News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பா.ஜ.க. அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் தேர்தல் பத்திர நன்கொடைக்காக் கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் வகையில் கடந்த 2018ம் ஆண்டு மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. இந்த திட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு நிதியும் கொடுக்க முடியும்.

அப்படி வழங்கப்படும் நிதி எவ்வளவு என்றும் எந்த நிறுவனம் வழங்கியது என்றும் தெரிவிக்கவில்லை என்று சட்டம் போடப்பட்டது. அதோடு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாகவும் இந்த தகவலை பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஒய்.சந்திரசூட் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணை நடத்தி இன்று தீர்ப்பு வழங்கியது.

அதன்படி, ’’கட்சிகளுக்கு எவ்வளவு நன்கொடை வழங்கப்படுகிறது என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக தகவல் அறியும் உரிமை மீறல் நியாயமானது அல்ல. எனவே, தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அரசியலமைப்புக்கு விரோதமானது என உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது. மேலும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்ஹ்டியா  2019 ஏப்ரல் 12 முதல் தேர்தல் பத்திரங்களை EC க்கு விற்றது யார், எந்த அரசியல் கட்சிக்காக வாங்கினார்கள் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிவிக்குமாறு கூறியுள்ளது. 13 மார்ச் 2024க்குள் EC இந்தத் தகவலை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளது.

அதோடு வங்கிகளால் இனி எந்தப் பத்திரங்களும் வழங்கப்படாது. இந்த வகையில் பா.ஜ.க பண வசூல் அதிகம் பெற்று முதலிடத்தில் உள்ளது. பா.ஜ.க.வுக்கு யாரெல்லாம் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்ற தகவல் வெளிவ்ருமா என்று பார்க்கலாம்.  

அதேநேரம்,  வங்கி அல்லது தேர்தல் கமிஷன் மூலம் இந்த தீர்ப்புக்கு தடை உத்தரவு வாங்குவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் மக்களுக்கு எப்போதும் போல் எந்தத் தகவலும் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதே உண்மை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link