News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மிஸ்டர் ராமருக்கு மோடியின் மழை குளியல் ட்ரீட்மென்ட்

மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளில் ஏகப்பட்ட பாலங்கள், ஏர்போர்ட், அலுவலகங்கள், அண்டர்கிரவுண்ட் சப் வே கட்டி திறப்பு விழா நடத்தியிருக்கிறது. புதிதாகக் கட்டிய அத்தனை கட்டிடங்களும் மட்டரகமாக இருப்பதால், ஒரு மழைக்குக் கூட தாங்காமல் உடைந்து வழிகின்றன. ஒவ்வொரு கட்டுமானத்திலும் கமிஷன் புகுந்து விளையாடியிருப்பது தெரியவந்துள்ளது.  இதற்கெல்லாம் உச்சபட்டமாக, தேர்தல் சாதனையாக ஒவ்வொரு கூட்டத்திலும் மோடி பேசிய ராமர் கோயிலும் மட்டமாக கட்டப்பட்டிருக்கிறது என்பது தான் அதிர்ச்சிகரமான வேதனை. தேர்தலுக்குள் ராமர் கோயிலைத் திறக்க வேண்டும் […]

கள்ளச்சாராயத்தை திசை திருப்பும் ஆர்.எஸ்.பாரதியின் பிச்சை பேச்சு

தி.மு.க.வின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வாய்க்கொழுப்பு அதிகம் என்பது தெரிந்த சமாச்சாரம் தான். நாய்க்கறி உண்பவர்களே நாகலாந்து மக்கள்..!, ஆணாய் பிறந்து வீணாய் போனவர்கள் காங்கிரஸ்காரர்கள்..!, காமராஜர்க்கு கல்லறை கட்டியதே நாங்க தான்..!, தமிழக ஊடகத்துறையில் ரெட் லைட் பகுதிகளில் வேலை பார்க்கலாம் ..!, இன்று தமிழகத்தில் மருத்துவர்களா இருப்பவர்கள் திமுக போட்ட பிச்சையினால் தான்..! பட்டியலின மக்கள் நீதிபதிகளாக இருப்பது திராவிடம் போட்ட பிச்சை..! என்றெல்லாம் பேசி தி.மு.க.வுக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்தவர்.  அவர் மீண்டும், […]

கம்யூனிஸ்ட்களின் கள்ள மெளனம்

நாட்டில் எந்த ஒரு பிரச்னை என்றாலும், எத்தகைய பெரிய சக்தி என்றாலும் எதிர்த்துப் போராடும் போர்க்குணம் கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு காலத்தில் இருந்தது.. காசு, பணம் எதிர்பார்க்காமல் டீ குடித்துவிட்டு கட்சிக்கு கொடி கட்டும் தொழிலாளர்கள் இன்னமும் இருக்கிறார்கள். ஆனால், தலைவர்கள் தான் தங்கள் குணத்தை மாற்றிக்கொண்டார்கள். உண்டியல் குலுக்கி கட்சிக்கு நிதி சேகரிப்பதை அவமானமாகக் கருதி தி.மு.க.விடம் கோடிகளில் காசு வாங்கிக் கட்சியையும் கொள்கையையும் அடமானம் வைத்துவிட்டார்கள். அந்த விசுவாசம் காரணமாகவே கள்ளச்சாராயத்தில் 51 பேர் மரணம் […]

அந்தரத்தில் தொங்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி!

நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிப்போம் என்று சவால்விட்டது தான் மிச்சம். இந்தியா கூட்டணி முன்பு தாக்குபிடிக்க முடியாமல் வெறும் 293 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இருப்பினும் 3வதுமுறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது. பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சியை பிடிக்க சந்திரபாபு நாயுடுவின் தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சியே காரணம் என்பது […]

சிகரத்தை நோக்கி சீமானின் நாம் தமிழர்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் சேர்த்து 35,35,467 வாக்குகள் பெற்று 8.21% விழுக்காடு வாக்குகள் பெற்றுள்ளது ஒரு சாதனை என்றே கூற வேண்டும். ஏனென்றால் அவர்கள் வழக்கமாக வைத்திருந்த கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டு ஒலிவாங்கி சின்னம் புதிதாக கொடுக்கப்பட்டது. அதுவும் அதுவும் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டது.  அதோடு தேர்தலுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் நாம் தமிழரிடம் இல்லை. வேட்பாளர்கள் யார் என்ற அறிமுகம் கிடையாது. சீமான் […]

