Share via:
பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 பேருந்துகள் தீயில் கருகி சாம்பலான சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் வீரபத்ர நகரில் தனியார் பேருந்து பணிமனை இயங்கி வருகிறது. இங்கு இன்று திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி அருகருகே நின்று கொண்டிருந்த அடுத்தடுத்த பேருந்துகளில் பற்றி எரிந்தது. இதில் மொத்தம் 10 பேருந்துகள் தீயில் எரிந்து சாம்பலானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீ விபத்தால் அப்பகுதியே கரும்புகையுடன் காணப்பட்டதால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்துகளில் எரிபொருளும் சேர்ந்து இருப்பதால் தீயை அணைப்பது வீரர்களுக்கும் பெரும் சவாலாகவே அமைந்துள்ளது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புகை மூட்டத்தால் அக்கம் பக்கத்தினர் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.