7 பேரை பலி வாங்கிய 400 ஆண்டு கால பழமையான கோட்டைச்சுவர்! எங்கே தெரியுமா?

400 ஆண்டு கால பழமையான கோட்டைச்சுவர் இடிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்ததில் 7 பேர் பலியான சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் டாடியா நகரில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 400 ஆண்டு கால பழமையான ராஜ்கர்கோட்டை சுவர் திடீரென்று இடிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்துள்ளது. இந்த திடீர் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அதிகாலை 4 மணிக்கு […]
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கும் எம்.எல்.ஏ.வுக்கும் என்ன சம்பந்தம்?

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் 3வது மாடியில் முதுகலை பெண் பயிற்சி மருத்துவ மாணவி சடலமாக மீட்கப்பட்டார். 31 வயதான அவரின் பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தநிலையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் இன்றும் அடங்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இந்த கொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்ற நபரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த […]
மதுரை விடுதிகளில் திடீர் ஆய்வு! விசாகா விடுதி தீ விபத்து எதிரொலி!

மதுரை விசாகா பெண்கள் தங்கும் விடுதியில் இருந்த குளிர்சாதன பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் விசாகா என்ற தனியார் பெண்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 4 மணியளவில் அங்கிருந்த குளிர்சாதன பெட்டி வெடித்து சிதறியதில் தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயால் கரும்புகை வந்ததால், சரண்யா, […]
தலைமை நீதிபதியே இப்படி செய்யலாமா..? மோடி விசிட் அதிர்ச்சி

மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் என்பார்கள். அதுவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மீது மக்கள் எக்கச்சக்க நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவரது வீட்டுக்கு பிரதமர் நரேந்திரமோடியை அழைத்திருப்பதும் விநாயகர் சதுர்த்தி பூஜை நடத்தியிருப்பதும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உச்சநிதிமன்ற தலைமை நீதிபதிகளை பொது நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகள் சந்திப்பதையும் பேசுவதையும் யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆனால், பிரதமர் நரேந்திரமோடி உச்சநீதிமன்ற நீதிபதியின் வீட்டுக்குச் சென்று பூஜையில் கலந்துகொண்டிருப்பதை ஜனநாயகத்தின் மீது விழுந்திருக்கும் அடி என்றே பார்க்க […]
விஜய்யைப் பார்த்து தி.மு.க, நடுங்குகிறதா..? உண்மையை ஒப்புக்கொண்ட அமைச்சர் அன்பரசன்

உதயநிதிக்குப் போட்டியாக நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவிப்பு செய்திருப்பதை அடுத்து, அனைத்துக் கட்சிகளும் வரவேற்பு கொடுத்தார்கள். ஆனால், தி.மு.க.வினர் மட்டுமே தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறார்கள். குறிப்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொதுமேடையில் வைத்து, ‘விஜய்யைப் பார்த்து தி.மு.க.வினர் யாரும் பயப்படக் கூடாது’ என்று பேசியிருப்பது ஒப்புதல் வாக்குமூலமாக மாறியிருக்கிறது. அமைச்சர் அன்பரசன் விஜய் வருகை குறித்து ஏற்கெனவே, ‘’நடிகர்கள் அரசியலுக்கு வருவாங்க… ஆனா, அவங்களுக்கு அறிவு இருக்குமான்னா இருக்காது. கட்சி நடத்துறதுன்னா சாதாரணமா?’ என்று முதலில் […]
அரசு ஊழியரை சஸ்பெண்ட் செய்த உதயநிதிக்கு என்ன தண்டனை..? கொதிக்கும் அதிகாரிகள்

அரசு ஊழியர் மாற்றி மாற்றிப் பேசியதற்கு அமைச்சர் உதயநிதி சஸ்பெண்ட் உத்தரவு கொடுத்திருக்கிறார். அரசு ஊழியர் செய்தால் தண்டனை, அரசியல்வாதிகளுக்குத் தண்டனை இல்லையா என்று அரசு ஊழியர்கள் கொதித்து வருகிறார்கள். சிவகங்கையில் அமைச்சர் உதயநிதி அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருப்பத்தூரில் புதர் மண்டி கிடப்பதாக வந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்தீர்களா என்று அந்த பகுதி பிடிஓ சோமதாஸிடம் கேட்டார். அதற்கு சோமதாஸ், நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது என்று பதில் சொன்னார். இது குறித்து சம்பந்தப்பட்ட […]
நிர்மலா சீதாராமனை வைச்சு சீரியஸ் கலாய் காமெடி… அன்னபூர்ணா ஹோட்டலுக்கு எப்போ ரெய்டு..?

சிரித்துக்கொண்டே ஊசியேற்றுவது போன்று நிர்மலா சீதாராமனை பாராட்டிக்கொண்டே இருந்த அன்னபூர்ணா குழும தலைவர் அடுத்தடுத்து சில நெத்தியடிக் கேள்விகளை எழுப்பியிருப்பது தேசிய அளவில் பெரும் கலாய் காமெடியாக மாறியிருக்கிறது. இதற்கு பா.ஜ.க.வினர் கடுமையான எதிர்வினை ஆற்றுகிறார்கள். எந்த நேரத்திலும் அன்னபூர்ணாவுக்கு இ.டி. அல்லது ஐ.டி. சோதனை நடத்துவதற்கு வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது. கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் அமைப்பினருடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அன்னபூர்ணா குழும தலைவர் சீனிவாசன், ‘’எங்களுக்கு ஒரே ஒரு […]
வெள்ள நிவாரண நிதி: ஆந்திராவுக்கு ரூ.4 கோடி! தெலுங்கானாவுக்கு ரூ.1கோடி!

நடிகரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன்கல்யாண், தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.1 கோடி கொடுத்துள்ளது அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், பலரின் வீடுகள், உடமைகள் சேதமடைந்துள்ளன. வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் நிவாரணநிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ஆந்திர முதலமைச்சராக இருக்கும் […]
மொத்தமாக சரண்டரான மகாவிஷ்ணு! என்ன செய்தார் தெரியுமா?

சென்னை அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் மாணவிகள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் சொற்பொழிவாற்றிய பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பேச்சாளர் மகாவிஷ்ணு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிறகு அவரது பெயர் மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு என்றானது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாகவே மகாவிஷ்ணு நிகழ்த்திய உரைகளை பலர் தங்களது வாட்ஸ் அப் ஸ்டேட்சில் வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். நான் இவரின் பின்தொடர்பவர் அல்ல என்றாலும் இவரின் சொற்பொழிவுகள் மனதை இலகுவாக்குகிறது […]
விஜய்க்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்! மாற்றத்திற்கு தயாராகும் தமிழகம்!

வருகிற அக்டோபர் மாதம் 2ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இம்மாநாட்டிற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஏனென்னறால் ஆளும் தி.மு.க. கூட்டணியில் இருந்து கொண்டே வெளிப்படையாக அ.தி.மு.க. அழைப்பு விடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தி.மு.க.வினர் கடும் கோபத்தில் உள்ளனர். அந்த கோபத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் மற்றொரு அரசியல் […]

