துணை முதல்வராக உதயநிதிக்கு பா.ஜ.க. ஆதரவு, வாரிசு அரசியல் எதிர்ப்பு அம்புட்டுத்தானா..?

தங்களுடைய சித்தாந்த எதிரி பா.ஜ.க.வினர் மட்டுமே என்று தி.மு.க. ஓங்கி அடித்துவருகிறது. அதேநேரம் பா.ஜ.க. தலைவர்களை அழைத்து விழா நடத்துவதும், அந்த தலைவர்கள் கருணாநிதி சமாதிக்கு வரும் கேலிக் கூத்துகளும் நடந்துவருகின்றன. இதன் உச்சகட்டத் திருப்பமாக உதயநிதிக்கு பா.ஜ.க. வரவேற்பு கொடுத்திருப்பது அத்தனை எதிர்க்கட்சியினரையும் அலற விட்டுள்ளது. பவளவிழா மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்திக் காட்டியிருக்கும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று மாநாட்டில் மூத்த தலைவர்கள் பலரும் பேசினார்கள். குறிப்பாக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் விருது […]
ஹைடெக் கருணாநிதியுடன் தி.மு.க. மாநாடு. 2026 தேர்தலை தொடங்கிய ஸ்டாலின்.

தி.மு.க.வின் தலைவர் கருணாநிதியை ஹைடெக் டெக்னாலஜியுடன் மேடைக்குக் கொண்டுவந்து, ‘என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே…’ என்று பேச வைத்ததும் ஒட்டுமொத்த அரங்கமும் அதிரும் அளவுக்கு கைதட்டல் கிடைத்திருக்கிறது. அதேபோல் தமிழகம் முழுக்க தி.மு.க,வினருக்கு இந்த விழா பெரும் உற்சாகம் அளித்திருக்கிறது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய ஏஐ தொழில்நுட்ப கருணாநிதி, “என் உயிரினிலும் மேலான அன்பு உடன்பிறப்புகளே, தந்தை பெரியார் வடித்த கொள்கையை, பேரறிஞர் அண்ணா வகுத்த பாதையை, என்னால் கட்டி காக்கப்பட்ட திடமான முழக்கத்தை ஓங்கி […]
பிறந்தது புரட்டாசி மாதம்! திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நற்செய்தி!

தினந்தோறும் ஏழுமலையானை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி செல்வது வழக்கம். காசுக்கடவுளான ஏழுமலையானை காண வரும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையும், அங்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டு குறித்த செய்தியுமே அக்கோவிலின் சிறப்பம்சங்களை விளக்கும். சாதாரண நாட்களிலேயே இப்படியென்றால், பெருமாளுக்கு விசேஷமான புரட்டாசி மாதம் என்றால் கேட்கவேண்டுமா? லடசக்கணக்கான பக்தர்கள், ஏழுமலையானின் தரிசனம் வேண்டி பல மணிநேரம் கால்கடுக்க காத்திருந்து குடும்பத்துடன் தரிசித்து மகிழ்வார்கள். அப்படிப்பட்ட பக்தர்களுக்கான செய்திதான்இது. திருப்பதிக்கு செல்வற்காக பல்வேறு […]
தேநீர், உணவு இடைவெளிகளில் உடலுறவு! ரஷியர்களுக்கு அதிபர் புதின் உத்தரவு!

பணியிடங்களில் உணவு மற்றும் தேநீர் இடைவெளிகளை உடலுறவுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரஷியா உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ரஷியாவின் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது ரஷியாவில் தற்போதுள்ள மக்கள் தொகை அப்படியே நிலைத்திருக்க வேண்டுமென்றால் ஒரு பெண்ணுக்கு 2.1 சதவீதம் என்ற அளவுக்கு குழந்தைகள் பிறக்க வேண்டும். ஆனால் அது தற்போது 1.5 சதவீதமாக குறைந்துள்ளது. […]
திராவிட சாயல் பூசிய விஜய்யின் கட்சி! தமிழிசை சவுந்தரராஜன் கடும் விமர்சனம்!

விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தை திராவிட சாயல் பூசிய கட்சி என்று பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், நடிகர் விஜய் கட்சித் தொடங்குவதற்கு முன்னதாகவே திராவிட சாயலில் பயணிப்பது போன்று தெரிகிறது. தமிழகத்திற்கு திராவிட சாயல் பூசிய மற்றொரு கட்சி தேவையில்லை. தேசிய சாயலில் மட்டுமே வேண்டும். இவற்றில் மாறுபட்டு விஜய் பயணிப்பார் என்று நினைத்தேன் என்று பேசியுள்ளார். தொடர்ந்து பேசிய […]
நடிகர் விஜய்யின் தரமான முதல் சம்பவம். அதிர்ச்சியில் திராவிடக் கட்சிகள்

அறிக்கைகள் மூலம் கட்சி நடத்திக்கொண்டிருக்கும் நடிகர் விஜய் எப்போது வெளியே வருவார் என்று பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், முதல் சம்பவமே அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் செய்து முடித்திருக்கிறார். பெரியார் திடலுக்கு விஜய் நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்தியிருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. ஏற்கெனவே பெரியார் பிறந்த நாளையொட்டி ஒரு செய்தி அனுப்பியிருந்தார். பெரியார் பாதையில் பயணிப்போம் என்று நேரடியாக தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் அதிர்ச்சி கொடுத்திருந்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து அனைவரும் வெளிவருவதற்குள் தந்தை பெரியாரின் […]
டெல்லி முதல்வராகிறார் அதிஷி… ஆம் ஆத்மி உடையாமல் காப்பாற்றுவாரா..?

கல்காஜி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி இப்போது டெல்லி முதல்வராகத் தேர்வு பெற்றுள்ளார். தற்போது கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் அதிகபட்சமாக 11 துறைகளை நிர்வகிக்கும் அதிஷி, கெஜ்ரிவால் நம்பிக்கைக்கு உரியவர். அதே நேரம் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து கட்சியை உடைக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வை தாக்குப்பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிஷி டெல்லியின் மூன்றாவது பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் ஷீல்லா தீக்ஷித், பாஜக சார்பில் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் முதல்வராகப் பொறுப்பு வகித்த […]
விஜய் மாநாட்டில் புதிய ட்விஸ்ட். சீமானுடன் நேரடி மோதல்..?

ஒரே நேரத்தில் பெரியார் பிறந்த நாளுக்கும் பிரதமர் நரேந்திரமோடிக்கும் கொடி பிடித்திருக்கும் விஜய்யின் அரசியல் பாதை புரியாத புதிராக மாறியிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே ஆக்டிவ் அரசியலில் விஜய் இறங்கிவிட்டார். ஆனாலும், விக்கிரவாண்டி மாநாடு தள்ளிப்போவது குறித்து அவரது ரசிகர்கள் கடுமையான வருத்தத்தில் இருக்கிறார்கள். வரும் அக்டோபர் 16ம் தேதி நாள் குறிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேநேரம், மாநாட்டுக்கு முன்னதாகவே மாவட்டச் செயலாளர்கள் பதவி நியமனம் நடக்கப் போவதாக செய்திகள் வெளியாகின்றன. விஜய் மாநாட்டில் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் […]
விஜய்யை தவறாய் வழி நடத்துவது யார்? திட்டமிட்டே செய்யப்படுகிறதா?

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எப்போது, எது குறித்து அறிக்கை விடுவார்? அவரை எப்படி கிண்டல் செய்யலாம் என்று திராவிட கட்சிகளின் ஐ.டி.விங் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீயாய் வேலை செய்து வருகிறது. சமீபகாலமாக அவர்களை ஏமாற்றாமல் தினம் ஒரு கண்டெண்ட்டை வாரி வழங்கி வருகிறார் விஜய். தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், விஜய் முகம் பொறித்த சட்டையை அணிவதில் மட்டுமே முனைப்பு காட்டுகிறாரே தவிர கட்சியின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் சொல்லிக் […]
ராகுல்காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு! அறிவித்தவர் யார் தெரியுமா?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசாக வழங்கப்படும் அறிவிப்பு வெளியாகியுள்ளது அரசியல் களத்தில் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அமெரிக்கா சென்ற ராகுல்காந்தி பேசும்போது, ‘‘இந்தியா அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் நாடாக இருக்குமானால் இங்கு இட ஒதுக்கீட்டை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி சிந்திக்கும் என்றும் 90 சதவீத மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கும் நாட்டில் இருப்பதற்கு எனக்கு விருப்பமில்லை என்று பேசினார். […]

