Share via:
0
Shares
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரான தொல்.திருமாளவன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொல்.திருமாவளவனுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அவரை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் வருகிற 30ம் தேதிவரை தொல்.திருமாவளவனை தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் யாரும் சந்திக்க முயற்சிக்க வேண்டாம் என்று கட்சியின் சார்பில் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tagged latest