News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இபிஎஸ் 20 பியூஸ் 40. முதல் மீட்டிங்கில் பன்னீருக்கு முடிவுரை..?

2026 தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து பியூஸ் கோயல் தலைமையில் கமலாலயத்தில் மையக்குழு கூட்டம் தொடங்கியது எஸ்.ஐ.ஆர். தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோவாவில் இருப்பதால், இக்கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த மீட்டிங்கை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை லீலா பேலஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல். கடந்த 2021 தேர்தலில் […]

 புதிய கெட்டப்பில் ஸ்டாலின் சீக்ரட் அட்டாக்..? வாக்காளர் பட்டியல் குளறுபடி.  

வாக்காளர் பட்டியல் நீக்கத்தில் ஏராளமான குளறுபடிகள் இருப்பது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட இருப்பது திமுகவுக்கு மேலும் சிக்கலாக மாறும் என்றே சொல்லப்படுகிறது. இதனை சரிக்கட்டுவதற்கு ஸ்டாலின் ரகசியப் பணிகளில் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் சில வாக்குச்சாவடிகளில் அசாதாரண முறையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், மாதவரத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் 58 வாக்காளர்கள் இறந்துவிட்டதாகக் கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதில் 49 பேர் 50 வயதுக்குட்பட்டவர்கள் […]

கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் செம ஸ்பீச்.  ஸ்டாலின் சகோதரர் அட்டாக்

காலம் காலம் காலமாக திமுகவிற்கு செல்லும் கிறிஸ்துவ வாக்குகள் இந்த முறை விஜய் அவர்கள் அறுவடை செய்ய தயாராக இருக்கின்றார். இதற்காக தொடர்ந்து பல்வேறு கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க இருக்கிறாராம். இன்றைய கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய விஜய், ‘’ஒரு தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒண்ணுதானே. பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் இப்படி எல்லா பண்டிகைகளையும் ஷேர் பண்ணிக்கொள்ளும் ஊர் தானே நம் ஊர். வாழ்க்கை முறை வழிபாட்டு முறை வேறென்றாலும் எல்லோரும் சகோதரர்கள் தான். அதனால் தான் […]

மோடியும் அமித்ஷாவும் வசூல் ராஜாக்கள்..? திமுகவுக்கு மூன்றாவது இடம்

நன்கொடை என்ற பெயரில் கட்சிக்கு நிதி வசூல் செய்வதில் மோடியும் அமித்ஷாவும் சூப்பர் ஸ்டார்க்ல் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபணம் செய்திருக்கிறார்கள். இந்த வசூல் வேட்டையில் திமுக மூன்றாவது இடத்தில் இருப்பது ஆச்சர்யப்படுத்துகிறது. கடந்த 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் முறை, அரசியல் கட்சிகளுக்கு ரகசியமாக நிதி வழங்க வழிவகை செய்தது. இதில் பெரும்பகுதி பாஜகவிற்கே கிடைத்தது. எனவே, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டாலும், காசோலைகள், டிமாண்ட் டிராஃப்ட் மற்றும் […]

கிறிஸ்தவர்கள் ஓட்டுக்கு ஸ்டாலின் செம பிளான். தேர்தல் விளையாட்டு  

வரும் 2026 தேர்தலில் கிறிஸ்தவ வாக்குகளில் பெரும்பான்மை ஜோசப் விஜய் தொடங்கியிருக்கும் தவெகவுக்குப் போகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதனை  மீண்டும் திமுகவுக்குக் கொண்டுவர ஸ்டாலின் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார். நெல்லையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய ஸ்டாலின், ‘’இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் ஒரு தாய் வீட்டுப் பிள்ளைகளாக வாழ வேண்டும். இது போன்ற விழாக்கள் அதற்கு துணை நிற்க வேண்டும். மதச்சார்பின்மை, மத நல்லிணக்கத்தை விரும்புவர்கள் உங்களுக்கு துணையாக எப்போதும் பாதுகாப்பாக இருப்போம். […]

