News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விநாயகர் சதுர்த்தி: சென்னை-& கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்!

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 7ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இது வார இறுதி நாள் என்பதாலும் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வருவதாலும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊரில் பண்டிகையை கொண்டாட முடிவு செய்துள்ளனர்.   அதன்படி பயணிகளின் விருப்பத்திற்கிணங்க சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையன்று (6ம் தேதி) பிற்பகல் 3.45 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, […]

அரியானா தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்குகிறாரா வினேஷ் போகத்?

வருகிற அக்டோபர் மாதம் 5ம் தேதி 90 தொகுதிகளைக் கொண்ட அரியானாவில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 8ம் தேதி நடைபெற உள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.   2 முறை ஆட்சியை கைப்பற்றியுள்ள பா.ஜ.க. இம்முறை வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் அதிரடி திட்டங்களை தீட்டியுள்ளது. அதன்படி ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஒலிம்பிக்கில் வெண்கலப்  பதக்கத்துடன் தாயகம் திரும்பிய வினேஷ் போகத்தை காங்கிரஸ் வேட்பாளராக […]

மாரடைப்பால் உயிரிழந்த போலீஸ் ஏட்டு! முதலமைச்சர் அறிவித்த நிதியுதவி எவ்வளவு தெரியுமா?

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டு ரவிக்குமார் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியை அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.   சென்னை, மீனம்பாக்கம் காவல்நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்த 59 வயதான ரவிக்குமார் நேற்று காலை (செப்3) வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தார். மீனம்பாக்கம் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த அவர், காலை 11.15 மணியளவில் திடீரென்று சாலையோரமாக மயங்கி கீழே விழுந்தார். அவர் மாரடைப்பு ஏற்பட்டு […]

அமித் ஷாவுடன் ஹெச்.ராஜா 40 நிமிடம் தீவிர ஆலோசனை. அண்ணாமலையை ஓரம் கட்டும் அசைன்மென்ட்

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை படிப்புக்காக லண்டன் சென்றிருக்கும் நிலையில், மாநிலத்தில் கட்சிப் பணிகளைக் கவனிப்பதற்கு நியமனம் செய்யப்பட்ட ஹெச்.ராஜா டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவ சந்தித்திருப்பது அண்ணாமலை ஆதரவாளர்களிடம் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சந்திப்பு குறித்து ஹெச்.ராஜா, ‘இன்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தமிழகத்தில் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை துவங்கியதை தெரிவித்து வாழ்த்து பெற்றேன். உறுப்பினர் சேர்க்கையை கிராமங்களில் கொண்டு செல்வதை துரிதபடுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்கள்’ என்று மட்டும் […]

செல்லூர் ராஜூ, வளர்மதியை கைது செய்யுங்க… சீமானைக் காப்பாற்ற புது டெக்னிக்.

  எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே அவ்வப்போது பேசி வரும் நாம் தமிழர் சீமான் அவ்வப்போது சசிகலாவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஆதரவாக இருந்துவருகிறார். இந்த நிலையில் செல்லூர் ராஜூவையும் வளர்மதியையும் விடாதீங்க என்று நாம் தமிழர் கட்சியினர் கோரிக்கை வைத்திருப்பது சீமானை காப்பாற்றுவதற்கு ஒரு புதிய டெக்னிக் என்று சொல்லப்படுகிறது. சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் தெளிவு படுத்திய பிறகும் அதனை பொதுவெளியில் பயன்படுத்திய சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கினை கையாள்வதற்கு சிறப்பு […]

எம்.ஜி.ஆருக்கு உலகம் சுற்றும் வாலிபன். விஜய்க்கு கோட். தி.மு.க. எதிர்ப்புக்கு குஷியாகும் ரசிகர்கள்.

ரசிகர்களுக்கு இலவசமாக டிக்கெட்டைக் கொடுக்காமல் 2000 ரூபாய்க்கு விற்பவர்களால் நாட்டை எப்படி பாதுகாக்க முடியும்? என்று விஜய் மீது மீண்டும் பாய்ந்திருக்கிறார் அமைச்சர் தா.மோ.அன்பரசன். அதோடு, ’அரசியல் கட்சிக்குத் தலைவராக வேண்டும் என்றால் அவருக்கு ஒரு தார்மீகப் பொறுப்பு வேண்டும். அது விஜய்யிடம் சுத்தமா இல்லை’ என்று தி.மு.க.வினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கோட் படம் பார்ப்பதற்கு 2000 ரூபாய் தருவதற்கும் விஜய் ரசிகர்கள் தயாராக இருக்கும் நிலையில், கோட் படத்தின் சிறப்புக் காட்சிக்கு டிக்கெட் […]

மேற்குவங்கத்தில் நிறைவேறிய முக்கிய மசோதா! நடுநடுங்கும் குற்றவாளிகள்!

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் முக்கிய மசோதா மேற்குவங்க மாநிலத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   கடந்த மாதம் (ஆகஸ்டு) 9ம் தேதி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயதான முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.   இச்சம்பவத்தை எதிர்த்து நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் பலகட்ட […]

ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்கும் காங்கிரஸ்! அரியானா சட்டசபை தேர்தலில் பரபரப்பு!

அரியானா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முழுமுனைப்புடன் இருப்பதாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் இருந்து செய்திகள் கசிந்து வருகிறது.   வருகிற அக்டோபர் மாதம் 5ம் தேதி 90 தொகுதிகளைக் கொண்ட அரியானாவில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 8ம் தேதி நடைபெறுகிறது.   அரியானாவில் 2 முறை ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க. மூன்றாவது முறையா ஹாட்ரிக் வெற்றி பெற முழுவீச்சில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இம்முறை பா.ஜ.க.விடம் […]

செந்தில் பாலாஜி விடுதலைக்கு நோ சான்ஸ்… என்ன காரணம்னு கேளுங்க.

செந்தில் பாலாஜியை எப்படியாவது சிறையில் இருந்து வெளியே கொண்டுவர வேண்டும் என்று கடுமையாக தி.மு.க. போராடி வருகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்று அடித்துச் சொல்கிறார் வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அவரது பதிவில், ‘’தி.மு.க. வழக்கறிஞர் அணியின் தவறான செயல்பாடுகளால் இப்பொழுது செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பது கடினம் போல தோன்றுகிறது. முறையான கைதி என்ற நிலையி்ல் ஆட்கொணர்வு மனு அல்லது ஹேபியஸ் கார்பஸ் (Habeas corpus) தவறாக தாக்கல் செய்த போதே சிக்கல் ஆரம்பித்து விட்டது. […]

நிவேதா பெத்துராஜ் தொடங்கி ஜெயலலிதா வரை அவமானப்படுத்துறாங்க.. ஐ.டி. விங் அலப்பறைகள்.

சென்னையில் ஃபார்முலா ரேஸ் நடத்தப்போவதாக உதயநிதி அறிவிப்பு செய்ததில் இருந்தே, இந்த போட்டி நடிகை நிவேதா பெத்துராஜ் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே நடத்தப்படுகிறது என்று அ.தி.மு.க.வினர் தொடர்ந்து செய்தி பரப்பினார்கள். ரோடு சரியாக இல்லை, ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்றெல்லாம் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளை எழுப்பி வந்தார்கள். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்தார். ஜெயக்குமார் நாய் ரேஸ் நடப்பதாகக் கிண்டல் அடித்தார். நீதிமன்ற வழக்கு, மழை மிரட்டல் போன்ற பஞ்சாயத்துக்களைக் கடந்து […]