News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

காங்கிரஸை ஜெயிக்க வைப்பாரா வினேஷ் போகத்..? ஹரியானா தேர்தல் கருத்துக்கணிப்பு

ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபைத் தொகுதிகளுக்கும் வருகிற அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஹரியானாவின் ஜூலானா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் நிலையில் வினேஷ் போகத், ‘’காங்கிரஸுக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன், ஏனென்றால் கெட்ட காலங்களில் தான் நமக்குச் சொந்தம் யார் என்பதை நாம் உணருகிறோம். […]

ஸ்டாலினிடம் அடேங்கப்பா மாற்றம்… இந்தியாவின் முதல் ஹைடெக் முதல்வர்

அறிவியல் வளர்ச்சியை முன்னெடுத்துக் கொண்டுசெல்வதில் தமிழகம் எப்போதும் முன்னணியில் நிற்கும். அந்த வகையில் இ-ஆபிஸ், செயற்கை நுண்ணறிவு முதலீட்டு வாய்ப்புகள் என்று இந்தியாவின் முதல் ஹைடெக் முதல்வராக அசத்துகிறார் முதல்வர் ஸ்டாலின். இன்று முதல்வர் ஸ்டாலின், “அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் #e_office வழியே பணி தொடர்கிறது என்று இ-சைன் போடும் புகைப்படம் வெளியிட்டிருந்தார். இதையடுத்து ’செயற்கை நுண்ணறிவு ஆற்றலைப் பயன்படுத்தி தொழில்நுட்பம் மூலம் […]

விமான நிலையத்தில் மஹாவிஷ்ணு கைது..? வாய்க்கொழுப்புக்கு தயாராகும் வழக்குகள்

அரசு பள்ளியில் மாற்றுத் திறனாளி ஆசிரியருடன் மல்லுக்கட்டிய மஹாவிஷ்ணு கைது அச்சத்தில் ஆஸ்திரேலியாவுக்குப் பறந்துபோனார். இந்த நிலையில் அவருக்கு பா.ஜ.க.வினர் ஆதரவு தெரிவித்திருப்பதை அடுத்து, கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை கிண்டல் செய்வது போல் பேசியிருக்கிறார். எனவே, அவரை விமான நிலையத்தில் கால் வைத்தவுடன் கைது செய்வதற்கு ஏற்பாடுகள் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அரசு பள்ளியில் நடந்த விவகாரம் குறித்துப் பேசியிருக்கும் மகாவிஷ்ணு, பள்ளி கல்வித்துறை அமைச்சர ‘அவர் அளவுக்கு எனக்கு அறிவிருக்கா என்னன்னு தெரியல’ன்னு கிண்டல் […]

மகாவிஷ்ணு விஷயத்தில் சீமான் இப்படி சொல்லிட்டாரே..? அதிர்ச்சியில் நாம் தமிழர்கள்

பள்ளிக் கூடத்தில் பாவம், புண்ணியம் பாடம் எடுத்ததுடன் நில்லாமல் மாற்றுத் திறனாளியை அவமானப்படுத்திய மஹாவிஷ்ணுக்கு ஆதரவாக பா.ஜ.க. களத்தில் நிற்கிறது. இதுவரை மஹாவிஷ்ணுவை கண்டிக்காத சீமான், தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக களம் இறங்கியிருப்பது அவரது கட்சியினரிடையே குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. சீமான் இன்று, ‘’சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகர் அரசுப்பள்ளிகளில் மாணவ – மாணவியருக்காக நடத்தப்பட்ட ஆன்மிகச் சொற்பொழிவிற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களை மட்டும் பணியிடமாற்றம் செய்து திமுக அரசு தண்டித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. குறிப்பிட்ட […]

ஆன்மீக சொற்பொழிவு: பணியிடமாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியை!

சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேலநிலைப்பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவாற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மாணவிகள் மத்தியில் மகாவிஷ்ணு மூடநம்பிக்கையையும், பிற்போக்குத்தனமான கருத்துகளையும் சொற்பொழிவில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் சொற்பொழிவை கண்களை மூடியபடி கேட்டுக் கொண்டிருந்த மாணவிகள் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலானது.   அவர் பேசும்போது, மாணவிகள் அழகாக பிறக்காததற்கும், மாற்றுத்திறனாளிகளாக பிறப்பதற்கும் முற்பிறவிகளில் அவர்கள் செய்த பாவம்தான் காரணம் என்று பேசினார். மேலும் மறுபிறவி, பாவம், புண்ணியம், […]

சீமானை கைது செய்வதற்கு பயம்..? தி.மு.க. ஒப்புதல் வாக்குமூலம்

சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி. வழக்கு போடப்பட்டிருக்கும் சூழலில் இன்னமும் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முடிந்தால் என் மீது கை வைத்துப் பாருங்கள் என்று மீண்டும் மீண்டும் பேசி வருகிறார். அதோடு, தமிழகத்தில் போதைக் கலாச்சாரத்துக்கும் அறநிலையத் துறை மற்றும் கல்வித் துறையில் நடைபெறும் குளறுபடிகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களை மட்டும் குற்றம் சுமத்துவது சரியில்லை. அத்தனை நிர்வாகச் சீர்கேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் முதல்வர் ஸ்டாலினே காரணம் என்று தொடர்ந்து தி.மு.க. மீது சீமான் தாக்குதல் நடத்துகிறார். […]

பெண் டி.எஸ்.பி.யின் தலைமுடி பிடித்தவரின் கை உடைந்தது..! இது மட்டும் போதுமா..?

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரியை ஒருவர் தலை முடியை இழுத்து தாக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து எடப்பாடி பழனிசாமி, ‘’விடியா திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே, தங்கள் பணியின்போது தாக்கப்படும் அளவு பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ள இந்த […]

மீண்டும் காவி திருவள்ளுவர்..? அண்ணாமலையை ஓரம் கட்டும் எல்.முருகன்

லண்டனுக்குப் படிக்கப் போயிருக்கும் அண்ணாமலை சில நாட்களாக எந்த சத்தமும் காட்டாமல் இருந்தார். ஆனால் இன்று திடீரென கப்பலோட்டிய தமிழனுக்கு பாராட்டு, மோடிக்குப் பாராட்டு என மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கிறார். இந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதற்காக மீண்டும் காவி திருவள்ளுவரை கையில் எடுத்திருக்கிறார் எல்.முருகன். உலகில் முதல் முறையாக சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு செய்திருக்கிறார். திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசினால் தி.மு.க.வினர் கொதிப்பார்கள் என்று தெரியும் என்பதாலே […]

கோட் திரைப்படம்: கேரளாவில் அதிசயத்தை நடத்திய ரசிகைகள்!

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படமான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் திரைப்படம் இன்று (செப்.5) உலகளவில் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நடிகை த்ரிஷா, நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்துள்ளது ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது. இவை எல்லாவற்றையும் அடித்து துவம்சம் செய்துள்ளது மறைந்த கேப்டன் விஜயகாந்தின் ஏ.ஐ. காட்சிகள்தான்.   யுவன்சங்கர் ராஜா இசையில் படத்தின் விறுவிறுப்பு கூடுகிறது என்று […]

விஜய்யை கவிழ்த்த வெங்கட்பிரபு.? கதை இது தான். சீமான் அறிக்கை பின்னணி ட்விஸ்ட்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கோட்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தியேட்டரில் இருந்தே கலவையான விமர்சனங்கள் வெளிவரத் தொடங்கின. பிளாக்பஸ்டர், சூப்பர் டூப்பர் என்றெல்லாம் அவரது ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வந்தாலும் விமர்சகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் ரொம்பவே சுமார், படு மொக்கை என்று கூறிவருகிறார்கள். குறிப்பாக விஜய்காந்த் மற்றும் வில்லனாக நடிக்கும் விஜய் காட்சிகளின் ஏ.ஐ. உருவாக்கம் சிறப்பாக அமையவில்லை என்பதால் […]