்டன் […]