Share via:

சீமான் வீட்டு காவலாளி அராஜகமாக கைது செய்யப்பட்ட நிகழ்வுக்கு
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கண்டனம்
தெரிவிப்பார்கள் என்று காத்திருந்த சீமான், அப்படி எதுவும் நடக்கவில்லை என்றதும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதனாலே, இன்று மாலை காவல் நிலையத்தில் ஆஜராக முடிவு எடுத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சீமான் மனைவி கயல்விழி செய்தியாளர்களிடம் இன்று,
‘சீமான் வீட்டில் இல்லாத நேரத்தில் சம்மன் ஒட்டப்பட்டது. அதில் என்ன இருக்கிறது என்பதைத்
தெரிந்துகொள்ளவே கிழிக்கச் சொன்னேன்’ என்று கூறினார். இதே விஷயத்தை சாட்டை முருகனும்
ஒரு வீடியோவாக வெளியிட்டார். அதில், சம்மனைப் படிக்க வேண்டும் என்பதற்காகவே கிழிக்கப்பட்டது,
கிழித்தால்தானே படிக்க முடியும்’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார், அதோடு காவல்துறை
சீமான் வீட்டில் இருந்த காவலாளியை, ‘நாடார் தானே நீ நாடார் தானே நீ’ என்று சொன்னதாக
ஒரு வீடியோ பதிவிட்ட துரைமுருகன் அதன் பிறகு அதை கிழித்திருக்கிறார்.
இதற்கு உடன்பிறப்புகள், வீட்டுக்கு வெளியே வந்து சம்மனை பார்க்க
முடியாதா அல்லது செல்போனில் போட்டோ எடுத்து படிக்க முடியாதா,இப்படி சுக்கல் சுக்கலாகக்
கிழித்துத் தான் படிப்பீர்களா என்று கிண்டல் செய்கிறார்கள்.
அதேநேரம் நடுநிலை ஆதரவாளர்கள், ‘’சம்மன் ஒட்டுவது மட்டுமே போலீஸ்
வேலை. அது கிழிக்கப்பட்டது குறித்து கவலைப்பட எதுவும் இல்லை. இதற்காக நடவடிக்கையை ஏற்கவே
முடியாது’’ என்று கொதிக்கிறார்கள்.
இந்த நிலையில் நாம் தமிழர்கள், ‘’யாருக்கு என்ன பிரச்னை என்றாலும்
அண்ணன் சீமான் குரல் கொடுத்தார். அவருக்கு ஒரு பிரச்னை வரும்போது யாருமே ஆதரவு தரலை.
ஆதராவாக இருப்பார்கள் என்று நினைத்தவர்கள் எல்லாம் அமைதியாக இருக்கிறார்கள். இவற்றைப்
பார்க்கையில் மாலையில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது’’ என்கிறார்கள்.
அதேநேரம் தி.மு.க.வினர், ‘’சீமான் மீதான விஜயலட்சுமியின் பாலியல்
சுரண்டல் வழக்கு என்பது பதிவு செய்யப்பட்ட 2011ம் ஆண்டே IPC 376 இன் கீழ் பதியப்பட்ட
பாலியல் வன்கொடுமை வழக்கு. பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் சீமான் மீது ஒரு வன்புணர்வு
வழக்கு நிலுவையில் இருக்கிறது என்ற விசயமே வெளியுலகுக்குத் தெரியவில்லை. அதிமுக சீமான்
மீது வலுவானதொரு வன்புணர்வு வழக்கையும் பதிவு செய்து ஆனால் அதில் நடவடிக்கை எடுக்காமல்
வெளியுலகுக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்வதன் மூலம் மிரட்டி அவனைத் தன்னுடைய அரசியல்
தந்திரங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.
விஜயலட்சுமியின் புகார் பற்றி வாயே திறக்காத எத்தனை பேர் இதன்
மீதான அரசின் சட்டநடவடிக்கைக்கு உள்நோக்கம் கற்பித்துக் கதையளக்கிறார்கள். இன்றும்
விஜயலட்சுமி இந்த குற்றம் குறித்து வெளிப்படையாக குற்றம் சுமத்துகிறார். ஆகவே, இன்று
ஆஜராகும் சீமானை கைது செய்ய வேண்டும். யார் அந்த சார் என்று கொதிப்பவர்கள், ஒரு கருக்கலைப்பு
குற்றவாளிக்கு ஆஜராகக்கூடாது’’ என்கிறார்கள்.
விஜயலட்சுமி விவகாரம் வில்லங்கமாகிறது.