உதயநிதி கண்ல விரலை விட்டு ஆட்டிட்டாங்க… விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

எக்கச்சக்க இடையூறுகளுக்கு நடுவில் ஒரு வழியாக கார் பந்தயத்தைத் தொடங்கிவைத்து, பெருமூச்சு விட்டிருக்கிறார் உதயநிதி. இந்த பந்தயத்துக்கு திடீரென திரைப்படக் கலைஞர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுக்குமாறு நிர்ப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், நடிகர் விஜய் எந்த விமர்சனமும் செய்யாமல் இருந்ததற்கு காரணம் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயத்துக்காக 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட் தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், […]
உதயநிதியின் கார் ரேஸ் நிறுத்த இத்தனை எதிர்ப்புகளா..? வர்ண ஜபம் நடத்துற அளவுக்குப் போயிட்டாங்க

நீதிமன்றம் உத்தரவு கொடுத்துவிட்டாலும் உதயநிதியின் கார் ரேஸை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் தொடர் குற்றச்சாட்டுகள் வைத்துவருகிறார்கள். வர்ணஜபம் நடத்தி பேய் மழை, புயல் ஏற்படுத்தி இந்த போட்டியை நிறுத்தும் அளவுப் போயிருக்கிறார்கள். எதிர்கட்சியான அ.தி.மு.க.வினர், ’ரேஸ் நடத்த பணம் இருக்குது, ரோடு போட மனம் இல்லையா?’’ என்று சென்னையின் குண்டுகுழியுமான சாலைகளை எல்லாம் படம் எடுத்துப் போட்டுவருகிறார்கள். எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, ‘’விடியா ஆட்சியில் நடக்கும் கார் ரேஸால் சென்னையின் பிரதான […]
திருச்சி என்.ஐ.டி.யில் நடந்த கண்றாவி இது தான்..? திகிலூட்டும் சம்பவங்கள்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் திருச்சி என்.ஐ.டி.யில் என்ன நடந்தது என்று தெரியாமலே பலரும் பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகிறார்கள். திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேச்சுவார்த்தை மூலம் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும் இன்னமும் நம் சமூகம் திருந்தவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. இந்த நிலையில் அங்கு நடந்த சம்பவம் குறித்து புகாரளித்த மாணவியின் வாக்குமூலமாக ஒரு பதிவு வெளியாகி பரபரப்பாகிவருகிறது. அந்த அதிர்ச்சி பதிவில், ‘’உங்களில் பெரும்பாலானோருக்கு சரியான காட்சி தெரியாததால் இன்றைய சம்பவத்தை சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். […]
’சண்டாளன்’ பேச்சுக்கு சீமானுக்கு திடீர் சிக்கல். கார் ரேஸ் திசை திருப்பும் முயற்சி?

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் நடத்தும் உதயநிதி மீது தொடர்ந்து பலரும் விமர்சனம் செய்துவரும் நிலையில், இன்று சீமான் மீது எஸ்.டி., எஸ்.சி. ஆணையத்தின் வழி காட்டுதல் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாம் தமிழர் தம்பிகள் அத்தனை பேரும் கொதித்துப் போயிருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து இயக்குனர் களஞ்சியம், ‘’சண்டாளன் என்ற சொல் தமிழ் மற்றும் ஆங்கில அகராதியில், கொடும் பாதகன், துஷ்டன், கொடியவன், மாபாவி, வல்லெதிரி, போக்கிரி பாதகன், எதிராளி என்று பொருள்படும். எனவே, […]
பாரா ஒலிம்பிக்: ஒரே போட்டியில் 2 பதக்கங்களை வென்ற இந்தியா!

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி தொடரில் ஒரே போட்டியில் தங்கம், வெண்கலம் என இந்தியா 2 பதக்கங்களை வென்றுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டித் தொடர் பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 4,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து 84 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களம் காண்கின்றனர். இந்நிலையில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் பிரிவு இறுதிப்போட்டி […]
மேலும் ஒரு பாலியல் புகார்! மலையாள நடிகருக்கு பெரும் சிக்கல்!

கேரள மாநிலத்தில் ஹேமா குழு அறிக்கை தாக்கல் செய்த அறிக்கை சினிமாத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நடிகையும் ஒன்றன் பின் ஒன்றாக தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளியில் தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மலையாள திரையுலகில் முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரின் பெயர் அடிபட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து மோகன்லால் உள்ளிட்ட பிரமுகர்கள் தங்களின் நடிகர் சங்கப்பதவிகளை ராஜினாமா செய்து அதிர்ச்சியை கொடுத்தனர். சிறப்புப் புலனாய்வுக் குழு இதுவரை […]
ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியால் என் உயிருக்கு ஆபத்து! காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த பிரபலம்!

ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்று கூறி போலீஸ் எஸ்.பி.யிடம் தொழில் அதிபர் ஒருவர் புகார் கொடுத்த சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது ஆவின் சங்கத்தில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். ஆனால் ஒரு சில நாட்களில் மீண்டும் கட்சியில் இணைந்தார். அவர் மீது தற்போது நில அபகரிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் […]
ஹெச்.ராஜாவுக்கு சூப்பர் வாய்ப்பு. அண்ணாமலை ஆதரவாளர்கள், தமிழிசைக்கு ஆப்பு

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மேற்படிப்புக்காக லண்டன் சென்றுள்ள நிலையில், அவர் அங்கிருந்தபடியே கட்சிப் பணிகளை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக ஹெச்.ராஜா தலைமையில் அண்ணாமலை பணிகளைக் கவனிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் படி அண்ணாமலையின் பணிகளை கவனிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் முதல் பெயராக ஹெச்.ராஜா பெயர் இடம் பெற்றுள்ளது. அண்ணாமலையினால் அடக்கி வைக்கப்பட்டிருந்த ஹெச்.ராஜாவுக்கு மீண்டும் புரமோஷன் கிடைத்திருக்கிறது பெரும் […]
தி.மு.க. வேஷம் கலைஞ்சு போச்சு. பச்சைத் துரோகத்தை அம்பலப்படுத்தும் சீமான்

பரந்தூரில் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து எகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 765 நாட்களைத் தாண்டி போராடி வருகிறார். இந்த நிலையில் அங்கு நில எடுப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடுஅரசு முதல்நிலை அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியைக் கொடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தைத் தீவிரப்படுத்திய பொதுமக்கள் மீது வழக்கு போடப்பட்டிருப்பது அனைத்துக் கட்சியினரின் கண்டனத்துக்கும் ஆளாகியிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4550 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உட்பட 13க்கும் மேற்பட்ட […]
உதயநிதிக்கு பாத பூஜை… அம்மனுக்கு மாநாடு. எங்கே போகிறது தி.மு.க.?

பகுத்தறிவு பேசி ஆட்சிக்கு வந்த தி.மு.க. இப்போது பா.ஜ.க.வின் வால் பிடிக்கும் கட்சியாகவே மாறி வருகிறது. இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு வந்த உதயநிதியின் கால்களுக்கு மலர்கள் தூவி வரவேற்பதும், அம்மானுக்கு மாநாடு நடத்துவதும் தி.மு.க.விற்கு கேவலம் என்று கடும் கண்டனம் எழுந்துவருகிறது. முருகனுக்கு மாநாடு நடத்தியது போலவே மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அடுத்து அம்மனுக்கு மாநாடு நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு கடும் விமர்சனத்துக்கு ஆளானது. ஆனால், அதை பற்றி தி.மு.க.வினர் யாரும் கண்டுகொள்ளவே இல்லை. […]

