ஓடாதீங்க ஸ்டாலின்.. அதானி சந்திப்புக்குப் பதில் சொல்லுங்க.
தமிழக மக்கள் மனதில் அதானி குறித்து சில கேள்விகள் எழுகின்றன. அதாவது, சித்தரஞ்சன் சாலைக்கு வந்த அதானி முதலமைச்சரை சந்தித்தாரா? தமிழ்நாட்டில் அதானி செய்த 3000 கோடி ஊழல் புகாரில் எஃப்.ஐ.ஆர். போட முதலமைச்சர் அனுமதி கொடுப்பாரா? தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அதானி லஞ்சம் கொடுத்ததாக எழுந்துள்ள புகார் குறித்து முதலமைச்சர் விசாரணை நடத்துவாரா? இவ்வளவுதான். இதையே ராமதாஸ் கேள்வியாகக் கேட்டார். மீடியாவும் ஸ்டாலினிடம் கேட்டார்கள். இதற்கு துறை அமைச்சர் […]
திருமாவளவனின் விசுவாசத்துக்கும் தன்மானத்துக்கும் செம போட்டி
கொள்கை வீரர், லட்சியப் போராளி என்றெல்லாம் அரசியல் ஆசான் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரால் மேடைக்கு மேடை போற்றிப் புகழப்படும் திருமாவளவனின் கூட்டணிக் குழப்பம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. அவரது ஸ்டாலின் விசுவாசத்திற்கும் தன்மானத்திற்கும் இடையில் கட்சியின் மானமும் மதிப்பும் ஊஞ்சலாடுகிறது. நேற்று முளைத்த காளான் விஜய் கூட, நான் ஆட்சிக்கு வந்தால் எல்லோருக்கும் ஆட்சியில் பங்கு கொடுப்பேன் என்று அறிவித்து திருமாவளவனுக்கு வரவேற்பு கொடுக்கிறார். எடப்பாடி பழனிசாமியும், ‘நல்லவர்கள் பக்கம் திருமாவளவன் நிற்பார்’ என்று அவருக்காக […]
அரசியல் சாக்கடையில் தமிழன்னை
இந்தியாவை ஆளும் பா.ஜ.க.வுக்கும் தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வுக்கும் எதிராக ஏதேனும் பரபரப்பான அரசியல் சம்பவங்கள் நடைபெறும் நேரத்தில் எல்லாம், அதனை திசை திருப்புவது போன்று திராவிடத்தைக் கையில் எடுத்து கம்பு சுற்றத் தொடங்கிவிடுகிறார்கள். மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லாத திராவிடத்தில் தான் ஒட்டுமொத்த தமிழர்களின் மானமும் மரியாதையும் இருப்பது போன்று தி.மு.கவும், அதனை எதிர்ப்பது போன்று பா.ஜ.க.வும் பாவ்லா காட்டி மக்களை முட்டாளாக்கி வருகிறார்கள். கவர்னர் கலந்துகொண்ட விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்தில் ஒரே ஒரு வார்த்தை […]
றெக்கை கட்டி பறக்குறார் டிரம்ப்
கருத்துக் கணிப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்கவுள்ளார் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப். அவர் பெற்றுள்ள தேர்வாளர் குழு வாக்குகள் 294. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் 223 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளார் டிரம்ப் என்பது குறிப்பிட வேண்டிய ஒரு அம்சம். மோடியின் நண்பர் டொன்னால்ட் டரம்ப் வெற்றியை தங்களுடைய வெற்றியாக இந்தியர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதேநேரம், கிரீன் […]
ராஜாவுக்கு கூஜா எதுக்கு..? டபுள் ஆக்ட் வேண்டாம் விஜய்
சினிமாவில் விஜய் டபுள் ஆக்ட் செய்தால் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று ஒரு கணக்கு இருக்கிறது. அதற்காகவே அவ்வப்போது டபுள் ஆக்ட் படம் கொடுப்பார். ஆனால், சமீபத்தில் அப்படி டபுள் ஆக்ட் கொடுத்த கோட் தோல்வியைத் தழுவியிருக்கிறது. சினிமாவைப் போலவே அரசியலிலும் டபுள் ஆக்ட் போடுகிறார் விஜய் என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருத்து சொல்கிறார்கள். திராவிடத்தைத் தூக்கிப் பிடிக்கும் மாடலும் தமிழ்த்தேசியத்தைத் தூக்கிப் பிடிக்கும் மாடலும் தமிழகத்தில் சூப்பர் ஹிட் ஆக போய்க்கொண்டு இருக்கிறது. […]
