News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ஜெ.வுக்கு சசிகலா… விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த். தள்ளிப்போகும் மாநாடுக்கு ரசிகர்கள் நெத்தியடி கேள்விகள்

விஜய் நடத்தப்போகும் முதல் மாநாட்டுக்கு 33 நிபந்தனைகளை காவல் துறை விதித்திருக்கிறது. இத்தனை நிபந்தனைகளுடன் மாநாட்டை நடத்த முடியுமா என்று கேள்வி எழுந்திருப்பதால் தள்ளி வைப்பதாக தகவல்கள் வருகின்றன. இது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஆகவே நடிகர் விஜய்க்கு நேரடியாக நெத்தியடிக் கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். ‘’மாநாடு தள்ளிப்போகிறது என்று வரும் செய்தி துரதிஷ்டவசமானது. சரியாக திட்டமிட்டிருக்க வேண்டும். மாநாட்டிற்கு இரண்டு மாதத்திற்கு முன்பே மாநாட்டுப் பணியை தொடங்கியிருக்க வேண்டும். கடைசி கட்டத்தில் அனுமதி கேட்டு, காலம் […]

நீங்க பா.ஜ.க.வை அழைக்கலாம் நாங்க அ.தி.மு.க.வை அழைக்கக்கூடாதா..? தி.மு.க.வுடன் மீண்டும் மோதும் திருமா

  மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டுக்கு அ.தி.மு.க.வும் வரலாம் என்று அழைப்பு விடுத்த திருமாவளவனின் பேச்சு அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தியது. உதயநிதி மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘வி.சி.க. கட்சி மாநாட்டுக்கு யாரை வேண்டுமானாலும் அவர்கள் அழைக்கலாம்’ என்று ஒதுங்கிக் கொண்டாலும் தி.மு.க.வினர் தொடர்ந்து கடுமையான தாக்குதல் நடத்திவருகிறார்கள். ஜெயலலிதா உத்தரவுப்படி மக்கள் நலக்கூட்டணி தொடங்கி தி.மு.க.வின் வெற்றியைத் தடுத்த திருமாவளவன் இப்போது எடப்பாடி பழனிசாமியிடம் விலை போய்விட்டார் என்று நேரடியாகவே தாக்குதல் தொடுக்கிறார்கள். இதற்கு […]

அ.தி.மு.க.வுக்கு அழைப்பு விடுக்கும் தொல்.திருமாவளவன்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க. தாராளமாக பங்கேற்கலாம் என்று வி.சி.க.தலைவர் தொல். திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ள சம்பவம் தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.   தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளில் பிரதான கட்சியாக இருப்பது தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி. தமிழகத்தில் மதுக்கடைகளை மூட அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிற அக்டோபர் மாதம் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாட்டை நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் […]

விஜய் மாநாட்டில் என்ன புதுமை.? தினம் தினம் ஆலோசனை

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு வரும் 23ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருப்பதையடுத்து முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் தினம் தினம் ஆலோசனை நடத்திவருகிறார். வழக்கமான அரசியல் கட்சியின் மாநாடு போல் இல்லாமல் இதனை புதுமையாகவும் பிரம்மாண்டமாகவும் நடத்துவதற்கு விஜய் தொடர்ந்து ஆலோசனை செய்துவருகிறார். இந்த மாநாட்டில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இணைப்பு விழா நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டது. ஆனால், இதனை விஜய் புறக்கணித்துவிட்டாராம். அதேபோல், விஜய்க்கு ஆதரவான ஒரு பெரிய […]

குரங்கு அம்மை அலர்ட்! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆலோசனை!

டெல்லியில் நோயாளி ஒருவருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.   டெல்லியில் எம்பாக்ஸ் வைரஸ் எனப்படும் குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு முக்கிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது.   வெளிநாட்டில் இருந்து திரும்பிய பயணி ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பதாக […]

மகளின் பாதுகாப்புக்காக தந்தை செய்த விஷயம்!

