Share via:
நாங்கள் ஆட்சிக்கு
வந்தால் கருப்புப் பணத்தைக் கொண்டுவந்து ஆளுக்கு 15 லட்சம் பிரித்துக்கொடுப்போம் என்று
கூறினார் மோடி. அது நடக்கவில்லை. பண மதிப்பிழப்பு நேரத்தில் இந்த சட்டம் தவறு என்று
தெரியவந்தால் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் என்றார். மக்கள் அவதிப்பட்டார்களே
தவிர கருப்புப் பணமும் தீவிரவாதச் செயலும் குறையவில்லை. இப்படி மோடி தொடர்ந்து பொய்
வாக்குறுதிகள் கொடுத்துவருவதால் அவர் பேசுவதை எல்லாம் வடை சுடுவதாகவே சொல்கிறார்கள்.
இந்த நிலையில் ஜார்கண்ட்
சட்டசபைத் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், ‘’ஹவாய் செருப்பு அணிந்த சாதாரண குடிமகனும்
விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதே தனது கனவு’’ என்று ஏழைகளுக்கு ஆசை காட்டியிருக்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி.
ஏர் இந்தியா என்கிற
விமானச் சேவையை டாடா குழுமத்திடம் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டது மோடி அரசு.
இப்போது இந்திய அரசுக்கு என்று ஒரு விமானம்
கூட கிடையாது. விமான சேவையை முழுக்க முழுக்க தனியாரிடம் ஓப்படைத்த பிறகு, விமானக் கட்டணத்தை
மோடியால் எந்த வகையிலும் கட்டுப்படுத்தவே முடியாது. இதெல்லாம் பிரதமருக்கு நன்றாகத்
தெரிந்தும் தைரியமாக ஏழைகளுக்கு விமானப்பயணம் என்று ஆசை காட்டுகிறார் மோடி.
மோடியின் வடைகளை
எல்லாம் உண்மை என்று நம்பியே வட மாநிலத்தவர்கள் இன்று வரை ஓட்டு போட்டு வருகிறார்கள்.
இந்த வடையும் ஓட்டாக மாறுமா என்று பார்க்கலாம்.