ஸ்டாலின் பிறந்த நாள் கிஃப்ட்… புதிய கட்சி வரவு

இன்று 73வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன. அதேநேரம், இதுவரை அதிமுக கூட்டணியில் இருந்த எஸ்டிபிஐ திமுகவுக்கு வந்துள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. கடந்த முறை 3 தொகுதிகளில் போட்டியிட்ட ஐயூஎம்எல் தற்போது தமிழ்நாட்டில் 2 தொகுதிகளிலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளது. அதே போன்று மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி […]
பன்னீர் துரோகத்துக்கு யார் காரணம்..? எடப்பாடிக்குச் சிக்கல்

மூன்று முறை அதிமுக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த விவகாரம் அதிமுகவினரிடம் கடும் புயலை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய்யிடம் போய் சேர்ந்திருக்கலாம், சசிகலாவிடம் போயிருக்கலாம் என்றெல்லாம் புலம்புகிறார்கள். இந்த நிலையில் கேசி பழனிசாமி, ‘’பன்னீர் எங்க வேணாலும் போய் இருக்கலாம், ஆனால் திமுகவுக்கு போனது ஏத்துக்கவே முடியாது. ஆனா, இதுக்கு ஓபிஎஸ் மேல மட்டும் தப்பு சொல்ல முடியுமா ?? கட்சியில் தலைமைக்கு போட்டியா இருக்கார்ன்னு இவங்க அவரை வெளிய அனுப்பி 5 வருஷம் ஆச்சு, அந்த […]
விஜய்க்கு சங்கீதா இல்லேன்னா த்ரிஷா… கிளப்பியது நயினாரா சபரீசனா..?

நீண்ட காலமாக சங்கீதாவிடம் இருந்து பிரிந்து வாழ்கிறார் விஜய். இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்துவிட்டு, விஜய் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்கும் நேரத்தில் மட்டும் விவாகரத்து கேட்வது ஏன்? இதற்குப் பின்னே இருப்பது யார் என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றன. சமீபத்தில் நயினார் நாகேந்திரன், ‘முதலில் த்ரிஷாவிடம் இருந்து விஜய் வெளியே வரவேண்டும்’ என்று கூறியிருந்தது பெரும் சர்ச்சையானது. இதற்கு த்ரிஷா பக்கமிருந்து எதிர்ப்பு வந்தது. இந்நிலையில் பாஜகவினர், ‘’நடிகர் விஜய் நல்ல அரசியல் தலைவராக […]
அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு உடல்… கண்ணீர் மரியாதை

அரசியல்வாதிகள் என்றால் அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு மட்டுமே செல்வார்கள். உடல் நோய் என்றால் தனியார் மருத்துவமனையில் போய் படுத்துக்கொள்வார்கள். இவர்களில் விசித்திரமானவர் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு. அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோதெல்லாம் அவர் மருத்துவம் பார்த்துக்கொள்ள சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்குத்தான் சென்றார். ஒரு கட்டத்தில் அந்த ராஜீவ்காந்தி மருத்துவமனையுடன் ரெகுலர் நோயாளியாகவும் வேலை செய்யும் அனைவருக்கும் செல்லப்பிள்ளையாகியும் இருந்தார் நல்லகண்ணு. இன்று அதே மருத்துவமனையில் மருத்துவ பாடம் படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தானே பாடமாக நிரந்தரமாக […]
ஸ்டாலினை கட்டிப்பிடித்த பன்னீர்…. இபிஎஸ் ரூட் கிளியர்

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு உதாரணமாக இன்று அதிமுக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். அதோடு, ஜாதி ரீதியிலான மிக முக்கியமான தாக்குதலை எடப்பாடி பழனிச்சாமி மீது ஓ பன்னீர்செல்வம் மறைமுகமாக முன்வைத்துள்ளார் தென் மாவட்டங்களில் இருந்து யாரும் கட்சிப் பொறுப்புக்கு வந்து விடக்கூடாது என்று எடப்பாடி செயல்படுகிறார் என பகீர் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். ஸ்டாலினை கட்டிப்பிடித்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்திய பன்னீர் இன்று முதல் திமுகவின் உறுப்பினராக சேர்ந்துகொண்டார். இந்த விஷயத்தை திமுகவினர் […]
ரோட்டுக்கு வந்த அண்ணாமலை… சீட்டுக்கு துட்டு வாங்கினாரா..?

