புதுச்சேரி சிறுமி கொலை: சிறையில் தற்கொலை செய்து கொண்ட குற்றவாளி!

புதுச்சேரியில் முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் சிறுமியின் வீட்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த 57 வயதான விவேகானந்தன் மற்றும் 19 வயதான கருணாஸ் என்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒன்றரை நாட்கள் கழித்து […]
விஜய்க்கு அடுத்தடுத்து கட்டம் கட்டப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்!

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு குறித்த அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டதை தொடர்ந்து அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. கட்சிக்கொடி குறித்த ரகசியத்தை வெளியிடுவேன் என்று ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில் முதல் மாநாட்டின் பொழுது கட்சியின் கொள்கை, கொடியின் விளக்கம், கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ளலாம் என்று ஆர்வமா ரசிகர்களும் தொண்டர்களும் காத்திருந்தனர். செப்டம்பர் 23ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல்மாநாட்டை நடத்துவதற்கான அனுமதி கோரி விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யிடம் […]
அடுத்த மாநாட்டுக்கு அமித் ஷா..? ஒரு சாண் வயித்துக்காக திருமா இப்படி பண்ணிப்புட்டாரே.

அடங்கமறு அத்துமீறு என்று வீராவேசம் பேசிய திருமாவளவன் பதிவை டெலிட் பண்ணிட்டு ஓடியது மட்டுமின்றி இன்று ஸ்டாலினை சந்தித்து மதுவிலக்கு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்ததும் சமூக வலைதளத்தில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறது. மதுவிலக்கு கொள்கைக்காக கூட்டணியில் விரிசல் வந்தாலும் பரவாயில்லை என்றெல்லாம் பேசிய திருமாவளவன் இன்று கமுக்கமாக அண்ணா அறிவாலயத்தில் காத்திருந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்துத் திரும்பிவிட்டார். இது குறித்து செய்தியாளர்களிடம், ‘’தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், அரசமைப்புச் சட்ட உறுப்பு எண் 47ன்-படி தேசிய […]
டெல்லியின் புதிய முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா..? சிண்டு முடியும் பா.ஜ.க.

டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் கோப்புகளில் கையெழுத்துப் போடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு போட்டிருப்பதால், புதிய முதல்வரை தேர்வு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் தன்னுடைய மனைவியை முன்னுறுத்த அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சி மேற்கொள்வது கட்சிக்குள் மோதலை உருவாக்கியுள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் இருந்துவந்தார். அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதும், […]
அன்னபூர்ணா ஸ்டைலில் ஸ்டாலினிடம் ஆஜரான திருமாவளவன். மூன்று நாளில் எட்டு பல்டிகள்.

மதுவிலக்கு மாநாட்டை கையில் எடுத்து நடத்துவதால் கூட்டணியில் விரிசல் வந்தாலும் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும் என்று வீராவேசமாகப் பேசிய திருமாவளவன், இன்று முதல்வரை அறிவாலயத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார். கள்ளக்குறிச்சியில் விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு, முதலமைச்சரை நேரில் சந்தித்து அழைத்திருக்கிறேன் என்று பல்டி அடித்திருப்பது சொந்தக் கட்சியினரையே திணறடித்துள்ளது. வரும் 2026 தேர்தலில் இரண்டு சீட்டாவது கூடுதலாக வாங்கிவிட வேண்டுமென்று ஸ்கெட்ச் போட்டு பேசினார் திருமாவளவன். அதற்காகவே மதுவிலக்கு மாநாட்டைக் கையில் எடுத்து அ.தி.மு.க.வும் விஜய் […]
வெக்கமா இல்லையா விஜய்..? ஓணம் வாழ்த்துக்கு ஓங்கி அடிக்கிறாங்க

மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துக்கள் என்று தமிழிலும் மலையாளத்தில் விஜய் போட்ட ஒரு வரி ட்வீட், அவரது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அலற விட்டுள்ளது. விஜய்க்கு எதிராக கம்பு சுத்தும் எதிர்க் கட்சியினரை சமாளிக்க முடியாமல் அவரது ரசிகர்கள் தலைகுனிந்து நிற்கிறார்கள். ‘’நீங்க தமிழகத்தில் கட்சி ஆரம்பிச்சுட்டு கேரளாவில் போய் தேர்தலில் நிற்கப் போறீங்களா..?’’ என்று நாகரிகமாக ஆரம்பித்து, ‘’வெக்கமா இல்லையா விஜய் உங்களுக்கு. தமிழ்மக்கள் கொண்டாடும் பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல […]
துரைமுருகனிடம் ஆஜராக திருமாவுக்கு சம்மன்..?

