Share via:

வக்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பனையூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. .
இது குறித்துப் பேசும் தவெகவினர், ‘’இந்த சட்டம் இஸ்லாமியர்களின்
அடிப்படை உரிமைகளையும் , இந்திய இறையாண்மையையும் கேள்விக்குறியாக்குகிறது. சுருக்கமாக
அயோத்தி ராமர் கோவிலில் ஒரு இஸ்லாமியரை அர்ச்சராக பணியமர்த்த வேண்டும் என்று சொன்னால்
என்ன நடக்குமோ அது தான். இதை நாங்கள் ஏற்க மாட்டோம்.
இது சமூக நலத்திட்டங்களுக்காகவும் ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும்
எங்கள் இஸ்லாமிய மக்களின் முன்னோர்கள் தானமாக எழுதிவைத்த சொத்துக்கள். இதில் சட்டத்திருத்தம்
செய்வது அவர்களின் உரிமைகளை பறிக்கும் செயலாகும். எங்கள் தலைவர் இந்த போராட்டத்தில்
கலந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வமாகக் காத்திருக்கிறோம்’’ என்கிறார்கள்.
ஆனால், இந்த போராட்டத்தில் விஜய் கலந்துகொள்ளவில்லை என்பதுடன்
ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோரும் களத்துக்கு வரவில்லை என்பது சர்ச்சையாகியுள்ளது.
அதேநேரம், சினிமா பாணியில் அமித்ஷாவை தூக்கிப் போட்டு விஜய் பந்தாடுவது போன்று கிராபிக்ஸ்
காட்சிகளையும் சிலர் வெளியிட்டு வருகிறார்கள்.
இதுகுறித்துப் பேசும் சமூக ஆர்வலர்கள், ‘’விஜய் கட்சியினருக்கு
முன்கூட்டியே போராட்டத்துக்கு அனுமதி வாங்கவேண்டும், முறைப்படி நடத்த வேண்டும் என்பதெல்லாம்
புரியவில்லை. கொடியை தூக்கிக்கொண்டு போராட்டம் நடத்தினால் கைது செய்து உடனே விட்டுவிடுவார்கள்.
ஆனால், வழக்கு நடந்துகொண்டே இருக்கும். இந்த வழக்கு காரணமாக அவர்களுடைய எதிர்காலமே
பாதிக்கப்படலாம். ஆகவே, இளைஞர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்’’ என்கிறார்கள்.