வரும் சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை எங்கே நிற்கப் போகிறார் என்பது பெரும் பரபரப்புப் பட்டிமன்றமாக இருந்துவந்தது. இப்போது அவர் எங்கேயும் நிற்கப் போவதில்லை என்கிறார்கள். தேர்தலில் சீட்டு வாங்கித்தருகிறேன் என்று அண்ணாமலை வசூல் செய்தார் என்று மேலிடத்துக்கு குற்றச்சாட்டு போனதே காரணம் என்கிறார்கள். இந்த காரணத்தாலே தேர்தல் பொறுப்புகளில் இருந்தும் அண்ணாமலை விலக்கி வைக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள். ஆனாலும், அவ்வப்போது பொதுக்கூட்டங்களில் பேசிக்கொண்டு இருக்கிறார். அதாவது தெருமுனைப் பேச்சுக்குப் போகும் அளவுக்கு இறங்கிவிட்டார் அண்ணாமலை. நேற்று கோவை மாவட்டம் […]
சசிகலா கூவத்தூர் வீடியோ ரிலீஸ்… கூட்டணிக்கு ராமதாஸ்..?

கடந்த தேர்தலில் அமைதி காத்த சசிகலா இந்த முறை பொங்கி எழுந்துவிட்டார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் திடீரென தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி புதிய கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். கட்சிக் கொடி அறிவிப்புக்கு ஒரு வாரம் கெடு வைத்திருக்கிறார். அதாவது ஒரு வாரத்துக்குள் எடப்பாடி, பாஜகவிடம் இருந்து சாதகமான அறிவிப்புகள் வரலாம் என்று நம்புகிறார். அப்படி வரவில்லை என்றால் அடுத்த வாரம் புதிய கட்சி அறிவிப்பை மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தி வெளியிட சசிகலா முடிவெடுத்திருக்கிறார். அதிமுக, […]
விஜய் அழைப்பு… மீண்டும் ஸ்டாலினுடன் காங்கிரஸ் மோதல்

காங்கிரஸ் கட்சித் தலைவர் வேணுகோபால் சமீபத்தில் சென்னைக்கு வந்து பேசிய பிறகும் திமுக கூட்டணி இன்னமும் தெளிவான முடிவுக்கு வரவில்லை என்பதையே காங்கிரஸ் கட்சி மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கொடுத்திருக்கும் பேட்டி காட்டுகிறது. அவரது பேட்டியில் திமுக இன்னும் எங்களை அழைக்கவில்லை. பேச்சுவார்த்தைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். எங்களது பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுக்கள் இன்னும் முடிவடையவில்லை, அது தொடரும். […]
சசியை இயக்குவது தாமரை..? கொந்தளிப்பில் டிடிவி தினகரன்

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி அரசியலுக்கு வந்திருக்கிறார் சசிகலா. இனிமேல் அதிமுகவில் சேர்க்க மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்ததால் புதுக் கட்சி தொடங்கும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்புக்குப் பின்னே பாஜக இருப்பது என்பதாலே டிடிவி தினகரன் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார். ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னிற்கு சசிகலா வந்து முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் நடந்த விழாவில் சசிகலா, ‘’ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இறந்தபோது, என்னை முதல்வர் பதவி ஏற்க […]
ஸ்டாலின் 5 ஆயிரத்துக்குப் போட்டியாக எடப்பாடி 10,000…?

மக்களுக்கு கோடை பரிசு 2 ஆயிரம் ரூபாயுடன் மூன்று மாத உரிமைத் தொகை 3 ஆயிரம் என மொத்தமாக 5000 ரூபாயைப் போட்டுவிட்டு, எளிதாக ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று கனவு கண்டார் ஸ்டாலின். அதை உடைத்துப் போடுவது போன்று எடப்பாடி பழனிசாமி இன்று 10000 ஆயிரம் ரூபாய் அறிவித்துவிட்டார். ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளையொட்டி சென்னையில் ஜெயலலிதா சிலைக்கு மாலை போட்டுவிட்டு புதிதாக ஐந்து தேர்தல் வாக்குறுதிகள் வெளியிட்டார். ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஆட்சியில், […]