விஜய் கட்சியில் வில்லங்க விளையாட்டு. பெற்றோர்களே ஜாக்கிரதை

அனைத்துக் கட்சியிலும் பாலியல் பொறுக்கிகள், ஊழல்வாதிகள் நிரம்பியிருப்பது சகஜம். ஆனால், விஜய் ரசிகர்களும் ரசிகைகளும் எல்லை மீறிய ஆர்வத்தில் இருப்பதும், அதை சில நிர்வாகிகள் பயன்படுத்திக் கொள்வதும் அதிகரித்துவருகிறது. அந்த வகையில் நடந்திருக்கிறது நாமக்கல் சம்பவம். நாமக்கல்  தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த செந்தில்நாதன். என்பவர், கூட்டப்பள்ளியில் வசிக்கும் மகளிரணி நிர்வாகி ஒருவரின் வீட்டிற்குள் இரவு நேரத்தில் உள்ளே சென்று கதவை பூட்டியிருக்கிறார். இதைக் கண்டு அதிர்ந்துபோன பெண் நிர்வாகியின் உறவினர்கள் வீட்டின் […]

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வேணும், இபிஎஸ் வேண்டாமா..? விஜய்க்கு எச்சரிக்கை

ஈரோடு கூட்டத்தை முடித்த கையோடு த.வெ.க வின் அடுத்த பிரமாண்ட பொதுக்கூட்டம் ஜனவரி 2026 முதல் வாரம் சேலத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமியின் கோட்டை என்பதால், செங்கோட்டையன் இங்கு திட்டமிட்டு அடுத்த கூட்டம் நடத்துகிறார் என்று குற்றச்சாட்டு வைக்கிறார்கள். இதையடுத்து விஜய் மீது அதிமுகவும் பாயத் தொடங்கிவிட்டது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘’ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனி அடையாளமும் கொள்கை தெளிவும் இருக்க வேண்டும். ஆனால், அந்த […]

1 கோடி வாக்காளர்கள் அவுட். நடுக்கத்தில் ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அதாவது மிகச்சரியாக 97,37,832 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டை விட கிட்டத்தட்ட 40% மக்கள் தொகை அதிகம் கொண்ட பீகார் மாநிலத்தில் மொத்தமே 65 லட்சம் வாக்காளர்கள் தான் நீக்கப்பட்டு இருந்தார்கள். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக  1 கோடி பேர் நீக்கம் என்பது திமுகவுக்கு மிகப்பெரும் சிக்கல் என்கிறார்கள். இது குறித்துப் பேசும் அரசியல் ஆர்வலர்கள், ‘’தமிழ்நாட்டில் […]

காந்தி திட்டத்துக்கு மூடு விழா..? காங்கிரஸ் போராட்டம் எடுபடுமா.?

காந்தியின் பெயரில் நடைபெற்றுவந்த 100 நாள் வேலைத் திட்டத்துக்கு புதிய பெயர் சூட்டி நாடாளுமன்றத்தில் மோடி அரசு நிறைவேற்றிவிட்டது. இதற்கு அதிமுக துணை போயிருக்கிறது. விவசாய சட்டம் போன்று இதனை வாபஸ் பெறுவதற்குப் போராடுவோம் என்று காங்கிரஸ் கொதிக்கிறது. ஆனால், எடுபடுமா என்பதுதான் விடை தெரியாத கேள்வி. காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2025 அவையின் மையப்பகுதிக்கு வந்து தாள்களைக் கிழித்து எறிந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் போராட்டங்களுக்கு இடையே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை […]

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா…. கூட்டணிக்குத் தயாராகிறாரா விஜய்..?

கொள்கைத் தலைவர்கள் பட்டியலில் இல்லாத அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை எல்லாம் ஈரோடு மீட்டிங்கில் விஜய் பேசியிருப்பது புதிய கூட்டணிக்கான அடித்தளம் என்கிறார்கள். ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலையில், விஜயமங்கலம் பகுதியில் உள்ள சரளையில் தவெக கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செங்கோட்டையன் செய்திருந்தார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 10 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தார் விஜய். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்திற்கு வந்தார். இந்த கூட்டத்தில் பேசிய விஜய், “செங்கோட்டையன் […]