News

மோடியை வரவேற்பாரா செங்கோட்டையன்..? எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி

Follow Us

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (டிசம்பர் 25) உலகம் முழுவதும் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வீடுகள், தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். 

 

இதை தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி சென்னையில் இன்றிரவு முதல் நாளை வரை 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ்  கொண்டாட சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன . சென்னையில் 350 தேவாலயங்களில் சுழற்சி முறையில் போலீசார் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .  

 

 இதைத் தொடர்ந்து தேவாலயங்களில் இன்று இரவில் இருந்து  கிறிஸ்துமஸ்  ஆராதனை தொடங்குவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

 

மேலும்  சென்னை மெரினா , சாந்தோம் பெசன்ட் நகர் , உள்ளிட்ட கடற்கரைகளுக்கு  செல்லும் மக்கள் கடலில் இறங்காதவாறு கண்காணிக்கப்பட உள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசிடிவி கேமரா, டிரோன் மூலம் கண்காணிக்கபடுகிறது. சென்னையில்  முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையிலும் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், பைக் ரேஸ், மது போதையில் வாகனங்கள் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link