பெண்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வரும் நிலையில், அவர்களை பாதுகாக்க  மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன என்பது அரசாங்கம் மட்டுமே சிந்திக்க வேண்டும் என்பது இல்லை. அதற்கு ஏற்ப வகையில் பாகிஸ்தானில் ஒரு அபூர்வ சம்பவம் நடந்துள்ளது.   மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் நவீன தொழில்நுட்பத்தின் வெளிப்பாடான சி.சி.டி.வி. கேமராக்கள் குற்றங்களை தடுக்கவும், நடந்து முடிந்த குற்றங்களுக்கு சாட்சியாகவும் அமைந்துவிடுகிறது. கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றங்களில் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிக்க சி.சி.டி.வி.யின் பங்கு […]

திட்டமிட்டு ஊதப்பட்டதா மகாவிஷ்ணு சர்ச்சை..? அன்பில் மகேஸ் டிரைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு..?

  ’’எங்க ஏரியாவுக்குள்ள வந்து பேசுவதற்கு உனக்கு என்ன துணிச்சல், சும்மா விட மாட்டேன்’’ என்று மகாவிஷ்ணுவின் சர்ச்சைப் பேச்சுக்கு எதிராக அமைச்சர் அன்பில் மகேஸ் கொந்தளித்தார். இதையடுத்து மகாவிஷ்ணுக்கு எதிராக தி.மு.க.வினர் தொடர்ந்து கடுமையாக எதிர்வினை ஆற்றினார்கள். அன்பில் மகேஸ் ரிசைன் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள். இதையடுத்து தமிழகம் முழுவதும் மகாவிஷ்ணு விவகாரம் மிகப்பெரிய பேசப்பட்டு பரபரப்பானது. இத்தனை பெரிதாக அந்த விவகாரம் பேசப்பட்டதற்கும் தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் கண்டனம் தெரிவித்ததற்குப் பின்னணியில் […]

அண்ணாமலைக்கு வெளிநாட்டு சிறை..? வார் ரூம் போட்டோ ஆதாரம்

தமிழக பா.ஜ.க. இப்போது சீனியர்கள் கைக்கு மீண்டும் வந்துவிட்டது. அதனால் உட்கட்சியிலும் பல்வேறு மாற்றங்கள் கிடுகிடுவென நடந்துவருகிறது. அண்ணாமலை போடும் பதிவை தமிழக பா.ஜ.க. கண்டுகொள்ளாத நிலை வந்துவிட்டது. எனவே பா.ஜ.க.வில் ஒரு டீம், ‘’அண்ணாமலை லண்டனுக்குப் படிக்கப் போகவில்லை, டெல்லி மேலிடத்தின் உத்தரவுப்படி வெளிநாட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். தமிழக அரசியல் பற்றி பேசக்கூடாது என்றும் கண்டிப்பு காட்டப்பட்டுள்ளது. அவர் லண்டன் காலேஜிக்குப் போனதை யாராவது பார்த்தீர்களா..?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்கு பதில் அளிப்பது போன்று, […]

ஸ்டாலினுக்கு சிகாகோவில் பிரமாண்ட வரவேற்பு. ரியல் கூட்டமா அல்லது ரீலா..?

அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிரம்மாண்டாக நடைபெற்ற தமிழ் கலை நிகழ்ச்சியில், பட்டு வேட்டி, சட்டை அணிந்து கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கூட்டம் உண்மையானது இல்லை, போட்டோ ஷாப் என்று அ.தி.மு.க.வினர் சந்தேகம் எழுப்பி வருகிறார்கள். கடந்த இரண்டு நாட்களாக ஸ்டாலினின் உண்மையான புகைப்படம் வெளிவரவில்லை என்று அ.தி.மு.க.வினர் சந்தேகம் எழுப்பியதையடுத்து, கையெழுத்துப் போடும் படம் ஒன்றை ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் விநாயக சதுர்த்தியன்று ஸ்டாலினுக்குப் பிரமாண்ட வரவேற்பு […]

விஜய் கட்சிக்கு முதல் சக்சஸ்… ஆனால், மாநாட்டுக்கு தி.மு.க. சிக்கல்..?

விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் கோட் படம் சூப்பர் ஹிட் வெற்றி அடையவில்லை என்று வருத்தத்தில் இருக்கும் அவரது ரசிகர்கள் இப்போது அரசியல் உற்சாகத்துக்கு மாறிவிட்டார்கள். தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியிருப்பதற்கு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடுகிறார்கள். இன்று விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை […]