Share via:
அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. எனவே இப்போது கூட்டணிக்கு எந்த
அவசரமும் இல்லை. ஜனவரியில் கூட்டணி முடிவை அறிவிப்போம் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு
செய்திருக்கிறார். அவருக்கு அடுத்த மாதத்திற்குள் கூட்டணி முடிவு அறிவிக்க வேண்டும்
இல்லையெனில் அணியில் இடமில்லை என்று டெல்லி திட்டவட்டமாக அறிவித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
ஒன்றுபட்ட வலிமையான கூட்டணியாக இருந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த
முடியும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. அதனாலே இப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக
சொல்லப்படுகிறது. அதனால் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி அறிவிக்கத் தயாராகிறார்
பிரேமலதா.
இது குறித்து பேசும் அதிமுகவினர், ‘’அதிமுக கட்சி கூட்டணியில்
தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் பாமக இரு கட்சிகளுககும் தன்னுடைய ராஜ்யசபா சீட் கொடுததும்
கூட 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு இரு கட்சிகளும் மாறிச் சென்றது அதிமுக
தொணடர்களிடையே மனச்சோர்வை தந்தது. அதேநேரம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேதிமுக அதிமுக
கூட்டணிக்கு வந்தது இரு கட்சி தொண்டர்களிடையே நல்ல பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுக – தேதிமுக கட்சி தலைவர்களிடையே
கம்யூனிகேசன் கேப் ஏற்பட்டு மனஸ்தாபமாக மாறியது. இதையடுத்து மாப்பிள்ளை டீம் பண பேர
விளையாட்டுகளைக் காட்டத் தொடங்கியிருக்கிறார். அதிமுக கூட்டணிக்கு செக் வைப்பதாக நினைத்து
நடத்தும் அரசியல் சதுரங்கத்தில் தேதிமுக கட்சி பலியாகிவிடக் கூடாது. அதிமுக கட்சி மற்றும்
தேதிமுக தொண்டர்களிடையே இயற்கையான கூட்டணி இருப்பது வெளிப்படையாக நூறு சதவீதம் உண்மை’
என்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் அமித்ஷாவும்
உஷ்ணமாகியிருக்கிறார். இப்போதே கூட்டணி முடிவு செய்யப்பட்டால் மட்டுமெ அனைத்துக் கட்சியினரும்
இணைந்து செயலாற்ற முடியும் என்ற எண்ணத்தில் தேமுதிகவுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.
பிரேமலதாவும் நிலவரத்தைப் புரிந்துகொண்டு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு
விடுத்திருக்கிறார்.
வரும் ஜூன் 11 – 14ம் தேதி வரை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற
உள்ளது. இம்மாத இறுதிக்குள் கூட்டணியை இறுதி செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான
நிலையில், இக்கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல். திமுகவின்
பணம் அல்லது அதிமுகவின் பலம் இவற்றில் எதனை தேர்வு செய்வார் என்பதைப் பார்க்கலாம்.