News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பயிற்சி முடித்த 3 பெண் அர்ச்சகர்கள்! நிதி உதவி அளித்து வாழ்த்திய அமைச்சர் உதயநிதி!

அர்ச்சகர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 3 பெண் அர்ச்சகர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஸ்மார்ட் போன் மற்றும் நிதி உதவித் தொகை வழங்கியுள்ளார். இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘’அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளினை நிரந்தரமாக நீக்கிய, நம் மாண்புமிகு முதலமைச்சரையே சேரும். சமூகத்தில் சரி பாதி இருக்கின்ற பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்க உத்தரவிட்டார். அதன்படி, ரஞ்சிதா, கிருஷ்ணவேணி, ரம்யா ஆகிய […]

8வது முறையாக ஆசியக் கோப்பை: இந்தியாவின் பெருமை பட்டியல் இதோ!

16வது ஆசியக் கோப்பையை நேற்று (செப்.17) இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தட்டிச் சென்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. அப்போது முதல் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்ததுதான். அதன் பின்னர் முகமது சிராஜ் தொடர்ந்து 6 விக்கெட்டுகளை மிகவும் குறுகிய இடைவெளியில் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார். அதே போல் ஹர்திக் […]

ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி! இலங்கை அணி டாஸ் வென்றது!

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் (ஆகஸ்ட்) 30ம் தேதி தொடங்கியது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்றின் முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் தோல்வியடைந்ததால் வெளியேற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இலங்கை, வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தது. ரன் ரேட் அடிப்படையில் […]

5 விருதுகளை தட்டிச் சென்ற விக்ரம் திரைப்படம்! சைமா விருதுகள் 2023

துபாயில் நடைபெற்ற சைமா 2023 விருது வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படத்துறை சார்பாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் அதிக விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.ஃ     கடந்த 2012ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வரும் சைமா விருதுகள் திரையுலகத்தினரின் பெரிய கனவு என்றே சொல வேண்டும். கடந்த ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற சைமா விருதுகள் வழங்கும் விழா  இந்த ஆண்டு துபாயில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.   […]

சென்னை ‘எக்ஸ்பிரஸ் அவென்யு’வில் குவியும் கிரிக்கெட் ரசிகர்கள்! ஏன் தெரியுமா?

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யுவில் இன்றும், நாளையும் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதால் அதை காண கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள். 13வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் மொத்தம் இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் நிலையில், தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள உலகக்கோப்பை தற்போது பல்வேறு நாடுகளில் தனது […]

முதல்வர் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்! வெளி வராத தகவல்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ள தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று தொடங்கியது. இதில் தி.மு.க. பொதுச் செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க.வினர் பங்கேற்றுள்ளனர். நாளை மறுநாள் (18ம் தேதி) நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், இன்றைய தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அரசியல் பிரமுகர்கள் மத்தியில் முக்கிய நிகழ்வாக […]