News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சென்னை அண்ணாசாலையில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி! அதிர்ச்சி பின்னணி!

தனக்கு வேலை ஒதுக்கப்படாததால் மனவிரக்தியடைந்த இளைஞர் ஒருவர் சென்னை அண்ணாசாலை தலைமை மின்வாரிய வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மின்வாரியத்தில் தற்காலிக பணியிடங்கள் நிரப்பும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்து இருந்தனர். தங்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைத்துவிடும் என்று காத்திருந்த போது, ஒரு சிலருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வேலை கிடைக்காதவர்கள் சென்னை கொளத்தூரில் உள்ள முதலமைச்சர் […]

4 மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் திடீர் ஆலோசனை! முக்கிய தகவல்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 4 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்றும் (செப்.21) மற்றும் நாளையும் (செப்.22) ஆகிய 2 நாட்களில் முதலமைச்சர் தலைமையில் சென்னை மண்டல கள ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் […]

தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

தமிழகம் முழுவதும் மொத்தம் 40 இடங்களுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.   தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கன்வேயர் பெல்ட் சப்ளை செய்து வரும் நிறுவனங்களுக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய மொத்தம் 40 இடங்களில் இன்று காலை முதலே வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.   இதற்கு முன்னர் சென்னை உள்பட பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய அதே இடங்களில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. […]

திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்நபன திருமஞ்சனம்! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 9 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பல்வேறு அலங்கார, ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இதனை காண ஒவ்வொரு நாளும் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்ப சுவாமி ஆகிய உற்சவ மூர்த்திகளின் சிறப்பு அலங்காரம் பக்தர்களை பரவசப்படுத்தியது. சுவாமிகளின் அலங்காரத்திற்கு தேவையான மாலைகள், கிரீடம் மற்றும் உலர் பழங்கள், சந்தனம், மஞ்சள், உலர்மலர்களால் செய்யப்பட்ட மாலைகளை […]

அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீட்டில் ரெய்டு! முக்கிய பின்னணி!

அமைச்சர் செந்தில்பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீட்டிற்குள் புகுந்த வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மேற்கொண்டதாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14ம்தேதி கைது செய்யப்பட்டார்.  அவரது கைது சட்டப்படியானது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் […]

பிரபல தயாரிப்பாளரை மணக்கும் திரிஷா! வெளிவந்த ரகசிய தகவல்கள்!

தமிழ் திரையுலகில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவரின் இளமை மாறாத தோற்றம் 40 வயதை தாண்டியும் இவரை கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இருக்க செய்துள்ளது. ஆரம்ப காலத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த திரிஷா இடையில் இருக்கும் இடமே தெரியாமல் இருந்தார். அதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தை தொடர்ந்து தற்போது கோலிவுட்டில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது நடிகை திரிஷா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜயுடன் […]

ரஜினிகாந்த் – பி.சி.சி.ஐ. செயலாளர் திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி இதோ!

உலகக்கோப்பை 2023ம் ஆண்டுக்கான கோல்டன் டிக்கெட்டை பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து வழங்கினார். 13வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடக்கிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரை காண கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். ஏற்கனவே 8வது முறையாக ஆசியக் கோப்பை தொடரின் […]

33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்! முக்கிய தகவல்கள்!

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் கூடியுள்ள சிறப்பு கூட்டத்தொடரில் தற்போது 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார். புதிய  நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று சிறப்புக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. அதன்படி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்க வழி வகை செய்யும் மசோதாவான இதற்கு ‘‘நாரிசக்தி வந்தன்’’ என்று பெயரிடப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் சட்ட மசோதா என்ற பெருமையை […]

புதிய கட்டிடத்தில் இன்று நாடாளுமன்ற கூட்டம்! இத்தனை தகவல்களா?

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடரின் அமர்வுகள் இன்று முதல் நடைபெற உள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று (செப்.18) சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இந்தியாவின் கடந்த 75 ஆண்டு கால ஜனநாயக வரலாறு குறித்து விவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று (செப்.19) முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் தங்கள் அலுவல்களை தொடங்கி செயல்பட ஆரம்பித்து இருக்கிறார்கள். புதிய நாடாளுமன்ற கூட்டத்தில் இன்று முதல் […]

பிரதான சாலைக்கு மாண்டலின் ஸ்ரீநிவாஸ் பெயர்! முதலமைச்சருக்கு நன்றி!

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் முதன்மைச் சாலை என்று பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மாண்டலின் ஸ்ரீநிவாசின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர். மாண்டலின் இசைக்கலைஞரான மாண்டலின் ஸ்ரீநிவாஸ், ஆந்திராவில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தின் பாலக்கோல் நகரில் பிறந்தார். இவரது தந்தையின் ஆசிரியரான ருத்ரராஜூ சுப்பாராஜூ மாண்டலின் ஸ்ரீநிவாசனுக்கு மாண்டலின் இசைக்கருவியை வாசிக்க பயிற்சி அளித்தார். 1969ம் ஆண்டு பிறந்த உலகப்புகழ் வாய்ந்த மாண்டலின் ஸ்ரீநிவாசன் 2014ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி உடல்நலக் […]