சாமானியருக்குக் கிடைத்த ஜனநாயக வெற்றி

சாமானியருக்குக் கிடைத்த ஜனநாயக வெற்றி இந்திய அரசியலில் அசைக்க முடியாத சக்தி என்று யாரும் இருக்க முடியாது என்பதை 2024 நாடாளுமன்றத் தேர்தல் அட்டகாசமாக எடுத்துக் காட்டியிருக்கிறது. 400 தொகுதிகளில் வெல்லப் போகிறோம் என்று தேர்தலுக்கு முன்னரே வெற்றிப் பேரணிக்கு அச்சாரம் போட்ட நரேந்திர மோடிக்கு கடிவாளம் போடப்பட்டிருக்கிறது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. மட்டுமின்றி நீதிமன்றம், தேர்தல் கமிஷன் என்று சகல துறைகளையும் கைகளில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்துப் போட்ட பிறகே தேர்தலை […]

ஒரு பிரதமர் கடவுள் ஆகிறார்

2014ம் ஆண்டு பாரதப் பிரதமராக நரேந்திர மோடி நிறுத்தப்பட்ட நேரத்தில், ‘நான் மக்கள் சேவகன். நான் மக்களுக்கு உழைக்கப் போகிறேன்’ என்று சொல்லி வாக்குகள் கேட்டார். மக்களும் அவரது பணிவைக் கண்டு வாக்களித்தார்கள். அடுத்து வந்த 2019 தேர்தலில், ‘என்னுடைய தலைமையில் இந்தியா முன்னேறிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவை வல்லரசாக்க எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள்’ என்று கேட்டார். மக்களும் அவரது தலமையை நம்பி வாக்குப் போட்டார்கள்.  கடந்த 10 ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி புரிந்துவிட்டு இப்போது […]

எதிர் குரலை ஒழிக்கலாமா?

எதிர் குரலை ஒழிக்கலாமா? அல்லது எதிர் குரலை ஒழிக்கலாமா? அல்லது எதிர் குரலை ஒழிக்கலாமா? அல்லது எதிர் குரலை ஒழிக்கலாமா? அல்லது எதிர் குரலை ஒழிக்கலாமா? அல்லது எதிர் குரலை ஒழிக்கலாமா? அல்லது எதிர் குரலை ஒழிக்கலாமா? அல்லது எதிர் குரலை ஒழிக்கலாமா? அல்லது எதிர் குரலை ஒழிக்கலாமா? அல்லது எதிர் குரலை ஒழிக்கலாமா? அல்லது எதிர் குரலை ஒழிக்கலாமா? அல்லது எதிர் குரலை ஒழிக்கலாமா? அல்லது எதிர் குரலை ஒழிக்கலாமா? அல்லது எதிர் குரலை ஒழிக்கலாமா? […]

பேய்க்கும் பேய்க்கும் சண்டை

ஏதோ ஓர் ஊரில் ஏதோ ஓர் இடத்தில் காவலருக்கும் போக்குவரத்துத் துறை ஊழியருக்கும் இடையில் சண்டை, பிரச்னை வருவது சகஜம். அப்படி ஒரு பிரச்னை எழுந்தால், அது அங்கேயே முடிந்து போயிருக்க வேண்டும். இரண்டு துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் அப்போதே இந்த விஷயத்துக்கு முடிவு கட்டியிருக்க வேண்டும். ஆனால், அந்த ஒரு சாதாரண விவகாரம் தமிழகம் முழுக்க பற்றி எரியும் அளவுக்குப் போயிருக்கிறது. இதனை தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறது அரசு. அந்த அளவுக்கு அரசுத் துறைக்குள் […]

நாக்கை அடக்குங்க மிஸ்டர் மோடி

கடந்த 10 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக வரும் ஆசையில் மிகத் தீவிரமாக தேர்தல் பரப்புரை செய்துவருகிறார்.  10 ஆண்டு காலத்தில் என்னவெல்லாம் சாதனைகள் செய்திருக்கிறது பா.ஜ.க. அரசு என்பதை எடுத்துச்சொல்ல முடியாமல் எதிர்க் கட்சிகள் மீது மதத் துவேச குற்றச்சாட்டுகள் வைப்பதையே தொடர்ந்து செய்துவருகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்து மக்களின் தாலியை பறித்துவிடும், உங்களிடம் இரண்டு எருமை இருந்தால் ஒன்றை பறித்துவிடும், உங்கள் […]