சினிமாவுல நடிக்கப் போங்க ஸ்டாலின்.. சிவாஜியை மிஞ்சிடலாம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்று உரக்கக் குரல் கொடுத்து ஆட்சியைப் பிடித்தார் ஸ்டாலின். நீட் தேர்வை தடுத்து நிறுத்தும் ரகசியம் தெரியும் ஓட்டுப் போடுங்கள், சொல்கிறேன் என்றார் உதயநிதி ஸ்டாலின். இவற்றை எல்லாம் உண்மை என்று நம்பி மக்களும் ஓட்டுப் போட்டார்கள். ஆட்சிக்கு வந்ததும் தி.மு.க.வின் முகம் மாறிவிட்டது. நீட் தேர்வை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்போம் என்று உதயநிதி ஆதிகாலத்துப் பாட்டையே திருப்பிப் பாடினார். ஸ்டாலின் இன்னும் கொஞ்சம் உயரத்துக்குப் […]
என்னை விட்டுப் போகாதீங்க… கூட்டணிகளுக்கு பிரேக் போடும் ஸ்டாலின்
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற சித்தாந்தத்தை ஆளும் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒருபோதும் ஏற்றுக்கொண்டது இல்லை. போதிய எம்.எல்.ஏ.க்கள் கிடைக்காத நிலையிலும் மைனாரிட்டி அரசு நடத்திய கருணாநிதி காங்கிரஸ் கட்சியினருக்கு அமைச்சர் பதவியைக் கொடுக்கவில்லை. எனவே, ஆளும் கட்சியில் எம்.எல்.ஏ., எம்.பி. பதவி வாங்குவதே போதும் என்பதே தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடாக இருந்துவந்தது. இந்த நிலையில்தான் விடுதலைச் சிறுத்தைகள் முதன்முதலாக ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று கோஷம் எழுப்பினார்கள். ஆனால், தி.மு.க.வினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த […]
அண்ணன் சீமான் ஆசையில் மண்ணைப் போட்ட தம்பி விஜய்
என்னுடைய தம்பி என்று விஜய் மீது பாச மழை பொழிந்துவந்தார் நாம் தமிழர் சீமான். ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் தம்பிக்கு நான் பக்கபலமாக நிற்பேன், கூட்டணிக்கும் வாய்ப்பு உண்டு என்றெல்லாம் கூறிவந்தார். அதோடு விஜய் கட்சி குறித்து வெளிட்ட ஒவ்வொரு கடிதத்துக்கும் வாழ்த்து சொன்னது சீமான் மட்டுமே. விஜய் மாநாட்டுக்குக் கிளம்பிய காலை நேரத்தில் கூட, தம்பி விஜய்யின் மாநாடு வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று சொல்லி தன்னுடைய பெயரைக் குறிப்பிட்டு ஏதாவது பேசுவார் என்று ஆர்வத்துடன் காத்திருந்தார். […]
விஜய் கையில் பெரியாரின் கைத்தடி. ஸ்டாலினுக்கு அடி நிச்சயம்..?
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கூட கட்சி தொடங்கிய நேரத்தில் பெரியாரை கையில் எடுப்பதற்குப் பயந்தார். அதனால் தான், ‘அண்ணா என் வழிகாட்டி, காமராஜர் என் தலைவர்’ என்று மட்டும் கூறினார். பெரியாரை கையில் எடுத்தால் ஆன்மிக மக்களைக் கவர முடியாது என்றும் பெரியார் கொள்கை பேசும் தி.மு.க.வுடன் தேவையின்றி மோதவேண்டாம் என்றும் நினைத்தார். ஆனால், விஜய் தன்னுடைய முதல் வழிகாட்டி என்றே பெரியாரை கூட்டி வந்திருக்கிறார். ஒரு வகையில் தந்தை பெரியாரை இன்றைய இளம் தலைமுறையிடம் கொண்டுசென்று சேர்க்கும் […]
விஜய்க்கு பாசிசத்தை விட பாயாசமே முக்கியமா..?
விஜய் தன்னுடைய மாநாட்டில் இரண்டு எதிரிகள் என்று வெளிப்படையாக அறிவித்தார். ஒன்று வர்ணாசிரமத்துக்கு எதிராகப் பேசும் கட்சி. இரண்டாவது குடும்ப ஊழல் கட்சி என்று தெளிவாகக் குறிப்பிட்டார். அதன் பிறகு அவர், ‘அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் பாயாசமா ?’ என்ற கேள்வி கேட்டு ரசிகர்களை புல்லரிக்க வைத்தார். இதன் மூலம் அவரது நேரடி எதிரி ஸ்டாலின், உதயநிதி என்று அடையாளம் காட்டியதாக சிலிர்த்துக்கொள்கிறார்கள். திராவிடமும் தேசியமும் என்னுடைய இரண்டு கண்கள் என்று கூறிய விஜய் அடுத்தடுத்து […]