News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பிரசாந்த் கிஷோரிடம் பணியாற்றிய சுனில் கனுகோலு அதன்பிறகும் நீண்ட காலம் தி.மு.க.வில் தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மீண்டும் பிரசாந்த் கிஷோர் தி.மு.க.வுக்கு பணியாற்றியதால், சுனில் அங்கிருந்து வெளியேறி எடப்பாடி பழனிசாமியிடம் சேர்ந்தார்.

ஆனால், அந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தோல்வி அடைந்த காரணத்தால் அவரை வெளியனுப்பிவிட்டனர். அதன்பிறகு காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசகராகப் போனார். கர்நாடகத் தேர்தலில் ஆலோசகராகப் பொறுப்பேற்றார். அந்த தேர்தலில் வெற்றி பெற்றதும் ஓரளவுக்கு சுனிலுக்கு மரியாதை கூடியது.

இதையடுத்து மத்தியபிரதேசம் தேர்தலுக்கு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார். கண்டிப்பாக வெற்றி நிச்சயம் என்று கருதப்பட்ட நிலையில், காங்கிரஸ் அங்கு படுதோல்வி தோல்வி அடைந்தது. ஆகவே, ராகுல் காந்தி சுனிலை வெளியே அனுப்பிவிட்டார். தற்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக ஆலோசகராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டுவிட்டார்.

இந்த நிலையில் மீண்டும் தி.மு.க.வில் சேர்வதற்கு ரத்திஷ் மூலம் முயற்சி செய்த சுனில் எப்படியோ உதயநிதியின் டீமில் நுழைந்து தேர்தல் பணியாற்றத் தொடங்கினார். ஆனால், இந்த விவகாரத்தில் மாப்பிள்ளை சபரீசனுக்கும் உதயநிதிக்கும் இடையில் பிரச்னை உருவானது.

சுனில் இருக்கும் இடம் நிச்சயம் உருப்படாது, சென்டிமென்டாக தோல்வி நிச்சயம் என்பதை சபரீசன் எடுத்துச்சொல்லவே, தி.மு.க.வில் இருந்து மீண்டும் சுனில் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ், தி.மு.க., அண்ணா தி.மு.க. என அத்தனை இடங்களிலிருந்தும் விரட்டப்பட்ட சுனில் இப்போது விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசகர் பணியில் சேர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

சிறுவர்கள், இளைஞர்கள், பெண்களிடம் நடிகர் விஜய்க்கு இருக்கும் மதிப்பும் மரியாதையையும் வைத்து நிச்சயம் அரசியலில் பெரிய ரவுண்ட் வர முடியும் என்று விஜய்க்கு பல்வேறு ஆலோசனைகள் எடுத்துச்சொல்லி வருகிறாராம்.

சுனில் வியூகத்தில் மாட்டிக்கொள்வாரா விஜய்.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link