Share via:
வெளிநாட்டுப் பெண் ஒருவர் காதலிப்பதாகச் சொன்னதை நம்பி 12.5
லட்சம் ரூபாய் ஏமாந்துபோயிருப்பதை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி. பிரபாகர்
தலைமையிலான சைபர் கிராம் போலீஸ் தகவல் கொடுத்து எச்சரிக்கை செய்திருக்கிறது.
வெளிநாட்டுப் பெண் அனுப்பிய நட்புக் கோரிக்கையை ஏற்று பழகி வந்திருக்கிறார்.
இணையத்தில் இவர்களுடைய காதல் எல்லையை மீறிப் போயிருக்கிறது. உனக்காக பரிசுகள் அனுப்புகிறேன்
என்று அவ்வப்போது வெளிநாட்டில் இருந்து சின்னச்சின்ன பரிசுகளை அனுப்பியிருக்கிறேன்.
வெளிநாட்டுப் பெண்ணின் காதல், அவ்வப்போது பரிசு என்று குஷியில் இருந்திருக்கிறார் கரூர்வாசி.
இந்த நிலையில் திடீரென ஒரு பெரிய பரிசு அனுப்பிவைத்திருப்பதாகவும்,
கஸ்டம்ஸ் செலுத்தி அதை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அதற்கு இவர்
சம்மதம் தெரிவித்திருக்கிறார். கஸ்டம்ஸ் அதிகாரிகள் அந்த பரிசுக்கு கட்டுவதற்கு அதிகப்படியான
பணம் கேட்கிறார்கள், ஆகவே, நான் நேரில் டெல்லி அல்லது மும்பை வந்து பிரச்னையை சரி செய்கிறேன்
என்று கூறியிருக்கிறார்.
அதையும் நம்பியிருக்கிறார். இதையடுத்து இந்தியாவுக்கு வந்துவிட்டதாகவும்,
12.50 லட்சம் ரூபாய் கட்டினால் மட்டுமே பொருளை கொடுக்க முடியும் என்கிறார்கள். இதன்
மதிப்பு 50 லட்சத்துக்கு மேல், இதை திருப்பி அனுப்பினால் வேஸ்ட் ஆகிவிடும் எனவே எப்படியாவது
பணத்தைக் கட்டுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார். இவரும் பணத்தைக் கட்டியிருக்கிறார்.
இதையடுத்து எனக்கு உடல் நலம் சரியில்லை மருத்துவமனையில் சேர வேண்டும், அதற்கும் பணம்
வேண்டும் என்று கேட்டு வாங்கியவர் அதன்பிறகு தொடர்புக்கு வரவே இல்லை.
அதன்பிறகே காவல் துறை உதவியை நாடினார். பணம் செலுத்திய கணக்குகள்
ஆய்வு செய்யப்பட்டன. அந்த பெண்ணுக்கு அனுப்பிய கணக்கில் இருந்து 21 வங்கி கணக்குக்கு
அந்த பணம் மாற்றப்பட்டு டெல்லியில் உள்ள பல்வேறு ஏடிஎம் மூலம் அந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது.
அந்த பெண்ணின் வங்கிக் கணக்கு முடக்கம் செய்யப்பட்ட பின்னரும் வெவ்வேறு வங்கிக் கணக்கிற்கு
பணம் அனுப்பச்சொல்லி பணத்தை ஏடிஎம் மூலம் எடுத்துள்ளனர்.
தொலைபேசி எண்களுக்கு பல்வேறு ஐ.எம்.ஜி.ஐ. நம்பர் பயன்படுத்தப்பட்டு
இருப்பதாலும் உடனுக்குடன் ஏடிஎம்மில் பணம் எடுத்துவிடுவதாலும் எதிரிகளை கண்டறிவதில்
சிரமம் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.
வெளிநாட்டுப் பெண், காதல், பரிசு என்று சொன்னால் ஏமாந்துடாதீங்க
மக்களே…