தி.மு.க.வில் சிறுத்தைகளுக்கு எதிராக போர்க்கொடி மதுவிலக்கு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்ததை அ.தி.மு.க.வினர் வரவேற்றது போன்று, ஆட்சியில் பங்கு கேட்பதையும் ஆதரிப்பார்கள், இதை வைத்து அணி மாறலாம் என்ற திருமாவளவன் திட்டம் பணால் ஆகிவிட்டது. கட்சிக்குள் பன்னீர், டி.டி.வி.க்கு அதிகாரம் கொடுக்க விரும்பாத எடப்பாடி பழனிசாமி, திருமாவுக்கு ஆட்சியில் பங்கு தரத் தயாராக இல்லை என்பதை ஜெயக்குமார் தெளிவாகவே விளக்கிவிட்டார். இதையடுத்து திருமாவளவன் பல்டி அடித்தாலும் தி.மு.க.வினர் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். திருமாவை வெளியேற்றுங்கள் என்று […]
ஸ்டாலினிடம் ஆட்சியில் பங்கு கேட்கும் திருமாவளவன்…? எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல யோகமடா

மதுவிலக்கு மாநாடு நடத்தி அ.தி.மு.க.வுக்கு அழைப்பு விடுத்து புதிய சர்ச்சை ஏற்படுத்தியிருக்கும் திருமாவளவன், ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி கூட்டணிக்கு அடுத்த அணுகுண்டு போட்டிருக்கிறார். இதுகுறித்து திருமாவளவன், ‘’ஆந்திராவில் நடப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, தனிப்பெரும்பான்மை இருந்த பொழுதிலும் பெருந்தன்மையாக கூட்டணி ஆட்சி நடத்துகிறார் சந்திரபாபு நாயுடு’’ என்பதுடன், ‘தேர்தல் அரசியலில் நுழைந்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி எழுப்பிய கோரிக்கை, ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு. கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம் எளிய மக்களுக்கும் […]
வாயைத் திறந்தாலே உருட்டு. மதுவந்தியை ஓவர்டேக் செய்யும் நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் 8000 கோடி மக்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி 5000 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார் என்று நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி தமிழகத்தில் பேசி அவமானப்பட்டார். அதை தூக்கி சாப்பிடும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முத்ரா லோன் பற்றி பேசியிருக்கிறார். கோவை அன்னபூர்ணா அதிபரை ஹோட்டல் அறைக்கு வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்த நிர்மலா சீதாராமன் விவகாரத்தை இந்திய அளவுக்கு பரபரப்பாக்கி விட்டார் ராகுல் காந்தி. இதையடுத்து நாடு முழுக்கவே நிர்மலா […]
அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்டாரா… கேட்க வைக்கப்பட்டாரா..? படுபாதாளம் நோக்கி பா.ஜ.க.

ஜி.எஸ்.டி. குறித்து நியாயமான கோரிக்கை வைத்த கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரை வரவழைத்து மன்னிப்பு கேட்கப்பட்ட விவகாரத்துக்கு ராகுல் காந்தி தொடங்கி லோக்கல் கொங்கு மக்கள் வரையிலும் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். அவர் பேசியது, மன்னிப்பு கேட்டது போன்றவை பெரிய விஷயமல்ல, மன்னிப்பு கேட்டதை வீடியோவாக வெளியிட்டு ஆணவத்தைக் காட்டியதே பெரும் பஞ்சாயத்தாக மாறியிருக்கிறது. கோவை எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு நெருக்கமான நபர் என்பதாலே அன்னபூர்ணா சீனிவாசனுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இன்று […]

