News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவரது குடும்பத்தாருடன் மருத்துவர்கள் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

சென்னை நந்தனத்தின் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த 18ம் தேதி தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் சளி, இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சரியாக இருப்பதால் இன்னும் ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தே.மு.தி.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

இதைத்தொடர்ந்து நேற்று (நவ.29) மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணிநேரமாக சீராக  இல்லை. மேலும் நுரையீரலுக்கான சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். சிகிச்சை காரணமாக இன்னும் 2 வார காலத்திற்கு விஜயகாந்த் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதற்கிடையில் விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தலைவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட தகவல் வழக்கமான ஒன்றுதான். இதில் பதற்றம் அடையவோ, பயப்படவோ ஒன்றும் கிடையாது. கேப்டன் நல்ல ஆரோக்கியத்துடன்தான் இருக்கிறார். நான் கேப்டன் அருகில் இருந்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் நல்லபடியாக பார்த்து வருகிறேன். பூரண நலம் பெற்று கேப்டன் விரைவில் வீடு திரும்பி நிச்சயமாக உங்களை சந்திப்பார்’’ என்று தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் விஜயகாந்தின் உடல் நிலையில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மருத்துவர்கள் அவரது குடும்பத்தினருடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜயகாந்த் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுவதாகவும், கூடுதல் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு அவரது உடல்நிலை மருத்துவர்கள் குழுவால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவிக்கிறது. விஜயகாந்தின் உடல்நிலை குறித்து மாறி மாறி அறிக்கை வெளியாவதால் கலக்கம் அடைந்துள்ள ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link